கடைசி நாளில் சாப்பிடாமல்...மயங்கி போகும் நிலையில்... விஜியின் வெற்றி பெற்ற தருணம்
சென்னை: தான் வெற்றி பெற்றாலும் அதற்காக தான் பட்ட கஷ்டங்கள் பற்றி விஜி கூறியுள்ளார்.
Recommended Video
போட்டியாளர்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளுகின்ற வகையில் தன்னுடைய விடாமுயற்சியால் வெற்றி அடைந்துள்ளார் விஜயலட்சுமி.
சர்வைவர் பட்டத்தை பெற்றாலும் அந்த ஒரு நாளை என்னால் மறக்க முடியாது என்று உணர்ச்சி பொங்க விஜி கூறியுள்ளார்.

திறமைக்கு கிடைத்த வெற்றி
வெற்றி பெறுவது ஒன்றும் எளிமையான காரியம் அல்ல. அதற்காக கடின உழைப்பு களையும் பல தியாகங்களையும் செய்துதான் ஆக வேண்டும் என்று எழுதப்படாத விதி இருந்து வருகிறது.எளிமையாக யாருக்கும் வெற்றி கிடைத்துவிடாது. திறமைக்கும் உழைப்புக்கும் மட்டும்தான் அது சொந்தமாகும். அந்த மாதிரி தான் தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் ஆரம்பமான முதல் நாளில் இருந்து தன்னுடைய திறமையை முழுமையாக காட்டி வெற்றி பெற்றிருக்கும் விஜயலட்சுமி அதற்காக தான் பட்ட கஷ்டங்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

நெகட்டிவர்ஸ் கலாய்ப்பு
ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே அதில் கஷ்டங்களும், விறுவிறுப்பும் இருந்து கொண்டிருக்கும். அதை எல்லாம் தகர்த்தெறிந்து தன்னுடைய திறமையை காட்டினால்தான் அதில் ஜெயிக்க முடியும் என்பது பலருக்கும் தெரியும். ஆனாலும் விஜயலட்சுமி சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது, ஏமாற்றுவேலை கடைசியில் பொய் சொல்லிவிட்டார், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று பல்வேறு நெட்டிவர்ஸ் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் தன்னை நம்பும் ரசிகர்களுக்கு தன்னுடைய நிலைப்பாடும் தான் பட்ட கஷ்டங்களையும் விரிவாக விஜயலட்சுமி எடுத்துக் கூறியுள்ளார்.

விஜியின் கருத்து
சர்வைவர் நிகழ்ச்சியில் தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் காட்டப்படவில்லை. அங்கு 24 மணி நேரமும் நடந்த செயல்களில் ஒரு சில பகுதிகள் மட்டும் தான் வெளியே காட்டப்படுகிறது. அது நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்டுவதற்காக செய்யப்பட்டதாக இருந்தாலும் இந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று என்னுடைய திறமையை நிரூபித்து விட வேண்டும் என்று நான் எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து உள்ளேன். கடைசி நாட்களில் பல நெருக்கடிகளை சந்தித்து தான் இந்த சர்வைவர் டைட்டிலை விண் செய்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பலர் நிலன் பெயரை சொல்லி எனக்கு ஓட்டுப் போட்டதால் நான் ஜெயிப்பேன் என்று கூறியிருக்கிறார்கள். எனது திறமை இல்லாமல் இருந்திருந்தால் யாரும் எனக்காக ஓட்டு போட்டு இருக்க மாட்டார்கள். அவர்கள் அருகில் இருந்து நான் பட்ட கஷ்டங்களைப் பார்த்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

கடைசி நாளில் மனநெருக்கடி
தண்ணீரில் ஃபோலில் நிற்கும் டாஸ்க்கில் நான் ஒரு நாட்களுக்கு முன்பு மூன்று வேளையும் சாப்பிடாமல் நைட் முழுக்க அழுது கொண்டு இருந்தேன். அங்கு ஏற்பட்ட நெருக்கடியால் நான் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் இவ்வளவு மோசமான நாட்களை நான் அனுபவித்தது கிடையாது. அந்த நேரத்தில் என்னுடைய அம்மாவை மட்டும் தான் நினைத்தேன். நான் இதை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதுபடியே நான் வெற்றியும் பெற்றேன். அதனால் தான் என்னுடைய வெற்றியை பலர் ஏற்றுக் கொள்ள முடியாமல் என்ன வேணாலும் பேசிக் கொண்டு போகட்டும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் உண்மையாக உழைப்பை போட்டு தான் வெற்றியை பெற்று உள்ளேன் என்று உருக்கமாக கூறியுள்ளார். .












Click it and Unblock the Notifications