நிஜ கேரக்டரை காட்டிய ராதிகா.. பாக்யாவின் பாசத்தை பீல் பண்ணும் கோபி.. கடைசியில் எடுத்த திடீர் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நிலைமையை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
இரண்டாவது திருமணம் செய்திருந்த கோபி தற்போது ஒரு காபிக்கு கூட வலி இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதை பார்த்து அவருடைய தந்தையான ராமமூர்த்தி கலாய்த்து விட்டிருக்கிறார்.
இதுவரைக்கும் தன்னுடைய பழைய வீட்டில் இருந்த நிலைமைக்கும் இப்போது இருக்கும் நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை கோபி நினைத்து பார்த்து பீல் பண்ணி வருகிறார்.

காபிக்காக கெஞ்சும் கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு தொடங்கும் போது, கோபி ராதிகாவை பார்த்துக்கொண்டே இருக்கிறார். அதற்கு ராதிகா என்ன கோபி நான் அவ்வளவு அழகாக இருக்கிறேனா? என்று கேட்கிறார். அப்போது கோபி அதெல்லாம் இல்லை! ஒரு காபி கிடைக்குமா? என கேட்கிறார். அதற்கு ராதிகா அப்போ நான் அழகா இல்லையா? கோபி என ராதிகா மடக்கி கேட்கிறார். யார் சொன்னது நீ பியூட்டிஃபுல்லா இருக்க என கோபி சமாதானம் செய்கிறார். அதற்கு இந்த நேரத்தில் யாராவது காபி கொடுப்பார்களா? என்று ராதிகா கேட்கிறார். அதற்கு கோபி நீ எனக்கு சாப்பாடு கூட போட வேண்டாம். காலை, மதியம், நைட்டு என்ன நான் அடிக்கடி காபி குடிப்பேன் காலையில் ஜாக்கிங் முடித்து வந்ததும் ஒரு காபி, மாலையில் ஆபீஸ் முடிந்து வந்ததும் ஒரு காபி, நைட்டு தூங்கும்போது ஒரு காபி மட்டும் கொடுத்துடு நான் உயிர் வாழ்ந்து விடுவேன் என கெஞ்சி கொண்டிருக்கிறார்.

கடைக்கு அனுப்பிய ராதிகா
அதற்கு ராதிகா எதுக்கு இப்படி கெஞ்சிகிட்டு இருக்கீங்க. காபி வேணும்னு கேட்டா போட்டு கொடுக்க போறேன் என்று பேப்பரை எடுத்து படிக்கப் போகிறார் .இதனால் குழப்பமான கோபி காபி..என்று இழுத்தபடியே கேட்க, பால் இல்லை போய் வாங்கிட்டு வாங்க என்று கூறுகிறார். நான் போய் பால் வாங்கணுமா? எனக்கு பால் இல்லாவிட்டாலும் பரவாயில்லை பிளாக் காப்பியாவது போட்டுக் கொடு என்று கூறுகிறார். அதெல்லாம் முடியாது நீங்க போய் பால் வாங்கிட்டு வாங்க நான் உங்களுக்கு பில்டர் காப்பி போட்டு தாரேன் என்று கோபியை அனுப்பி வைக்கிறார்.

அப்பாவிடம் பல்பு வாங்கிய கோபி
பால் வாங்கிட்டு வரும்போது யாரும் பார்த்து விடக்கூடாது என்று தெருவில் புலம்பிய படியே வந்து கொண்டிருந்த கோபியை அவருடைய அப்பா போன் பேசிக் கொண்டிருக்கும்போது பார்த்துவிடுகிறார். வாசலில் போன் பேசுவது போல கோபியின் நிலைமையை கிண்டல் அடிக்கிறார். அப்பாவை பார்த்ததும் கோபி டி-ஷர்ட்டுக்குள் பால் பாக்கெட் ஒழித்து வைத்ததும், அது வைக்கக்கூடிய இடமாடா அது? பால் பாக்கெட் வாங்கிட்டு போற, இப்பதானே ஆரம்பிச்சி இருக்கு, இன்னும் சொம்பு எல்லாம் தூக்க வேண்டியது இருக்கு. அதையெல்லாம் நான் பார்க்கணுமே, நான் பார்க்க தானே போறேன். கேட்ட நேரத்துக்கு காபி கிடைக்கும். இந்த வாழ்க்கை எல்லாம் வேண்டாம் என்று புது வாழ்க்கை தேடி போன, ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ண, இன்னும் நீ என்னையெல்லாம் படப்போறேன்னு பாக்கத்தானே போறேன் என கைகட்டி சிரிக்கிறார். அதனால் கடுப்பாகி கோபி வீட்டுக்குள்ளே போகிறார்.

நிலைமை இப்படி ஆகிவிட்டது
வீட்டுக்கு வந்து பார்த்தால் ராதிகா மையோடு பிஸியாக இருக்கிறார். மயூவின் ஸ்கூல் டிரஸ்சை தேடிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து இன்று நமக்கு காபி கிடைத்த மாதிரி தான் என்று புலம்பியபடி இருக்கிறார். அப்போது ராதிகா காபியை கொண்டு கையில் கொடுக்கிறார். சந்தோஷமாக அதை வாங்கி ருசித்து குடித்துக் கொண்டிருக்கிறார் .அப்போது டிபன் என சொல்லி உப்புமாவை கொண்டு ராதிகா கையில் கொடுக்கிறார் .கோபி சாப்பாட்டை பார்த்ததும் ஷாக் ஆகிறார். பிடிக்காத உப்புமாவை மனம் இல்லாமல் கோபி சாப்பிடுகிறார். அப்போது ராதிகா மயூவை கொண்டு ஸ்கூலில் விட்டு விடுவீர்களா கோபி? என்று கேட்கிறார் .அதோடு மயூவை விட்டுவிட்டு வந்து என்னை ஆபீசில் கொண்டு விட்டு விட வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு கோபி ஓகே என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய சீரியல் முடிவடைந்து இருக்கிறது இனி கோபி சாப்பாடு விஷயத்தில் பலமுறை பாக்கியாவின் வீட்டை நினைத்துக் கொண்டிருப்பதால் இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று அடுத்த வாரம் தெரியும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications