பாக்கியலட்சுமி: இனியா பற்றி கோபியிடம் பாக்கியா கேட்ட கேள்வி.. தொடங்கியது புது பிரச்சனை.. சுதாகருக்கு கிடைத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 2025 ஜூன் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி இனியாவை தன்னுடைய வீட்டிற்க்கே அழைக்க அதற்கு இனியா மறுப்பு தெரிவிக்கிறார். அதுபோல இனியா விஷயத்தில் பாக்கியாவிற்க்கு சந்தேகம் வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சுதாகர் குடும்பத்திடம் நான் இனியாவை என்னுடைய வீட்டுக்கே கூட்டிட்டு போய் விடுகிறேன் என்று சொல்ல அதற்கு சுதாகர் குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கின்றனர். இப்பதான் உங்களுடைய அம்மாவும் பாக்யாவும் இந்த வீட்டில் இருந்து சந்தோஷமா போயிருக்காங்க அதற்குள் இனியா அந்த வீட்டுக்கு திரும்பப் போனா அவங்க எல்லாரும் கஷ்டப்படுவாங்க என்று சென்டிமெண்டாக சுதாகரன் மனைவி பேசுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

ஆனாலும் கோபி மனசு மாறாமல் இருக்கிறார். அப்போது இனியா நான் வரல இந்த வீட்டிலேயே இருக்கிறேன் என்னால் அம்மாவும் பாட்டியும் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார். எங்களுடைய மொத்த குடும்பமே உங்க மேல நம்பிக்கை வச்சு தான் இந்த கல்யாணத்தை பண்ணுனோம் ஆனா இப்ப என்னுடைய பொண்ணு வாழ்க்கை கேள்விக்குறியாய் இருப்பதை பார்க்கும்போது என்னால் சும்மா இருக்க முடியாது என்று கோபி சொல்கிறார்.

அதோடு என்னுடைய பொண்ணு சொன்ன ஒரே காரணத்துக்காக தான் அவளை இங்க விட்டுட்டு போறேன் என்று கிளம்புகிறார். இனியாவிடம் நிதிஷ் பற்றி ஒரு விஷயம் தெரிய வருது என்றால் அதை முதலில் நீ என்கிட்ட தானே சொல்லி இருக்கணும் என்று சுதாகர் கேட்க, அதற்கு இனியா உங்ககிட்ட சொன்னா எதுவுமே நடக்காது என்று தெரியும். அதனால தான் சொல்லல என்று பதில் கொடுக்கிறார். அதற்கு சுதாகர் இனி நிதிஷால் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்கிறார். பிறகு நிதிஷை கூப்பிட்டு இனியாவது ஒழுங்கா இரு என்று அட்வைஸ் செய்கிறார்.

மறுநாள் இனியாவின் பிறந்தநாள் போட்டோவை ஈஸ்வரி ஸ்டேட்டஸில் போட சொல்கிறார். தொடர்ந்து ஈஸ்வரி கோபியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீ பண்ணுனதிலேயே ஒழுங்கான வேலை இனியாவிற்கு இப்படி ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணி வச்சதுதான் என்று சொன்னதும் கோபி எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த கல்யாணத்தை நான் பண்ணி வைக்காமல் இருந்திருக்கலாம் என்று சொன்னதும் ஈஸ்வரி அதிர்ச்சியாகி என்ன சொன்ன? ஏன் இனியாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க வேண்டான்னு சொல்லுற? என்று பயந்து போய் கேட்க, அதற்கு கோபி இல்ல இனியா நிறைய படிக்கணும் வேலைக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தா ஆனா நாம தான் கேட்காமல் கல்யாணம் பண்ணி வச்சுட்டோமோன்னு எனக்கு யோசனையா வருது என்று சமாளிக்கிறார்.

ஆனாலும் ஈஸ்வரி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். பிறகு நீ செஞ்சது ஒன்னும் தப்பு கிடையாது இப்ப கூட இனியா வேலைக்கு போயிட்டு தானே இருக்கிறா? அந்த வீட்டில் அவ படிக்கணும்னு சொன்னா கூட அவளை படிக்க வைப்பாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ஈஸ்வரி போனதும் பாக்யா வந்து இனியாவுக்கு எதுவும் பிரச்சனையா? என்று கோபியிடம் கேட்க, கோபி அதிர்ச்சியாகி என்னாச்சு என்று கேட்கிறார். நேற்று எல்லாரையும் அங்கேயே இருக்க சொல்லிட்டே இருந்தா பிறகு நாங்க வந்ததும் உங்க கூட வெளியே போயிட்டு வந்தேன்னு மெசேஜ் பண்ணி இருக்கா. எனக்கு சந்தேகமா இருக்கு இனியா விஷயத்தில் எது நடந்தாலும் எனக்கு தெரியனும் என்று பாக்கியா சொல்கிறார். அதைக் கேட்டு கோபி அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+