சர்ச்சையில் சிக்கி இருக்கும் வனிதா.. ஸ்ரீதேவி மற்றும் ப்ரீத்தா வெளியிட்ட பதிவு.. டிரெண்டாகும் போட்டோஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அவர் கதை எழுதி, இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோஷனில் வனிதா பேசியது ஒரு பக்கம் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இதனால் இளையராஜா பற்றி வனிதா ஆதங்கப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வனிதாவின் சகோதரிகளான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தான் கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். பிறகு சில வருடங்களில் அடுத்தடுத்த திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட பிறகு மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமாவை நோக்கி வந்திருந்தார். சமீப காலமாக அவர் துணை கதாபாத்திரத்திலும் வில்லி கேரக்டரிலும் நடித்து வந்த நிலையில் இப்போது தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Vanitha Vijayakumar Ilaiyaraaja Sridevi

இந்த திரைப்படம் கடந்த வாரத்தில் தான் வெளியானது. இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் தன்னுடைய குடும்பத்தை பற்றி பல பேட்டிகளில் பேசியிருந்தார். தன்னுடைய அப்பா மற்றும் சகோதரிகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். வனிதாவின் அப்பாவான நடிகர் விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர்.

அப்போது முதல் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மஞ்சுளா மற்றும் விஜயகுமார் தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். ஆனால் விஜயகுமாரின் இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளும் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தனர். மஞ்சுளாவின் இறப்பிற்கு பிறகு வனிதா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

Vanitha Vijayakumar Ilaiyaraaja Sridevi

தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் பேசவில்லை என்று பல பேட்டிகளில் ஆதங்கப்பட்டு வனிதா பேசியிருந்தார். இப்போது இளையராஜாவின் காப்பிரைட் சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று வனிதாவின் சகோதரியான பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி இருவரும் சோசியல் மீடியாவில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அதாவது ஸ்ரீதேவியின் ஒரே மகளுக்கு நேற்று பிறந்தநாளாம். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை ஸ்ரீதேவி பகிர்ந்து இருக்கிறார். அதேபோல ப்ரீத்தா இயக்குனர் ஹரியை திருமணம் செய்து இருக்கிறார். நேற்று ப்ரீத்தா மற்றும் ஹரியின் திருமண நாளாம் அதனால் திருமண நாள் புகைப்படங்களும் சோசியல் மீடியா பக்கங்களில் ட்ரெண்ட்டாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+