வள்ளியோட வெண்ணிலாதாங்க சூப்பரு... அவங்க கெட்டப் ரொம்ப ரொம்ப கலக்கலு...
சென்னை: சன் டிவியில் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வள்ளி சீரியல் 5 வருஷத்துக்கு மேல ஓடிக்கிட்டு இருக்கு. முதலில் பகலில் இருந்த இந்த சீரியலை கடந்த ரெண்டு வருஷத்துல இரவு நேரத்துக்கு மாத்திட்டாங்க.
வள்ளி, வெண்ணிலான்ற இரட்டை வேஷத்துல நடிகை வித்யா நல்லா நடிச்சு இருக்காங்க. ஆரம்பத்துல வள்ளி ஒரு நல்ல அடக்கமான பொண்ணு. போகப் போக நிர்வாகத்தை பார்த்துக்கற அளவுக்கு ப்ரில்லியன்ட் ஆகறாங்க.

கொஞ்ச நாளைக்கு பிறகு வெண்ணிலான்ற ஒரு கேரக்டரா வர்றாங்க.சும்மாவா, நடிப்புல நல்ல ஸ்கோர் பண்ற மாதிரியான கண் தெரியாத ரோல். அவன் இவன் படத்துல விஷால் டோரி கண் மாதிரி எப்படி வச்சு நடிச்சாரோ, அதே மாதிரி இவங்க கண்ணை ஒரு மாதிரி வச்சு ரொம்ப அருமையா நடிச்சாங்க.
இப்படி நடிக்கறதுல தலைவலி மண்டையை இடிக்கற மாதிரி இருக்குமாம். அதெல்லாம் பத்தி கவலைப்படாம நடிச்ச வெண்ணிலா, இப்போ கோயமுத்தூர் பையனா அதே பாஷை பேசி நடிக்கறாங்க.
குடும்பத்தை ஒண்ணு சேர்க்கணும்னு இப்படி பையனா மாறி நடிக்கறாங்க. சிங்கார வேலன்னு பேரு. இந்த கேரக்டர்லயும் நடிப்புல பின்றாங்க... தொழில்னு வந்துட்டா முழுமையா இறங்கி நம்மை அர்ப்பணிச்சுடணும்னு சொல்றதுக்கு வெண்ணிலா கேரக்டர் ஒரு உதாரணம்.

புதுசா நடிக்க வர்றவங்க.. இந்த சீரியலைப் பார்த்து வெண்ணிலா நடிப்புல நடிப்பு கத்துக்கலாம். கொடுத்த வேஷத்தை 100 சதவிகிதம் அர்ப்பணிப்போடு சரியா செய்தாலே நல்ல நடிகையாகிடலாம்.
இப்படிப்பட்ட நடிகைகளுக்கு சின்னத்திரை நல்ல வரவேற்பு கொடுக்கும்.நல்ல நடிகையா ஜொலிக்கும் இவருக்கு இனியும் நல்ல வாய்ப்புக்கள் வரட்டும்னு வாழ்த்துவோம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications