Titan: The OceanGate Disaster Review: டிடானிக் கப்பலை பார்க்க ஆழத்தில் சென்ற submarine! என்ன ஆனது?
2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு - OceanGate நிறுவனத்தின் "Titan" டிடானிக் கப்பலை பார்க்க கடலின் ஆழத்தில் சென்ற சிறிய சப்மரின் அப்போது ஏற்பட்ட பயங்கர விபத்து. இந்நிகழ்வை ஆழமாக ஆராயும் ஆவணப்படமாகவே Netflix இப்போது வெளியிட்டுள்ளது "Titan: The OceanGate Disaster", இயக்குனர் மார்க் மொன்ரோவின் திறமையான இயக்கத்தில்.

இந்த டாக்குமெண்டரியில் OceanGate நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட வளர்ச்சி, அதன் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷின் கனவுகள், Titan சப்மரின் உருவாக்கம், அதன் தொழில்நுட்ப குறைகள், மற்றும் பயணத்திற்கு முன்னோட்டமாக நடந்த விஷயங்களை தொகுத்து சொல்லப்படுகிறது. முக்கியமாக, இந்த பயணம் எவ்வாறு திட்டமிடப்பட்டது, அதன் பின் நடந்த விபத்து எப்படி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது என்பதையும் ஆழமாக காட்டுகிறது.
விசுவல்களும் உணர்வுகளும் பிணைந்த கதை
டாக்குமெண்டரியின் முதற்கட்டத்தில் Titan பயணத்தின் முக்கிய விபரங்கள், பயணிகள் - Billionaire ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானிய தொழிலதிபர் ஷஹஜாத் தவீத் மற்றும் அவரது மகன் சுலைமான், பிரஞ்ச் நீர்மூழ்கிக் கப்பல் வல்லுநர் பால்-ஹென்ரி நார்ஜொலே மற்றும் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பற்றிய தகவல்கள் உணர்ச்சிபூர்வமாக தரப்படுகின்றன.
கடலுக்கு பயணம் செய்த சப்மரின் தொடங்கியது, ஆனால் சில மணி நேரங்களில் அது தொடர்பை இழந்தது. பின்னர், அமெரிக்க கடற்படை, கனடிய ராணுவம், பிரத்தியேக ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து நடத்திய தேடுதல் நடவடிக்கைகள், மீட்பு முயற்சிகள் என எல்லாம் ஸ்பெஷல் விளக்கப்படங்களுடனும், நேரடி வீடியோக்களுடனும் காண்பிக்கப்படுகின்றன. காணாமல் போன பத்து மணி நேரத்துக்குள் நடைபெற்ற பரபரப்பான தேடல் இயக்கங்கள், மக்கள் மற்றும் மீட்பு குழுவின் உணர்ச்சி தழும்புகள் அனைத்தும் உணர்ச்சிகளை கிளப்புகின்றன.
தொழில்நுட்பத் தவறுகளும் விமர்சனங்களும்
OceanGate நிறுவனத்தின் பாதுகாப்பு முறை, சரியான சான்றிதழ் இல்லாமல் பயணிகளை கடலின் ஆழத்திற்கு அழைத்தது போன்ற பல கேள்விகள் இந்த டாக்குமெண்டரியில் எழுப்பப்படுகின்றன. முன்னாள் ஊழியர்களின் சாட்சியங்கள், விஞ்ஞானிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் விமர்சனங்கள் அனைத்தும் Titan-இன் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப மீளாய்வை வெளிக்கொணர்கின்றன. "Titan" ஒரு கண்டுபிடிப்பு முயற்சியாக இருந்தாலும், மனித உயிரை அபாயத்திற்கு உள்ளாக்கியதாகவும் சிலர் கருதுகின்றனர்.
தோல்வியின் பின்னும் கேள்விகள்
இந்த ஆவணப்படம் ஒரு மரண விபத்தைக் காட்டுவதற்காக மட்டுமல்ல, ஒரு கனவின் வீழ்ச்சி மற்றும் அதன் தாக்கங்களை எடுத்துக்காட்டுகிறது. இது பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் - நவீன தொழில்நுட்பத்தின் எல்லைகள் எங்கே முடிகின்றன? மனிதர் அடைய விரும்பும் உச்சங்கள் எப்போது அவனையே விழுங்குகின்றன?
Titan: The OceanGate Disaster என்பது சோகத்தை மையமாக கொண்ட, ஆனாலும் அவசியமாக பார்க்க வேண்டிய ஒரு ஆவணப்படம். அது வெறும் ஒரு விபத்து பற்றியது அல்ல - தொழில்நுட்பம், ஆசை, அபாயம் மற்றும் மனத்தாங்கல் ஆகியவற்றின் கலவையாகும். Netflix இன் இந்த தயாரிப்பு, மரணத்தை மட்டும் அல்லாது, அதனைச் சுற்றியுள்ள உணர்வுகளை, குழப்பங்களை, கேள்விகளை உணர்த்துகிறது.
- குரு கிருஷ்ணன்
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications