விஜய் - திரிஷா பற்றி ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்.. ஆரம்பத்தில் இருந்தே இதுதான் நடக்கிறது என விளக்கம்
சென்னை: தமிழ் சினிமாவிலும் அரசியல் வட்டாரத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வரும் விஜய் குறித்து, சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் - திரிஷா தொடர்பாக பரவி வரும் வதந்திகள், அதோடு விவாகரத்து விவகாரம் ஆகியவை பேசப்பட்டு வரும் நேரத்தில், இந்த சர்ச்சை குறித்து வனிதா ஓபனாக தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

வனிதா விஜயகுமார் பேட்டி
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் அதனாலேயே ஆரம்பத்திலேயே இவர் நடிக்க வந்துவிட்டார். அதிலும் விஜய்யுடன் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து இவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அந்த படத்தில் நடிக்கும் போது கிடைத்த அனுபவம் குறித்து வனிதா பேசும் போது, "நான் விஜய்யோட ஒரு படத்தில் நடித்திருக்கேன். அந்த சமயத்தில் எனக்கு கிடைத்த சம்பளத்தைவிட அவருக்கு கொஞ்சம் குறைவாக தான் சம்பளம் இருந்தது. இது அப்போ வெளியே தெரியாத விஷயம்... இப்போதான் சொல்லுறேன்," என்று கூறினார்.
மேலும் "அந்த நேரத்தில் எனக்கு ஃப்ளைட் டிக்கெட் போடுவாங்க. ஆனா விஜய்க்கு ட்ரெயின்ல தான் டிக்கெட்போடுங்கன்னு எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்வார். அது எதற்காக என்றால் அப்போதான் அவருக்கு கஷ்டம் என்னன்னு தெரிஞ்சா தான் வாழ்க்கை புரியும் என்பதற்காக இப்படி செய்வதாக சந்திரசேகர் சொல்லி இருக்கிறார்" என்றார்.
திரிஷா பற்றி விளக்கம்
திரிஷா குறித்து எழும் கேள்விகளுக்கும் வனிதா ஓபன் ஆக பதில் அளித்தார். "திரிஷா எல்லாருடனும் நல்ல பழக்கம் வைத்திருப்பவர். நாங்க ரொம்ப குளோஸ் இல்ல. ஆனாலும் நல்ல மரியாதை இருக்கு," என்று கூறினார்.
அதோடு, "நான் ஃபோன் பண்ணும்போது பிசியாக இருந்தா கூட, 'இப்போ பேச முடியாது, பிறகு பேசலாமா?'ன்னு மெசேஜ் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு மரியாதை இருக்கும்," அதுபோல திரிஷாவின் வாழ்க்கையைப் பற்றியும் எனக்கு தெரியும் அதையெல்லாம் இப்போ ஓபனா பேச முடியாது. அதற்கு நேரம் வரட்டும். ஆனால் என்ன நடந்தது என்று தெரியாமல் அடுத்தவர்களை பற்றி இஷ்டத்துக்கு பேசக்கூடாது என்று வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் ஜூலி தொடர்ந்து விஜய்யை டார்கெட் செய்து பேசி வருவது குறித்தும் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். அதாவது விஜய் பற்றி நான் வீடியோ போட தொடங்கிய பிறகு விஜய்யின் ரசிகர்கள் என்னை திட்டுகிறார்கள், அதற்கு காரணம் விஜய் தான் என்பது போல ஜூலி பேசியது தனக்கு வேடிக்கையாக இருப்பதாகவும், விஜய்க்கு வேற வேலையே இல்லையா? ஜுலி என்ன பேசுறாங்கன்னு பார்த்து அவங்கள திட்டுவதற்கு ஒவ்வொருத்தரிடமும் சொல்லிக்கிட்டு இருப்பாரா? சோசியல் மீடியாவில் முகமூடி போட்டு பலர் என்ன வேணாலும் பேசுறாங்க.. அவங்க எல்லாரும் விஜய் ரசிகர்களாக மாறிவிட முடியுமா என்றும் வனிதா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா












Click it and Unblock the Notifications