Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோவிகா பெயரில் விஜயகுமார் வர காரணம் இதுதான்! எந்த பெண்ணுக்கும் வரக்கூடாத கஷ்டம்! கதறி அழுத வனிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன்னுடைய மகள் ஜோவிகா பெயருக்கு பின்னால் தன்னுடைய அப்பாவின் பெயரான விஜயகுமார் பெயர் எதற்காக தான் பயன்படுத்தி வருகிறேன் என்று கண்கலங்க பேசி இருந்தார். ஜோவிகா குழந்தையாக இருக்கும்போது தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் வனிதா பேசி இருக்கிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் விஜயகுமாரின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். வனிதா ஆரம்பத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போயிருந்தார். நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை திறந்த புத்தகமாக மக்களுக்கு தெரியும். அடிக்கடி அவர் பற்றி ஏதாவது பிரச்சனைகள் கிளம்பி கொண்டே இருக்கிறது.

Vanitha Vijayakumar Jovika

விஜயகுமார் குடும்பம்

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் அதில் மூத்த மனைவிக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருக்கும்போது முதல் மனைவியோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது வனிதா தன்னுடைய மொத்த குடும்பத்தையும் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

வனிதாவின் மகள் ஜோவிகா

தன்னுடைய மகள் ஜோவிகாவுடன் தான் தனியாக இருக்கிறார். வனிதாவிற்கு ஏற்கனவே மூன்று திருமணம் முடிந்திருக்கிறது. அதில் முதல் கணவருக்கு பிறந்தவர் நகர் நடிகர் ஸ்ரீஹரி அவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக கமிட்டாகி இருக்கிறார். அவரும் இப்போது வனிதாவுடன் பேசுவதில்லை. வனிதாவின் இரண்டாவது மகள் ஜோவிகா மட்டும்தான் அவருடன் இருக்கிறார்.

வனிதா நடிக்கும் திரைப்படம்

மூன்றாவது மகளும் அவருடைய தந்தையுடன் இருக்கிறார். விடுமுறை நாட்களில் வனிதாவுடன் வசிக்கிறார். இந்த நிலையில் வனிதாவின் மகளான ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பிறகு இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற திரைப்படத்தில் வனிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

வனிதா பேட்டி

இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் பேசும்போது என்னுடைய மகள் ஜோதிகா பெயரில் விஜயகுமார் என்ற பெயரை நான் பயன்படுத்துவது குறித்து எல்லோரும் கமெண்ட் பண்றாங்க அதற்கு நான் விளக்கம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் என்னன்னா எனக்கு மூத்த மகன் ஸ்ரீஹரி இருப்பது எல்லோருக்கும் தெரியும். அவன் பிறந்து மூன்று வருடத்தில் என்னுடைய குடும்பத்தில் பிரச்சனை. அதற்குப் பிறகு நான் அப்போது இரண்டாவது திருமணம் செய்திருந்தேன்.

விஜயகுமார் பெயர் வைக்க காரணம்

அந்த நேரத்தில் ஜோவிகா என் வயிற்றில் குழந்தையாக இருக்கும்போது மீண்டும் பெரிய பிரச்சனை நடந்தது. அதனால் நான் எங்கோ போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் உடலளவிலும் மனதளவிலும் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்திருந்தார். அங்கு தான் நான் என்னுடைய அம்மா மற்றும் என் மகனுடன் இருந்தேன்.

வனிதா பட்ட கஷ்டம்

அமெரிக்காவில் வைத்து எனக்கு குழந்தை பிறந்தது. பொதுவாக குழந்தை பிறக்கும் சமயத்தில் எல்லா பெண்களுக்கும் அப்பா, அம்மாவை விடவும் அவருடைய கணவர் தான் கூட இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் எனக்கு அதுபோன்ற சூழ்நிலை நடக்கவில்லை. நான் பல சித்திரவதைகள் அனுபவித்தேன். மனதளவில் அதிகமான கஷ்டத்திலிருந்து உயிர் பிழைப்பேனா? இல்லையா? என்ற சூழ்நிலையில் இருக்கும்போது எனக்கு என் மகள் பிறந்தாள்.

மஞ்சுளா சொன்ன வார்த்தை

என் மகள் பிறந்ததும் பெயர் வைக்க வேண்டும் என்று அமெரிக்காவில் கேட்டபோது எனக்கு என்னையும் என் குழந்தையும் காப்பாற்றியது என்னுடைய அப்பா அதனால் என் அப்பாவின் பெயரை என் குழந்தைக்கு அப்பாவாக வைத்தேன். அந்த நேரத்தில் என்னுடைய அம்மா என்னை பார்த்து அழுது கொண்டு இருந்தாங்க. எந்த பெண்ணுக்கும் உன்னுடைய நிலைமை வரக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அன்புக்காக தான் ஏங்கினேன் ஆனால் எனக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றம் என்று கண் கலங்க அழுதபடி வனிதா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+