Web Series: சின்ன நாட் பிடிச்சு.. டப்புன்னு ஷூட்டிங்கை முடிச்சு.. டாப்லெஸ் வெப் சீரிஸ்.. செம!
சென்னை: ஜீ5 சானலில் டாப்லெஸ் என்று சரியான டைட்டிலுடன் ஒரு சின்ன நாட் புடிச்சு வெப் சீரீஸ் ஒன்றை விட்டு இருக்கிறார்கள். பிப்ரவரி 11இல் வெளியான வெப் சீரீஸ் நல்லதொரு புது பார்வையுடன் தமிழுக்கு படைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு பெயின்டிங்.. அது பிரிட்டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்தபோது வரையப்பட்டது என்று கற்பனையில் பின்னப்பட்டு அதை வெப் சீரீஸாக்கி நன்றாகவே ஷூட் செய்து இருக்கிறார்கள்.
அப்போது அதாவது 1920 ம் காலக்கட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசர் ரிச்சர்டு பில்லெஸ்லே வரைந்த பெயிண்டிங்காம்... இதை காசாக்கத் துடிக்கிறது ஒரு குரூப். இதைத் தட்டிப் பறிக்க நினைக்கிறது இன்னொரு குரூப்.

பிரிட்டிஷ் கால பெயிண்டிங்
பிரிட்டிஷ் நம்மை ஆட்சி செய்தபோது அதாவது 1920ம் ஆண்டு ரிச்சர்டு பில்லெஸ்லே வரைந்த பெயின்டிங் ஒன்றை நம்ம பசங்க கண்டு பிடிச்சாங்க..அதோட விலை மதிப்பு பல லட்சம் இருக்கும்னு கண்டு பிடிச்சவங்க பேசிக்கறாங்க. அந்த பெயிண்டிங்கை எப்படியாவது கைப் பற்றி ஏலத்தில் நல்ல விலைக்கு விற்கணும்னு ஐடியா பண்றாங்க.

அது பெயிண்டிங் இல்லை
பெயிண்டிங்கை கண்டு பிடிச்ச குரூப் அதை கைப்பற்ற பல விதத்திலும் முயற்சி செய்துகொண்டே இருக்காங்க. ஆனால், முயற்சி ஒரு புறம், அது கிடைத்தால் உனக்கு எவ்ளோ, எனக்கு எவ்ளோன்னு கமிஷன் தொடர்பான விவாதங்கள் ஒரு பக்கம்னு டாப்லெஸ் சீரீஸின் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகுது. இதுத் தொடர்பா சண்டை போட்டுக்கறாங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்கறாங்க. பெயின்டிங் தொடர்பா ஒரு வெள்ளைக்கார பெண்மணி பேசும்போது அது வெறும் பெயின்டிங் இல்லை. அது இதுன்னு பில்டப் கொடுக்கிறாள்.

பிளாக் மார்க்கெட்
இந்த பெயிண்டிங்கை பிளாக் மார்க்கெட்டில் விற்றால் செம காசு கிடைக்கும்... அப்படி இப்படின்னு பல ஐடியாக்கள். ஆளாளுக்கு எல்லாரும் பேசிப் பேசி பெயின்டிங் ஆர்வத்தை தூன்டிக்கிட்டே இருக்காங்க. கண்டு பிடிச்சவங்க அதை பற்றி முழுசா தெரியாமல்தான் இருக்காங்கன்னு இதன் டிரெயிலரை பார்க்கும்போது தெரிகிறது.

போட்டு உடைக்கிறான்
சண்டை சச்சரவுகளை இடையிலும், அந்த பெயிண்டிங்கில் அப்படி என்னதாண்டா இருக்குது. அதை ஏன் நாம கண்டு பிடிக்கணும்னு டிரெயிலரில் கேட்கப்படும் கேள்விகள் போன்றே நமக்கும் கேள்விகள் வருது. பெயிண்டிங்கை தேடி கண்டு பிடிக்க பாடுபடும் போராட்டத்தில் கோபம் கொண்ட ஒருவன் அது மட்டும் கிடைச்சுது நானே கொளுத்திருவேன்னு சொல்றான். கடைசியாக திரையிட்டு மாட்டி இருந்த ஒரு பிரேமை அனைவரும் ஆவலோடு பார்க்க அவன் அந்த பிரேமின் திரையை நீக்குகிறான்
அதில் இருந்தது என்ன? அதை ஏன் அவன் போட்டு உடைக்கிறான்? இவன் தேவை இல்லாமல் ஏன் அந்த வெள்ளைக்கார பெண்ணை திட்டுகிறான்? ஜீ 5 டாப்லெஸ் வெப் சீரீஸ் பாருங்க.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications