Jana nayagan Day 5 box office: விஜய்யின் ஜனநாயகன் 5வது நாள் வசூல் நிலவரம்.. திங்கள்கிழமை இவ்வளவு தானா?
சென்னை: விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு முழுமையாக செல்லும் முன்பு கடைசியாக நடித்த படம் என்பதாலேயே ஜனநாயகன் படத்தின் மீது எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்தது. ஆனால் படம் வெளியாகும் முன்பே சென்சார் பிரச்சனை, சோசியல் மீடியாவில் படம் லீக் ஆனது என ஒரு பிரச்சனை முடியும் முன்பு, இன்னொரு பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. ஆனாலும் இந்த படம் வெளியான பிறகு வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது 5 நாள் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
கடந்த 23ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானதும் முதல் நாள் பெரிய எதிர்பார்ப்போடு திருவிழா போல படம் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதற்கு பிறகும் இந்த படத்தின் காட்சிகள் பற்றி விவாதம் தான் சோசியல் மீடியாவில் இருந்து வந்தது. அதிலும் சனி ஞாயிறு வசூல் நிலவரத்தை சொல்லவே வேண்டாம். குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படத்தை பார்க்க தியேட்டருக்கு போயிருந்தனர். அதனாலேயே படம் 200 கோடி வசூல் தாண்டிவிட்டது.

ஜனநாயகன் 5வது நாள் வசூல் நிலவரம்
ஆனால் நேற்று திங்கள் கிழமை வேலை நாள் தொடங்கிய பிறகு வசூல் குறையுமா? அல்லது அதே லெவலில் இருக்குமா? என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதாவது ஜூலை 27 ஆம் தேதி திங்கட்கிழமை மட்டும் 10.15 கோடி இந்தியாவில் வசூலித்ததாக கூறப்படுகிறது. முதல் நான்கு நாளில் 233. 24 கோடிகள் வசூலித்த இந்த படம் நேற்று ஒரே நாளில் 10 கோடி மட்டுமே வசூலித்திருப்பது பெரிதாக பேசப்படுகிறது.

ஜனநாயகன் மொத்த வசூல்
ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்பதால் அதிகாரப்பூர்வமான தகவல்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனாலும் இந்த திடீர் சரிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. காரணம் நேற்று வேலை நாள் என்பதால் பொதுவாகவே எல்லா படத்திற்கும் வசூல் குறைவது நார்மல் தான். ஆனாலும் விஜய்யின் கடைசி படத்திற்கு இவ்வளவு குறைந்து விட்டதே என்று பலரும் பேசி வருகிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த வார இறுதியில் 300 கோடி கிளப்பில் ஜனநாயகன் படம் சேர்ந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்போது நிலைமையை பார்த்தால் அது நடக்குமா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
