Vijay Sethupathi: தன்மீது சொன்ன பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி ஆதங்கம்.. இது அசிங்கம்! சைபர் கிரைமில் புகார்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மீது சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி முதல் முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். டெக்கான் குரோனிக்கல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளதுடன், தனது குழு சைபர் கிரைமில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு பின்னணி
சமீபத்தில், 'X' (முன்பு ட்விட்டர்) பயனர் ஒருவர், நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகப் பதிவிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, விஜய் சேதுபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்தன. இது தொடர்பாக ரம்யா மோகன் என்ற பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு நன்கு அறிந்த பெண் ஒருவர் தனது ஆசைக்கு இணங்க கேரவனில் வைத்து ரூ.2 லட்சமும், பாலியல் விருப்பங்களுக்காக ரூ.50 ஆயிரமும் விஜய் சேதுபதி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கோலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு (சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா சிக்கியது) மற்றும் கேஸ்டிங் கவுச் என்று சொல்லப்படும் சினிமா வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இது வெறும் விளையாட்டல்ல. எனக்கு தெரிந்த நன்கு அறிந்த பெண் ஒருவர் இந்த சூழலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தற்போது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்தப் பெண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விஜய் சேதுபதி அவருக்கு ரூ.2 லட்சமும், பாலியல் ஆசைக்காக ரூ.50 ஆயிரமும் கொடுத்திருக்கிறார். ஆனால், இன்று நல்லவர் போன்று வேசம் போட்டுள்ளார். இப்படித்தான் அந்தப் பெண்ணைப் போன்று பலரது கதையும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இந்தப் பதிவை போட்டவர் உடனே அதனை நீக்கிவிட்டார். ஆனால், ரம்யா மோகன் அதனை தனது பக்கத்தில் விஜய் சேதுபதி இவ்வாறு செய்திருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார். மேலும், இது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்த உடனே ரம்யா மோகனை பலரும் விமர்சிக்க தொடங்கினர்.
விஜய் சேதுபதியின் அதிரடி மறுப்பு
"என்னைத் தூரத்திலிருந்து தெரிந்தவர்கள் கூட இதைக் கேட்டுச் சிரிப்பார்கள். எனக்கும் என்னைத் தெரியும். இதுபோன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் வருத்தமடைந்தனர். ஆனால் நான் அவர்களிடம், 'விடுங்கள். இந்தப் பெண் வெளிச்சம் பெறுவதற்காகவே இதைச் செய்கிறார். அவருக்குக் கிடைத்த சில நிமிடப் புகழை அவர் அனுபவிக்கட்டும்'," என்று விஜய் சேதுபதி தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சைபர் கிரைமில் புகார்
மேலும், "நாங்கள் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளோம். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் அனைத்து வகையான கிசுகிசுப் பிரச்சாரங்களையும் எதிர்கொண்டுள்ளேன். இதுபோன்ற இலக்கு வைத்த தாக்குதல்கள் இதுவரை என்னை பாதிக்கவில்லை. இனியும் பாதிக்காது," என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

விசாரணை
விஜய் சேதுபதியின் இந்த வெளிப்படையான பதில், அவருக்கு ஆதரவாகப் பலரையும் பேச வைத்துள்ளது. திரைத்துறையில் பிரபலங்கள் மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுப்பப்படும் நிலையில், விஜய் சேதுபதியின் இந்தத் தெளிவான நிலைப்பாடு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சைபர் கிரைமில் புகார் அளித்திருப்பது, சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுக அவர் தயாராக இருப்பதையும் காட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் வதந்திகளா அல்லது உண்மைக்குப் புறம்பானவையா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications