இவ்வளவு கேவலமாகவா பேசுவாங்க? வருத்தத்தில் நடிகர் வெற்றி வசந்த் மனைவி நடிகை வைஷ்ணவி.. குவியும் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வைஷ்ணவிக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்துக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் போட்ட போஸ்ட்க்கு சில நெட்டிசன்கள் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள். அது குறித்து வைஷ்ணவி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

பொதுவாக சின்னத்திரையில் ஒன்றாக நடிப்பவர்கள் ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையில் பயணித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சிறகடிக்க ஆசை சீரியல் முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வைஷ்ணவியும் ஒருவர்.

Siragadikka aasai serial vijay tv

காதல் அறிவிப்பு

இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்புதான் தங்களுடைய காதலை அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. பொன்னி சீரியலில் வைஷ்ணவிக்கு அண்ணனாக கெஸ்ட் கேரக்டரில் வெற்றி வசந்த் நடித்திருந்தார். அதற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுடைய காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததும் திருமணம் விமர்சனமாக நடைபெற்றது.

திருமணம்

இந்த திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களுடைய சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோல வைஷ்ணவிக்கு சில மாதங்களுக்கு முன்பு சூட்டிங் ஸ்பாட்டில் காலில் அடிபட்டு இருந்தது. அதனால் அவரால் ஒரு சில வாரங்கள் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருடைய காட்சிகள் இல்லாமலே சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் இப்போது அவர் மீண்டும் பழைய நிலைக்கு மாறி இருக்கிறார்.

மோசமான கமெண்ட்

ஆனாலும் கடந்த வாரத்தில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது வெற்றி வசந்த் மனைவிக்காக கசாயம் போட்டு கொடுத்திருக்கிறார். அதை வைஷ்ணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருந்தார். தன்னுடைய அம்மா போல தன் கணவர் தன்னை பார்த்து வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். அதை சிலர் பொறுத்துக் கொள்ள முடியாமல் இவர்கள் இருவரை பற்றியும் ஆபாசமாகவும், உருவ கேலி செய்தும் மோசமான கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

வைஷ்ணவியின் வருத்தம்

இதை வைஷ்ணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அடுத்தவர்களை வாழ்த்த மனதில்லை என்றாலும் சிலர் எதற்காக தான் இதுபோன்று அடுத்தவர்கள் மீது தங்களுடைய வன்மத்தை கொட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. அதில் அதிகமானோர் பேக் ஐடியில் வந்து தான் தங்களுடைய வக்கிரமான புத்தியை காட்டி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த பேக் ஐடியையும் வைஷ்ணவி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து

பிரபலங்கள் என்றால் அவர்களுக்கும் சந்தோஷங்கள் துக்கங்கள் இருக்கும் அவர்கள் அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது தவறான விஷயம் கிடையாது. அதை பார்க்க பிடித்து இருந்தால் பார்க்கலாம், இல்லை என்றால் அதை கடந்து போய்விடலாம். ஆனால் அதை பார்த்ததும் சிலர் ஆபாசமாக திட்டி வருவது பார்க்கும்போதே அருவருப்பாக இருக்கிறது. முகத்தை காட்டாமல் இது போன்ற கமெண்ட் போடுபவர்களுக்கு சரியான தண்டனைகள் கிடைக்க வேண்டும் என்பது பலருடைய குமுறல்களாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+