தேனி குஞ்சரம்மாளுக்கு இப்படியா நடந்தது? விஜயகாந்த் சொன்ன அந்த சாந்தி யாரு? உருகிய மீசை ராஜேந்திரன்
சென்னை: நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருபவர் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன்.. நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டதே அவர்தான் என்பதால் அந்த கட்டிடத்திற்கு அவருடைய பெயரை வைக்க சொல்லி கேட்டு வருகிறார். இந்நிலையில், மீசை ராஜேந்திரன் பகிர்ந்திருந்த ஒரு தகவல், தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்களிடம் மீண்டும் நெகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. அது என்ன?
நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராகவும் திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த்... யார் வந்து கேட்டாலும் உதவி செய்ய மறுக்காதவர்.. ஏழை மக்களின் கல்விக்காக அள்ளி அள்ளி தந்தவர் விஜயகாந்த்.. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் அனைவருக்கும் ஒரே சாப்பாடு என்ற புதுமையை புகுத்தியவரும் நடிகர் விஜயகாந்துதான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

படுத்த படுக்கையிலும் உதவி
அதுமட்டுமல்ல, கார்கில் நிவாரண நிதிக்கு ரூ5,00,000 வழங்கிய விஜயகாந்த், ஒவ்வொரு ஆண்டும் லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு ரூ25,000 நன்கொடை வழங்கியவர்..
நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்கள் கல்லூரியில் இணைவதற்கு உதவியாக, எந்தவொரு கட்டணமும் இன்றி தனது கல்லூரியில் சேர்த்துக்கொண்டுள்ளார். எத்தனையோ நபர்கள் சிகிச்சைக்கு பணமின்றி தவித்தபோதும் ஓடோடி சென்று உதவி, அவர்களின் உயிர்களை காப்பாற்றியவர்.
மீசை ராஜேந்திரன்
சமீபத்தில், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன், பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், பல நடிகர்களின் கண்ணீரை துடைத்து துயர் போக்கியவர் நடிகர் விஜயகாந்த் மட்டுமே என்று புகழாரம் சூட்டியிருந்தார். மீசை ராஜேந்திரனின் அந்த பேட்டியை தான் தேமுதிகவினர் மீண்டும் இணையத்தில் ஷேர் செய்து, வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து பேசிய அவர், "ஒரு முறை விஜயகாந்த் என்னிடம், இன்று உங்களுக்கு ஷூட்டிங் இருக்கா? என்று கேட்டார். அதற்கு நான், "இன்னைக்கு ஷூட்டிங் எதுவும் இல்லை" என்றேன். பிறகு, "தேனி குஞ்சரம்மாள் உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.. நானும், அவரை தெரியும் கேப்டன் என்றேன்..
பை நிறைய ரூபாய் நோட்டு
பிறகு ஒரு பை நிறைய 100 ரூபாய் நோட்டுகளை என்னிடம் தந்தார்.. அதில், 10000 ரூபாய் இருந்தது.. இவ்வளவு பணம் எதுக்கு கேப்டன் நான் எதுக்கு கேப்டன்? என்று கேட்டேன்.
அதற்கு கேப்டன், "தேனி குஞ்சரம்மாள் இறந்துவிட்டார்.. அவருடைய மகள் சாந்தி என்பவர், அடக்கம் செய்யக்கூட என்னிடம் காசு இல்லை, உதவி செய்யுங்கள் என்று கேட்டிருந்தார். நீ உடனடியாக இந்த பணத்தை எடுத்துக்கொண்டு போய், சாந்தி யார் என்று கேட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் இந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, இரங்கலையும் தெரிவித்துவிட்டு வந்துவிடு.. ஆனால், இந்த உதவியை செய்தது வெளியில் யாருக்கும் தெரியவே கூடாது.. கவனமாக பார்த்துக்கோ..
வெளியே தெரியவேண்டாம்
பணத்தை தேனி குஞ்சரம்மாள் மகள் சாந்தியிடம் கொடுக்கும்போது வேறு ஏதாவது உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேட்க சொல்லு" என்று சொன்னார்.. கேப்டன் இப்படி சொன்னதுமே எனக்கு ஆச்சரியம் கொடுத்தது, "உதவி செய்தது வெளியே தெரியவேண்டாம்" என்றது தான்.
கேப்டனை போல, அந்த மாதிரி சொன்ன ஒரு மனிதரை நான் சினிமாவில்கூட பார்க்கவில்லை, அரசியலிலும் பார்க்கவில்லை.. இப்படி சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கும் சரி, சினிமா துறையை சாராதவர்களுக்கும் சரி, உதவி என்று கேட்டால் இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்தவரை உதவிகளை செய்தவர் விஜயகாந்த்" என்று மீசை ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications