ஆஹா.. பொங்கலுக்கு டிவியில் செம விருந்தா இருக்கே.. விஜய் டிவியில் அசுரன்!
சென்னை: போகிப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்.. இந்த வரிசையில் தற்போது டிவி பொங்கலும் இணைந்து விட்டது.
ஆமாங்க.. டிவிகளில் விதம் விதமான படங்களைப் போட்டு இந்த பொங்கலை அதிர வைக்கப் போகிறார்கள்.
சன் டிவியில் 5 மெகா ஹிட் படங்களைப் போடப் போவதாக அறிவித்துள்ளனர். விடுவார்களா மற்ற சேனல்கள்.
சன் டிவியில் இந்த பொங்கலுக்கு 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மெகா ஹிட் படங்களைப் போடவுள்ளனர். இதுதவிர தினசரி 2 படங்கள் கூடுதலாகவும் போடவுள்ளனர்.

நம்ம வீட்டுப்பிள்ளை
15ம் தேதி பிகில், 16ம் தேதி நம்ம வீட்டுப் பிள்ளை படம் காட்டப்படவுள்ளது. அதேபோல 17ம் தேதி சங்கத் தமிழன் வெளியாகிறது. 18ம் தேதி அஜீத்தின் விஸ்வாசம் போடவுள்ளனர். 18ம் தேதி பேட்ட படம் வரப் போகிறது. இது சன் டிவி வைக்கப் போகும் பொங்கல்.

தனுஷின் அசுரன்
விடுமா விஜய் டிவி.. பின்னாடியே விரட்டி வந்துருச்சு பாருங்க. ஜனவரி 15ம் தேதி அசுரன் படத்தைப் போடப் போகிறார்களாம். இதுதொடர்பான புரோமோ இப்போது வெளியாகி விட்டது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் படம் தான் இந்த அசுரன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் அசுரன்.

நீண்ட விடுமுறை
அடுத்து கலர்ஸ் டிவி, ஜீ தமிழ் டிவி என மற்ற சேனல்கள் எல்லாம் என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியலை. ஆனால் நிச்சயம் அவர்களும் ஏதாவது செய்து மக்களை கட்டிப் போடவே முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த முறை பொங்கலுக்கு நீண்ட விடுமுறை வருவதால்தான் இத்தனை அக்கப் போர் என்று சொல்கிறார்கள்.

பார்க்கறதுதான் எப்போ?
அது சரி எல்லோருமே இப்படி படம் போட்டு கட்டி வைச்சா மக்கள் எப்படித்தான் வெளில போய் நாலு பேரை பார்ப்பது, ஊர் உறவுகளைப் பார்ப்பது பொங்கலை வெளியில் போய் கொண்டாடுவது.. கொஞ்சம் யோசிங்க டிவிக்காரர்களே. பொங்கலுக்கு கூட வாங்க பழகலாம் இல்லேன்னா எப்படிங்க?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications