பாக்கியலட்சுமி: இனியா பிறந்தநாள், கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த நிதிஷ்.. சுதாகர் சொன்ன வார்த்தை.. பாக்யா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 23ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் பிறந்த நாளுக்காக கோபி குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்யும் போது சுதாகர் தன்னுடைய வீட்டிலும் பங்க்ஷன் நடைபெறப்போகிறது என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் கோபியிடம் நிதிஷ் செய்த செயலால் கோபிக்கு சந்தேகம் வருகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சுதாகர் போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நிதீஷ் வெளியே கிளம்புகிறார். எங்க போகிற என்று அவரிடம் சுதாகர் கேட்க அதற்கு அவர் நான் பிரண்ட்ஸ் பார்க்க போறேன் என்று சொல்ல, உடனே தன் மனைவி சந்திரிகாவை கூப்பிட்டு இனியா வரதுக்குள்ள இவனை உள்ளே போய் படுக்க சொல்லு என்று சுதாகர் சொல்ல, நிதிஷ் முடியாது என்று சொன்னதும் சந்திரிகா கட்டாயப்படுத்தி நிதிஷை கூப்பிட்டு போகிறார்.

நிதிஷ் செய்த செயல்
அந்த நேரத்தில் கோபியும் இனியாவும் வந்து விடுகின்றனர். அவர்களை பார்த்ததும் சந்திரிகா இவ எதுக்கு அவங்க அப்பனை கூட்டிட்டு வறா? நேத்து நடந்த பிரச்சினையை சொல்லியிருப்பாளோ என்று சொன்னதும் சுதாகருக்கு முகம் மாறுகிறது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் கோபியை வரவேற்று உட்கார வைத்து அவரிடம் என்ன விஷயம் சம்மந்தி என்று விசாரிக்கின்றனர். அப்போது கோபி நிதிஷிடம் வணக்கம் மாப்பிள்ளை என்று சொல்ல, நிதிஷ் எதுவும் பேசாமல் கோபமாக உள்ளே சென்று விடுகிறார்.
சமாளித்த சுதாகர்
ஏன் இவர் பேசாமல் போறாரு என்று கோபி கேட்க, அவன் இனியா கூட வெளியே போகலாம்னு இருந்தான். ஆனா அது நடக்கல, அதனால கோபத்தில் இருக்கிறான் என்று சுதாகர் சமாளிக்கிறார். அதற்கு கோபி இனியாவிற்கு நாளை பிறந்தநாள் அதனால அவங்க அம்மா கூட ஷாப்பிங் போயிட்டு வந்தா, லேட்டாயிடுச்சு என்று சொல்கிறார். அதற்கு சுதாகர் எனக்கு இனியாவில் பிறந்தநாள் ஏற்கனவே தெரியும். நாளைக்கு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கிறோம் உங்களுக்கும் போன் பண்ணி கூப்பிடனும்னு இருந்தேன் அதற்குள் நீங்க வந்துட்டீங்க என்று சமாளிக்கிறார்.
கோபிக்கு சந்தேகம்
பிறகு கோபி சந்தோஷம் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அவர் போனதும் இனியாகவும் கிளம்பி விட சுதாகர் மனைவி அவரிடம் இந்த இனியா பிறந்தநாள் எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? என்று கேட்க, அது எனக்கு எப்படி தெரியும் அவங்க அப்பன் சொன்ன பிறகுதான் எனக்கே தெரிந்தது. உன் பையன் செஞ்ச வேலைக்கு நான் இப்படி எல்லாம் நடிக்க வேண்டியது இருக்கு என்று சுதாகர் சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் ஈஸ்வரியும் பாக்யாவும் கோவிலுக்கு வருகின்றனர்.
பாக்கியா சொன்ன விஷயம்
அங்கு இனியா பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு கோவிலில் உட்கார்ந்து இருக்கும்போது தெரிந்த பெண் ஒருவர் வருகிறார். அவரிடம் பாக்கியா பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி இது யார் என்று விசாரிக்கிறார். அப்போது இவங்க தெருவில் தான் இருக்காங்க இத்தனை நாளா வெளிநாட்டில் இருந்தாங்க. கல்யாணம் வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்துட்டாங்க ஆனா இப்போ மனசு மாறி இருக்காங்க வேணும்னா உங்க பையனுக்கு கூட இவங்கள நீங்க பேசி முடிக்கலாம் என்று சொல்ல ஈஸ்வரி கோபப்பட்டு விட்டு இருக்கிறார்.
சுதாகர் மனம் மாற்றம்
மறுபக்கத்தில் சுதாகர் தன்னுடைய மகன் மற்றும் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சந்திரிகா தன்னுடைய மகனிடம் உங்க அப்பா இனியாவின் பிறந்தநாளுக்கு பங்க்ஷன் அரேஞ்ச் பண்ணி இருக்கிறார் என்று சொல்ல, ஏன்பா இப்படி எல்லாம் பண்றீங்க என்று நிதிஷ் கேட்கிறார். நீ நேத்து உன் மாமனார் பேசும் போது எதுக்கு ஒரு வார்த்தை கூட பேசாம போனா? என்று கோபப்படுகிறார். அதோடு இனியா இப்போ வருவா நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு விஷ் பண்ணனும்னு சொல்ல, சந்திரிகாநான் பண்ண மாட்டேன் அவளுக்கு பண்றதுக்கு அவங்க அம்மாவோட இட்லி கடையில் யாராவது இருப்பாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அதற்கு சுதாகர் அவன் தான் சின்ன புள்ள மாதிரி பேசிக்கிட்டு இருக்கான். நீயும் இப்படி பேசிட்டு இருக்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இனியா அங்கு வர இனியாவிற்க்கு சுதாகர் வாழ்த்துக்கள் சொல்கிறார். பிறகு சந்திரிகாவும் வாழ்த்துக்கள் சொல்கிறார். கடைசியாக சுதாகர் வற்புறுத்தியதால் நிதிஷும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications