விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் இரண்டு சீரியல்கள்..தொடங்கிய வேகத்திலேயே முடிவு..காரணம்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே மற்றும் கண்ணே கலைமானே சீரியல் 2 முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியல்கள் முடிவதற்கு முன்பே, இதற்கு பதிலாக ஒளிபரப்பாகும் சீரியலின் ப்ரோமோ வெளியாகிவிட்டது.
அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த சேனலாக விஜய் டிவி இப்போது இருந்து வருகிறது. அதுவும் இளைஞர்களின் மத்தியில் விஜய் டிவிக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. இந்த சேனலில் அதிகமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதும் அதுபோல இளம் ரசிகர்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடப்பதும் இந்த சேனலுக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு சில சீரியல்கள் இப்போது அடுத்தடுத்து முடிவுக்கு வர இருப்பது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் சமீபத்தில் தான் காற்றுக்கென்ன வேலி, பாண்டியன் ஸ்டோர் என சில முக்கியமான சீரியல்கள் முடிவுக்கு வந்தது. முடிவடைந்த சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்ட நிலையில் மற்ற புது சீரியல்களுக்கான ப்ரோமோக்களும் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலும் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலின் கதாநாயகி சோகத்தோடு Ending soon என்று வெளியிட்ட பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அதோடு அவர் சீரியல் முடிவு குறித்துதான் இப்படி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலை சீக்கிரமாக முடிக்கலாம் என்றும் பலர் கருத்து கூறி வருகிறார்கள். காரணம் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் கதை லாஜிக் இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் தான் கண்ணே கலைமானே சீரியல் தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள் இந்த சீரியலில் கதாநாயகன் நந்தா மாஸ்டர் திடீரென்று சீரியலை விட்டு விலகி இருந்தார்.அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தம்பி கார்த்திக் கேரக்டரில் நடிக்கும் நடிகர் தான் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலும் திடீரென்று முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இப்போ தானே கண்ணே கலைமானே சீரியல் தொடங்கினாங்க. அதற்குள் ஏன் இந்த முடிவு என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் சக்திவேல் எனும் புதிய சீரியல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரைக்கும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications