பிக் பாஸுக்கு பிறகு அம்பேத்கர் படத்திற்கு முன்பு விக்ரமன் செய்த செயல்... பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றோடு முடிவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டிலை அசீம் வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்ததாக விக்ரமன் ரன்னராக ஆகியிருக்கிறார். ஷிவின் ரன்னர் அப் ஆகி இருக்கின்றார்.
விக்ரமன் ஜெயிக்கவில்லையே என்று ரசிகர்கள் பலர் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தனக்கு கப்பு கிடைக்காவிட்டாலும் வெளியே வந்ததும் விக்ரமன் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு பூக்களை தூவி ஜெய் பீம் என்று வீர கோஷம் இட்டு இருக்கிறார்.

கடைசியில் மாறிய தீர்ப்பு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்த்த நிகழ்வுகள் கடைசி நேரத்தில் மாறிவிட்டது என்று ரசிகர்கள் ஒரு பக்கம் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அசீமுடைய ரசிகர்கள் மக்களின் தீர்ப்பு வென்று விட்டது என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனின் டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்று ரசிகர்கள் அதிகமானோர் கருத்து கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் எதிர்பாராத மாற்றம் நடைபெற்று விட்டது .இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து குறி வருகின்றனர்.

வெற்றிக்கு எப்போதும் போராட்டம் தான்
அறம் ஜெயிக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த விக்ரமன் மற்றும் விக்ரமுடைய ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் கிடைத்து விட்டது. இந்த நிலையில் தனக்கு டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் தனக்கு இத்தனை நாட்களாக ஆதரவு தந்த ரசிகர்களுக்கு விக்ரமன் நன்றி கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தான் ஒவ்வொரு இடத்திலும் போராடித்தான் வெற்றியை பெற்று இருக்கிறேன். அதனால் எனக்கு இது பெரிய விஷயமே இல்லை. வெற்றி எனக்கு அவ்வளவு எளிதில் எந்த இடத்திலும் கிடைத்தது இல்லை என்று உருக்கமாகவும் கூறி இருக்கிறார். ரன்னராக தேர்வாகி இருக்கும் விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அம்பேத்கர் படத்தின் முன்பு மலர்களை தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார்.

அம்பேத்கர்க்கு மரியாதை
தன்னுடைய ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி "ஜெய் பீம்" என்ற வீர கோஷத்தை எழுப்பி மகிழ்ந்திருக்கிறார். விக்ரமுடைய செயலை அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. "தோற்றாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு" என்கிற பாடல் தான் விக்ரமனுக்கு சரியாக இருக்கும். அறம் எந்த இடத்திலும் தோற்காது, அறம் வெல்லும் என்று விக்ரமனுடைய ரசிகர்கள் கருத்துக்களையும் பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

திட்டும் ரசிகர்கள்
ஆரம்பத்திலிருந்து விக்ரமனுக்கு சப்போர்ட் செய்து கொண்டு இருந்த ரசிகர்கள் பிரபலங்கள் கடைசி நேரத்தில் விக்ரமன் தோற்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை திட்டி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்து வந்த கமல்ஹாசன் கடைசி நேரத்தில் எதற்காக இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்று ரசிகர்கள் பலர் கமல்ஹாசனை டேக் செய்து கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications