Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமி: சுதாகர் எடுத்த வீடியோ! நேரில் சென்று வாக்குவாதம் செய்த இனியா.. கோபி எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 22 ஆம் தேதிக்கான எபிசோடில், இனியாவின் நடத்தையை பற்றி நிதிஷ் குடும்பத்தினர் தவறாக பேச, அதனால் கோபமான இனியா சுதாகர் வீட்டிற்கு சென்று மிரட்டி விட்டு வந்திருக்கிறார். அப்போது சுதாகர் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின், ஈஸ்வரியும் பாக்கியலட்சுமியும் பேசிக் கொண்டிருக்கையில் எழில் அங்கு வருகிறார். இனியாவுடன் இருக்க வேண்டியதுதானே என்று பாக்கியா கேட்க, இனியா வேலையில் இருப்பதாக எழில் கூறுகிறார். கோர்ட்டுக்குப் போனதிலிருந்து இனியாவின் முகம் சரியில்லை என்று எழில் சொல்ல, அங்கு என்ன நடந்தது என்று ஈஸ்வரி விசாரிக்கிறார். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்று பாக்கியா பதிலளிக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபத்தில் செழியன்

சிறிது நேரத்தில் செழியனும் கோபியும் வக்கீலை சந்தித்துவிட்டு கையில் ஒரு கடிதத்துடன் வருகின்றனர். செழியன் கோபத்துடன் பேசுகையில், "அவங்களாம் மனுஷங்களே கிடையாது, மிருகம்" என்கிறார். அப்போது அங்கு வரும் இனியா, என்ன ஆச்சு என்று கேட்கிறார். செழியன் கடிதத்தை மறைக்க முயல, இனியா வலுக்கட்டாயமாக வாங்கிப் படிக்கிறார். அதைப் படித்ததும் கண்கலங்கி நிற்கிறார். எழில் அந்த கடிதத்தை வாங்கி படிக்கிறார், கோபத்தில் தூக்கி எறிகிறார்.

கதறி அழுத இனியா

என்ன நடந்தது என்று சொல்லாமல் ஏன் இப்படி இருக்கீங்க என்று ஈஸ்வரி கேட்கும் போது, அவன் பண்ண தப்புக்கு எல்லாரும் பொண்ணுங்க மேல பழிய போடுறாங்க. நான் ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணுனேன், ஆனா என் நடத்தை சரியில்லையாம். நான் தப்பானவளா? என்று பாட்டியிடம் இனியா அழுகிறார். மேலும், திரும்பி வந்தால் தன்னுடன் வாழ சம்மதமாம் என்றும் கடிதத்தில் எழுதியிருப்பதாக கூறி அழுகிறாள். கோபி இனியாவிடம் கவலைப்படாதே, அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கித் தருகிறேன், அதுவரைக்கும் யாரையும் போய் பார்க்க வேண்டாம் என்று கூறுகிறார்.

மறுபக்கம் சந்திரிகாவும் சுதாகரும் பேசிக் கொண்டிருக்க, நிதீஷ் எங்கே போகிறாய் என்று கேட்கிறார்கள். அதற்கு நிதீஷ், ரெஸ்டாரன்ட்க்கு போவதாக சொல்கிறார். எந்த ரெஸ்டாரன்ட் என்று அவர்கள் கேட்க, இனியாவின் அம்மாவிடம் இருந்து வாங்கிய ரெஸ்டாரன்ட்க்கு தான் சென்று அங்கு என்ன வேலை இருக்குன்னு பார்க்க போவதாக கூறுகிறார். அப்போது அங்கு வரும் இனியா, நிதீஷிடம் அந்த பேப்பரை காட்டுகிறாள். அதில் என்ன எழுதியிருக்கு என்று நிதீஷ் கேட்க, நீ ஒரு லெட்டர் அனுப்பின, அதுக்கு பதில் லெட்டர் எழுத சொன்னாங்க, அதான் இப்படி அனுப்பி இருக்கேன் என்கிறான். ஏன் என் நடத்தை சரியில்லையா? நான் தப்பானவளா? என்று இனியா கோபப்படுகிறாள்.

சுதாகர் எடுத்த வீடியோ

சத்தம் கேட்டு அங்கு வரும் சுதாகர் மற்றும் சந்திரிகாவிடம் இனியா வாக்குவாதம் செய்கிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் சுதாகர் இனியா பேசுவதை வீடியோ எடுக்கிறார். நான் உங்களை சும்மா விடமாட்டேன் என்று இனியா சொல்லிக் கொண்டிருக்கும் வீடியோவை எடுத்து கோபிக்கு அனுப்புகிறார் சுதாகர். கோபி அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகிறார். அதே நேரத்தில் அந்த வீடியோவை சுதாகர் பாக்யாவுக்கும் அனுப்ப பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும் போது இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகி இனியாவுக்கு போன் செய்து எங்கம்மா இருக்க வீட்டுக்கு வா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இனியா சுதாகர் வீட்டு முன்பு நின்று கத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி அங்கு வந்து போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சுதாகர் நல்ல வேலைக்கு நீங்க இங்க வந்தீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு இனியா நீங்க தப்பு பண்ணிட்டு நிம்மதியா இருக்கலாம்னு நினைக்காதீங்க என்று வார்னிங் கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+