3 மகிழ்ச்சி.. கணவருடன் பகிர்ந்த சாயா சிங்.. சந்தோஷத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்த சாயாசிங் தன்னுடைய கணவரான நடிகர் கிருஷ்ணாவோடு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்கள் பெற்று வருகிறது.
திரைத்துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் ஒரு சிலர் மட்டும் தான் நீண்ட நாட்களாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு சில திருமணமான சில வருடங்களில் பிரிந்து போய் விடுகிறார்கள். ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணமான நடிகை சாயாசிங் அவருடைய கணவரான நடிகர் கிருஷ்ணாவுடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டதும் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

நடிகை சாயா சிங் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், பெங்காலி என்று பல மொழிகளில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு தமிழில் பிரபலத்தை கொடுத்தது திருடா திருடி திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் வந்த மன்மத ராசா பாடலை யாரும் மறந்திருக்க முடியாது.
காய்ச்சல் நேரத்தில் கூட அந்த திரைப்படத்தில் பாடலுக்காக சாயா சிங்க் போட்ட குத்தாட்டம் இப்போதும் பலருடைய ஃபேவரிட். 90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் பாடல்களில் இந்த பாடலும் உண்டு. அந்த காலகட்டத்தில் மேடை நிகழ்ச்சிகளில் திருடா திருடி பாடலுக்கு டான்ஸ் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும்.

அதற்கு தனுஷ் மற்றும் சாயா சிங் இருவருடைய டான்ஸ் தான் காரணம். அதோடு சன் டிவியில் ஒளிபரப்பாக தெய்வமகள் சீரியலில் பிரகாஷாக நடித்த கிருஷ்ணாவை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது பிரகாஷ் கேரக்டர் தான்.
நடிகை சாயா சிங்கும் கிருஷ்ணாவும் கடந்த 2012 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் இருவருமே நடித்து வருகிறார்கள். சாயா சிங்குக்கு எதிர்பார்த்த அளவிற்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லை என்றதும் சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார்.

திருப்பாச்சி படத்தில் "கும்பிட போன தெய்வம்" பாடலுக்கு சாயா அருமையாக ஆடி இருப்பார். ஆனால் தனக்கு ஒரு பாடலுக்கு ஆடுவது விரும்பமில்லை, திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஆனாலும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இப்போது சன் டிவியில் பூவே உனக்காக சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் கெட்டி மேளம் என்று சீரியல் கதாநாயகி கமிட்டாகி இருக்கிறார். அதே நேரத்தில் கிருஷ்ணா நடித்து வந்த உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணாவிற்கு சன் டிவியில் புது சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெய்வமகள் சீரியல் போல இந்த சீரியலிலும் கிருஷ்ணாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் கேரக்டர் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக பொங்கல் வாழ்த்தையும் சேர்த்து இவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். இருவரும் இரண்டு சீரியல்களில் கமிட் ஆகி இருக்கிறார்கள். அதுபோல பொங்கலையும் சிறப்பாக கொண்டாடி ரசிகர்களிடம் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications