பிக்பாஸுகுள் எல்லை மீறும் போட்டியாளர்கள்! பலவீனமாக இருக்கும் விஜய் சேதுபதி! இதை மாற்றுங்க பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி இரண்டாவது ஆண்டாகத் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, சண்டை மற்றும் வன்முறை நிறைந்த ஆட்டத்தால் தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், வன்முறையில் ஈடுபடும் போட்டியாளர்களை அவர் கண்டிக்கத் தவறுவது, "சீரழிந்து வரும் இந்த நிகழ்ச்சியின் சுவரில் விழுந்த மிகப் பெரிய விரிசல்" என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

கமல்ஹாசன் vs விஜய் சேதுபதி

கமல்ஹாசனுக்குப் பிறகு, கடந்த இரண்டு சீசன்களாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசன் (சீசன் 8) வெற்றிகரமாக அமைந்தாலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 9, முழுக்க முழுக்க சத்தம் நிறைந்ததாகவும், சண்டை சச்சரவு நிறைந்ததாகவும் இருக்கிறது. போட்டியாளர்களின் இரட்டை அர்த்தமான பேச்சுகள் மற்றும் உள்ளே போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கே கடுப்பாக இருக்கிறது என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பலர் போர்கொடி தூக்கி இருக்கிறார்கள். இதற்கு முன்பு கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது ஏழாவது சீசனில் இப்படித்தான் விமர்சனங்கள் வந்தது ஆனால் அப்போது கமல்ஹாசன் ஒரு குரூப்புக்கு மட்டும் சாதகமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த சீசன் இன்னைக்கு அவர் டாட்டா காட்டிவிட்டார் ஆனால் இப்போது இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே விஜய் சேதுபதி ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொள்ள வேண்டும் என்று பலர் எதிர்பார்த்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி போட்டியாளர்களின் முகத்துக்கு நேராக பேசுகிறார், எந்த போட்டியாளர்கள் பேச வந்தாலும் அவர்களை பேசவிடாமல் உட்காருங்கள் என்று சொல்லிவிடுகிறார். அதிலும் இந்த சீசனில் போட்டியாளராக இருக்கும் கம்ருதீன் வாரம் முழுக்க செய்யும் சண்டை சச்சரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு விஜய் சேதுபதி கையாளுவது உட்காரங்க கம்ருதீன் என்ற ஒரே வார்த்தை தான்.

விமர்சனம்

சல்மான் கான் (இந்தி), நாகார்ஜுனா (தெலுங்கு), மோகன்லால் (மலையாளம்), சுதீப் (கன்னடம்) போன்ற மற்ற மொழித் தொகுப்பாளர்களை ஒப்பிடும்போது, விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்ததிலேயே மிகவும் பலவீனமானத் தொகுப்பாளராகத் தெரிகிறார் என்றும், அக்டோபர் 26ஆம் தேதி ஒளிபரப்பான ஞாயிறு எபிசோடே இதற்குச் சாட்சி என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போட்டியாளர்களைக் கண்டிக்க தவறுவது ஏன்

ஒரு தொகுப்பாளர், வீட்டின் வெளியே என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்தாமல், அதே சமயம் போட்டியாளர்களின் ஆட்டம் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதற்கானக் குறிப்புகளைச் subtlety-யாக உணர்த்த வேண்டும். ஆனால், இதில் விஜய் சேதுபதி தடுமாறுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம், கானா வினோத் மற்றும் திவாகர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது என்று விஜய் சேதுபதி வெளிப்படையாகவே போட்டியாளர்களிடம் தெரிவித்தார். இதன் விளைவாக, அடுத்த வாரமே வினோத், திவாகரை பாடி-ஷேமிங் செய்து துன்புறுத்தத் தொடங்கினார்.

கம்ருதீன் மீதான மென்மை

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே, கம்ருதீன் பல முறை மற்றப் போட்டியாளர்களைத் தாக்க முயல்வது, அவர்களை அவமரியாதையாக நடத்துவது போன்ற வன்முறை சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவரை விமர்சிப்பதோடு நிறுத்திவிட்டாரே தவிர, இன்னும் ஒரு மஞ்சள் கார்டு (Yellow Card) கூட கொடுக்கல.

ரெட் கார்டு தேவை

முந்தைய சீசன்களில், கமல்ஹாசன், அர்ச்சனாவைத் தாக்குவதாக மிரட்டிய நிக்ஸனுக்கு மஞ்சள் கார்டு வழங்கினார். அதுபோல அசீம்க்கும் வழங்கப்பட்டது. பிரதீப் மீது உள்ளே இருக்கும் பெண்கள் குற்ற சாட்டு வைத்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்களில், விஜய் சேதுபதி கம்ருதீனின் நடத்தையைச் சுட்டிக்காட்டி, அவரது பொய்களைத் தேசியத் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தினார். ஆனால், மஞ்சள் கார்டு கொடுக்கவில்லை. இதன் விளைவாக, கம்ருதீன் சக போட்டியாளரான துஷாரின் வளர்ப்பு குறித்து பேச, அது ஒரு "கிட்டத்தட்ட உடல் சண்டையாக" உருவானது. அது மட்டும் அலலாமல் திவாகர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்தார் ஆனால் அதற்கு உள்ளிருக்கும் பெண்கள் எல்லோரும் மறுப்பு தெரிவித்து இருந்தனர். அதற்கும் விஜய் சேதுபதி நேரடியாக பேசி மிரட்டினாரே தவிர எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லை.

மோசமான விளைவு

போட்டியாளர்களை ரசிகர்கள் வெளியேற்றுவதற்கு முன்பே பிக் பாஸ் குழு காத்திருக்காது என்று விஜய் சேதுபதி கம்ருதீனுக்கு எச்சரித்த போதிலும், அவர் விளம்பர இடைவேளைக்கு சென்று திரும்பி வரும்போது கம்ருதீன் மற்றும் துஷார் இருவரும் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் அப்போதும் அவர் அமைதியாக வேடிக்கை பார்த்தார்.

தற்போது, பிக் பாஸ் தமிழ் 9க்குத் தேவைப்படுவது, வன்முறை, ஆட்சேபனைக்குரிய, மரியாதைக் குறைவானக் கண்டென்ட்டைத் தைரியமாகக் கண்டனம் செய்யும் ஒரு உறுதியான தொகுப்பாளரும், தாங்கள் ஒரு செலிபிரிட்டியாக இருப்பதால் ஏற்படும் பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் போட்டியாளர்களும்தான். இல்லை என்றால், இந்த சீசன் விரைவில் தன் ஆர்வத்தை இழக்கும் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+