Thug life 2nd day box office: திரும்பும் பக்கமெல்லாம் நெகட்டிவ், ஆனாலும் 2வது நாளில் இத்தனை கோடி வசூலா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சிலம்பரசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி தான் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இரண்டு நாளில் இந்த திரைப்படம் செய்த வசூல் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகியிருக்கிறது.
தக் லைஃப் திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் இந்த திரைப்படத்தில் கமல், சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். அதுபோல மணிரத்தினம் பல வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் போன்ற பல நடிகர்களும் இந்த திரைப்படத்தில் இருக்கின்றனர்.

தக் லைஃப் திரைப்பட சிறப்பு
இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பாக ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுபோல படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீதர் பிரசாத் செய்திருக்கிறார். இதனால் இந்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த திரைப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களும் காத்திருந்தனர்.
தக் லைஃப் முதல் நாள் வசூல்
அதன்படி தக் லைஃப் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 25 கோடி முதல் 30 கோடி வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த படம் வெறும் 17 கோடி தான் வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது. அதுபோல தமிழ்நாட்டின் மட்டும் 15.5 கோடி வசூலித்த இந்த திரைப்படம் தெலுங்கில் 1.5 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுபோல இந்தியில் பல ப்ரொமோஷன்கள் செய்தும் அங்குதான் படுமோசமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. அதாவது வெறும் 10 லட்சம் தான் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
தக் லைஃப் இரண்டாவது நாள் வசூல்
இந்த திரைப்படத்திற்கு திரும்பிய பக்கம் எல்லாம் நெகட்டிவ் விமர்சனம் கிடைத்து கொண்டிருப்பதால் இரண்டாவது நாளில் அதிகமான தியேட்டரில் திரைப்படம் பார்க்க மக்கள் கூட்டம் இன்றி காற்று வாங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் குறைவாக இருந்தாலும் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நேற்று இரண்டாவது நாளில் 27 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 7. 50 கோடி வசூலித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கன்னட மொழி சர்ச்சை
இந்த படத்திற்கு அளவுக்கு அதிகமான நெகட்டிவ் மீம்ஸ்களும் பரவி வருகிறது. பெரிய எதிர்பார்ப்போடு இருந்த திரைப்படம் கடைசியில் கதையில் சொதப்பல்கள் இருந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுபோல சமீபத்தில் சில திரைப்படங்கள் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட போது இதுபோன்று ஏமாற்றத்தை கொடுத்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே கமல்ஹாசன் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தால் கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பிறகு இந்த திரைப்படம் வெளியிடுவோம் என்று கமல் சொல்லி இருந்தார்.

புரியாத கதை
ஆனால் படத்திற்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்களை பார்க்கும்போது அங்கு இந்த படம் வெளியாகுமா? என்பது சந்தேகம் தான். இந்த படத்தில் மணிரத்தினமும் கமலும் சொல்ல வந்த விஷயங்களை சொல்லாமல் சுற்றி வளைத்து அவர்கள் புரிந்து கொள்வது போலவே கதை சொல்லி விட்டதால் இந்த படம் ரசிகர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications