ரசிகைக்கு உதட்டில் முத்தமிட்ட சர்ச்சை.. “உள்நோக்கத்தோடு கிளப்புறாங்க” நடந்தது? உதித் நாராயணன் விளக்கம்
சென்னை: பிரபல பாடகரான உதித் நாராயணன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் செல்ஃபி கேட்ட ரசிகை ஒருவருக்கு வலுக்கட்டாயமாக உதித் நாராயணன் முத்தம் கொடுத்துவிட்டார் என்று பரவி வந்த வீடியோவிற்கு உதித் நாராயணன் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிரபல பாடகரானா உதித் நாராயணன் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, நேபாளி, பெங்காலி என பலமொழிகளில் பாடல்கள் பாடி கொண்டிருக்கிறார். இவருக்கு உயரிய விருதுகளான பத்மபூஷன், லதா மங்கேஷ்வர் விருது, பத்மஸ்ரீ என பல விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

உதித் நாராயணன் தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் அச்சச்சோ புன்னகை, சோனியா சோனியா, காதல் பிசாசே போன்ற பாடல்கள் இவருடைய ஹிட் லிஸ்டில் எவர்கிரீனாக இருக்கிறது. இவரை பின்தொடர்ந்து விஜய் டிவியில் அஜய் கிருஷ்ணா பல பாடல்களை பாடி இருக்கிறார். உதித் நாராயணனின் வாய்ஸில் அப்படியே அஜய் கிருஷ்ணா பாடி இவரை மேலும் பிரபலமாக்கி இருக்கிறார்.
அதுபோல உதித் நாராயணனுக்கு தற்போது 70 வயதாகிறது. ஆனாலும் பாடல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் பாடகர் உதித் நாராயணன் நேரலை நிகழ்ச்சியில் ஒன்றில் பாடல் பாடி கொண்டிருக்கும் போது அதில் மகிழ்ந்து போன ரசிகை ஒருவர் செல்பி எடுக்க முன் வந்தார். அதை உதித் நாராயணன் அனுமதித்தார்.
இந்த நிலையில் செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்தப் பெண் உதித் நாராயணனை கன்னத்தில் முத்தமிட்டு இருக்கிறார். அப்போது அந்த பெண்ணிற்கு திருப்பி முத்தமிட உதித் முயன்ற போது அந்த பெண்ணின் உதட்டில் முத்தமிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண் ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்க, அதை பார்த்த அங்கிருந்த மக்கள் தங்களுடைய அதிர்ச்சியை ஓவென்று கத்தி வெளிகாட்டி இருந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் உதித் நாராயணனை கண்டித்தும், இந்த வயதிலும் இவர் இப்படி எல்லாம் செய்கிறாரே என்று அதிருப்தியை வெளிப்படுத்தியும் வருகிறார்கள். இது குறித்து உதித் நாராயணன் பேசும்போது, சிலர் இந்த வீடியோவை ஊக்குவித்து தங்களுடைய அன்பை காட்டுகிறார்கள்.

அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அங்கு என்னுடைய பாதுகாவலர்களும் இருந்தார்கள். இருப்பினும் ரசிகர்கள் அவர்களை நான் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருக்கிறார்கள். அதில் சிலர் அவர்களுடைய கைகளை குலுக்குவதற்காக நீட்டுகிறார்கள், சிலர் கைகளை முத்தமிடுகிறார்கள். இப்போது பரவி வரும் சர்ச்சை உள்நோக்கத்துடன் செய்யப்படுவதாக நினைக்கிறேன்.
எங்கள் குடும்பம் இந்த சர்ச்சையை உணர வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் மேடையில் பாடும் போது ஒரு விதமான வித்தியாசமான சூழ்நிலை நிலவும். ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
என்ன நடக்குது இங்க 🙄🙄
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) February 1, 2025
உதித் நாராயணன் 🙄🙄🙄 pic.twitter.com/XMy8JeiJ4u
அதோடு ரசிகையை முத்தமிட்டது குறித்து வெளியாகி வரும் சர்ச்சைக்கு அவர் பதில் அளிக்கையில், ரசிகைக்கு முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான தருணம். நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். என்னுடைய வணக்கம் ரசிகர்களை வலுக்கட்டாயமாக முத்தமிடும் பழக்கம் கிடையாது.
உண்மையில் ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழியும்போது நான் என்னுடைய கைகளை மடக்கி வைத்துக் கொள்கிறேன். மேடையில் இருக்கும் போது நான் அவர்களை கைகூப்பி வணங்குவேன் என்று உதித் நாராயணன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications