பிக்பாஸில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது! சான்ட்ரா, திவ்யா முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி! இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி விஜய் சேதுபதி சான்ராவை கேள்வி கேட்டு அவரை அலற விட்டிருக்கிறார். சான்ட்ரா மற்றும் பிரஜன் இருவரும் விஜய் சேதுபதிக்கு நெருங்கியவர்கள் என்பதால் ஓவராகவே ஆட்டம் போட்டு வந்தனர். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவர்களுடைய விளையாட்டை பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போதும் டா சாமி என்று சொல்லும் அளவிற்கு தான் இந்த சீசன் ஆரம்பம் முதலே அனைவரையும் அலற வைத்து வருகிறது. இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் சோசியல் மீடியா பிரபலங்களை போட்டியாளர்களாக இறக்கி விட்டனர். இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் சினிமா துறையில் பிரபலமாகி தற்போது சினிமாவை விட்டு விலகி இருப்பவர்கள் சிலர் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் பிரபலமும் கிடைக்கும்.

அதேபோல இந்த சீசனிலும் நடக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் கலந்து கொண்டிருக்கின்றனர். கத்தல், ஆர்ப்பாட்டம் தான் நடந்து கொண்டிருந்தது. இதனால் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்த பிறகாவது விளையாட்டு மாறும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
வைல்ட் கார்ட் போட்டியாளராக சான்ரா அவருடைய கணவர் நடிகர் பிரஜன், திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் என நான்கு பேர் வந்திருந்தனர். அவர்களும் நாங்களும் உங்களுக்கு சளித்தவர்கள் இல்லை என்று சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த வாரத்தில் பிரஜன் மற்றும் சான்ரா இருவருமே சக போட்டியாளர்களிடம் திமிராகவே நடந்து கொண்டனர். வேலை செய்ய சொன்னால் செய்யமாட்டேன் என்று சான்ரா டிமிக்கி கொடுத்துக்கொண்டு எல்லோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டார்.
அதிலும் விக்கல் விக்ரமை உருவகேலியும் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பிக் பாஸிடம் கூட நீங்க கண்ணை மூடிகிட்டு தான் இருக்கீங்களா? என்று சண்டைக்கு இழுத்துக் கொண்டிருந்தார். இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்கள் எல்லாம் பிக் பாஸை குருநாதா, தலைவா, பாஸ் என்றெல்லாம் அழைத்து வந்தனர் ஆனால் இப்போது இவர்கள் சக போட்டியாளராக மாற்றிவிட்டனர்.
இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி சான்ரா பிக் பாஸை கண்ண மூடிட்டு இருக்கீங்களா என்று சொன்னதை வைத்து தான் விசாரிக்கலாம் என்பது போல பேசுகின்றார். இரண்டாவது ப்ரோமோவில் சான்ரா மற்றும் திவ்யா இருவரையும் நிற்க்க வைத்து நீங்க உள்ளே எந்த வேலையும் செய்யவில்லை என்று திவ்யாவிடம் சொல்ல அதற்கு திவ்யா சார் நான் வேலை செஞ்சுட்டு தான் இருந்தேன் என்று சொன்னதும் அவங்க வேலை பார்த்தாங்களாம் நீங்க பார்த்தீங்களா என்று கேட்க, பார்வையாளர்கள் இல்லை என்று சொன்னதும் உங்களை வச்சு மட்டும் தான் பிக் பாஸ் இருக்குன்னு நினைச்சுட்டு இருக்காதீங்க. நீங்களும் இங்க விளையாட வந்திருக்கீங்க அவ்வளவுதான் என்று வார்னிங் கொடுத்தார்.
இடையில் திவ்யா பேச போக அவரையும் நான் உங்ககிட்ட பேசல என்று முகத்தில் அடித்தது போல பேசி இருக்கிறார். இதனால் இந்த வாரம் பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்று தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications