புதிய சீரியலில் ஹீரோயினி ஆகும் சிறகடிக்க ஆசை மீனா.. அதுவும் எல்லோருக்கும் தெரிந்த சீரியல் தான்! கேரக்டர் இதுவாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியாவிற்கு புதிய சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது எந்த சீரியல்? என்ன கேரக்டர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் போதும் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளை தங்கள் வீட்டு பிள்ளைகள் போல பார்க்க தொடங்கி விட்டார்கள். அதிலும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்குத்தான் இப்போது மவுசு அதிகமாக இருக்கிறது.

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் கூட வருடத்திற்கு ஒரு படத்திலோ அல்லது சில வருடங்களுக்கு பிறகோ ஒரு படத்தில் தலைக்காட்டுவார்கள். ஆனால் சீரியலில் தினமும் இவர்களை பார்ப்பதால் ரசிகர்களுக்கு பரிச்சயமாகி விடுகிறார்கள். போதாத குறைக்கு சோசியல் மீடியாவிலும் சீரியல் நடிகைகள் செம ஆக்டிவாக இருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து சோசியல் மீடியாவிலும் லைம் லைட்டில் இருக்கின்றனர்.
இதனால் சீரியல் பார்க்காதவர்கள் கூட இந்த நடிகைகளை தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். அதுபோலத்தான் சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி பிரியாவிற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் மதுரையைச் சார்ந்த பொண்ணு தான். மதுரையில் சாதாரண ஒரு குடும்பத்தை சார்ந்தவர். காலேஜ் படிப்பதற்காக சென்னைக்கு வந்த இடத்தில் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக மாடலிங் செய்ய தொடங்கி பிறகு விஜய் டிவியில் ஆடியன்ஸாக வந்திருந்தார்.
சிறகடிக்க ஆசை: ரோகிணி வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பிஏ.. முத்துக்கு தெரிய வரும் உண்மை!
அதற்கு பிறகு விஜய் டிவியில் கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கி விட்டார். அதிலும் விஜய் டிவியில் வேலைக்காரன் என்ற சீரியல் தான் இவருக்கு பெயரையும் புகழையும் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து ஓவியா என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அடுத்ததாக தான் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் இப்போது இவருக்கு பட்டிதொட்டி எல்லாம் பிரபலத்தை கொடுத்து இருக்கிறது.

இதைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அடியே சிறுக்கி மகளே என்ற ஆல்பம் பாடலிலும் நடித்திருக்கிறார். அந்த பாடலில் அவருடன் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நவீன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் மலையாள ரீமேக் காண Ee Puzhayum KAdannu என்ற நியூ சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.
Siragadikka Aasai: சீரியல் நடிகை தற்கொலை! இறுதி சடங்கில் பார்த்த காட்சி! எமோஷனலாக பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
இதற்கான ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. இதில் இவர் மகாநதி சீரியலில் காவிரி நடித்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்றும் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிறகடிக்க ஆசை சீரியலில் தியாகியாகவும், அமைதியின் சொரூபமாக இருக்கும் இவர் இனி மலையாள சீரியலில் எப்படி இருக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications