பாக்கியலட்சுமி: இனியாவை தவறாக பேசிய சுதாகர்.. சட்டையை பிடித்த கோபி.. கடைசியில் எதிர்பாராத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 24ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் கோபியின் சண்டையுடன் விறுவிறுப்பாக நகர்ந்தது. நிதீஷ் குடும்பம் குறித்து இனியா தொலைக்காட்சியில் பேசியது, குடும்பத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஈஸ்வரியின் கோபம்
தொலைக்காட்சியில் இனியா நிதீஷ் குடும்பத்தைப் பற்றி பேசுவதைப் பார்த்த ஈஸ்வரி, "இவ எதுக்குடா இப்படி செஞ்சுட்டு இருக்கா?" என்று கோபியைப் பார்த்து கோபமாக கேட்டார். உடனே இனியாவை வீட்டிற்கு அழைத்து வரும்படி கோபியிடம் கூறினார். அப்போது இனியா வீட்டிற்கு வருகிறார். அவரிடம், கோபி "டிவோர்ஸ் கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்" என்று அறிவுறுத்தினார். ஆனால், இனியா எந்தப் பதிலும் சொல்லாமல் அங்கிருந்து சென்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இனியாவின் மனதில் குமுறல்
அதன்பின், இனியா தனிமையில், "டாடி சொன்ன மாதிரி அமைதியாக இருக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா என்னால முடியல. அந்த குடும்பம் பண்ண துரோகம் தான் எனக்கு நினைவில் இருக்கு" என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதற்கிடையே, ஜெனி செழியனுக்கு போன் செய்து, சுதாகர் டிவியில் இனியாவைப் பற்றி பேசுகிறார் என்று தகவல் கொடுத்தார். இதைக் கேட்ட செழியன் உடனடியாக டிவியை ஆன் செய்து பார்த்தார்.
இனியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை
சுதாகர் தொலைக்காட்சியில் பேசுவதைக் கேட்ட பாக்கியலட்சுமி குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதைப் பார்த்த இனியா, பாக்கியாவிடம், "சுதாகர் ரொம்ப கேவலமா பேசியிருக்காரா?" என்று கேட்டார். அதற்கு பாக்கியா, "கேவலமானவங்க அப்படித்தான் பேசுவாங்க" என்று பதிலளித்தார். மறுநாள் காலையில், இனியா வீட்டில் உள்ளவர்களிடம், சுதாகர் குடும்பத்தைப் பற்றி ஐஜி இடம் புகார் செய்திருப்பதாகத் சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் இந்த விஷயம் சுதாகருக்கும் தெரியவரவே, அவர் தனது குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்றுவிட்டார்.
போலீஸ் விசாரணை
சுதாகரின் வீட்டிற்குச் சென்று பார்த்த போலீசார், அங்கு யாரும் இல்லாததால், இனியாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். இதைக் கேட்ட இனியா கோபமடைந்தார். அப்போது பாக்கியா பொறுமையாக இரு நாம கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு. இனி போலீஸ் பாத்துக்குவாங்க நாம எல்லோரும் குடும்பமாக ஒரு ட்ரிப் போகலாம் என்று சொல்கிறார். முதலில் இனியா மறுத்தாலும் குடும்பத்தினர் எல்லோரும் சொன்னதால் சரி என்று சொல்கிறார்
கோபி, சுதாகர் அடிதடி
அதைத்தொடர்ந்து சுதாகர் கோபியை சாலையில் பார்த்து, "உங்க பொண்ணு கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லு" என்று சட்டையை பிடித்து மிரட்டினார். அதைக் கேட்ட கோபி, கையை தட்டி விட்டு இதற்கு முன்பு உன் வீட்டுக்கு வந்து அமைதியா போன கோபின்னு என்னை நினைச்சுக்காத.. இப்போ என் பொண்ணு உன் வீட்டில் வாழ மாட்டேன்னு சொல்லிட்டா, இனி என்னுடைய இன்னொரு முகத்தை பார்ப்ப என்று சுதாகர் சட்டையை பிடிக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.
இன்றைய எபிசோடில் இனியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள், அடுத்தடுத்த திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications