அது மட்டும் தனியா துள்ளுது.. நாங்க கூந்தலை சொன்னோம்.. பிரியங்கா நல்கரியை நச்சரிக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குத்தாட்டம் போட்ட பிரியங்காவை நன்றாக ரசித்து விட்டு நக்கல் அடிக்கும் நெட்டிசன்கள் கமெண்ட் களால் கலாய்க்க ஓடோடி வருகிறார்கள்.

ரோஜா சீரியலில் ரோஜாவாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா தற்போது இன்ஸ்டாகிராமில் குட்டி நமிதா போல குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலம் படுத்தியிருக்கிறார்.

புசுபுசுவென சீரியலில் கலக்கிக்கொண்டு இருக்கும் சீரியல் ரோஜா...நிஜத்தில் கும்மென்று மல்லிகையை போன்று ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறார்.

ஆட்டத்தால் அசரவத்த ரோஜா

ஆட்டத்தால் அசரவத்த ரோஜா

துள்ளாட்டம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இது அதற்கெல்லாம் மேல குத்தாட்டம் என்று சொல்கிற மாதிரி தான் இப்போ சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்கரி மாடர்ன் உடையில் தன்னுடைய குட்டி தொப்பையோடு துள்ளல் ஆட்டம் போட்டு விட்டு கலக்கலாக அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அவருடைய ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் கமெண்ட் பண்ணி கலாய்க்கிறார்கள். ஒரு சில நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இவருடைய வீடியோஸ் மீண்டும் வைரலாக வளம் வருகிறது. அதிலும் சில ரசிகர்களுக்கு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே இல்லையாம். மீண்டும்மீண்டும் இந்த ஆட்டத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சில ரசிகர்களுக்கு இவர் என்ன பாட்டுக்கு ஆடுகிறார் என்று கூட தெரியவில்லை ஆனால் ஆட்டம் மட்டும் வேற லெவல் என்று தீப்பொறிகளை பறக்க விடுகின்றனர்.

பார்ப்பதற்கு இரண்டு கண்ணும் போதாது போல

பார்ப்பதற்கு இரண்டு கண்ணும் போதாது போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் ரோஜா சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா நல்கரியை ரசிகர்கள் தங்கள் வீட்டுப் பெண் போலவே கருதி வருகின்றனர். இவர் வீட்டு பெண்களை மட்டுமல்லாமல் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து வருகிறார். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவருகிறது. இவர் இதற்கு முன்பு அவருடைய சொந்த மொழியான கன்னடத்தில் ஒரு சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் இவருக்கு தமிழில் இருந்து இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் முதலில் ரொம்பவே பயந்து இருக்கிறார் ஏனென்றால் அவருக்கு தமிழ் தெரியாது என்பதால்தான்.

தனி சிறப்பு கொஞ்சம் இருக்கு

தனி சிறப்பு கொஞ்சம் இருக்கு

ஆனால் சீரியலுக்கு நடிக்க வந்த பிறகு தமிழ் நடிகைகளுக்கு கூட ஒருசிலருக்கு இவரைப்போல தமிழ் பேசத் தெரியவில்லை, அந்த அளவிற்கு தமிழில் அசத்தி வருகிறார். அதற்குக் காரணம் தமிழ் ரசிகர்கள் தனக்கு தந்த அங்கீகாரமும், தன் மீது வைத்திருக்கும் பாசம்தான் என்று இவர் பலமுறை கூறியிருக்கிறார். அவருடைய கொஞ்சி பேசும் தமிழை பார்த்து பல இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் இவருக்கு பாலோவர்ஸ்களாக மாறி விட்டனர். பொதுவாக கதாநாயகி என்றாலே ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைத்திருந்த சிந்தனையை மாற்றி அப்படி யாரு சொன்னா? கொழுக்கு மொழுக்கு என்று இருந்தாலும் நம்ம ரோஜா சீரியல் நடிகை மாதிரி இருந்தாலே போதும் என்று பல இளைஞர்கள் கூறுகின்றார்கள். ஆம் வெள்ளித்திரையில் எப்படி ஒரு காலத்தில் குஷ்புவுக்கு ரசிகர்கள் இருந்தார்களோ அது போலத்தான் தற்போது சின்னத்திரையிலும் பிரியங்கா நல் கரிக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகி வருக்கின்றனர்.

இளமை துள்ளுதே

இளமை துள்ளுதே

ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் இவர் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசி வருகிறார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு எல்லாம் தன்னுடைய அழகான தமிழால் செல்லமான பேச்சாலும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வருகிறார். என்னதான் இவர் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கூட பல ரீல்ஸ் வீடியோக்களையும் எடுத்து பதிவிட்டு வருகிறார்.இவருடைய வீடியோக்களை பார்த்ததுமே லைக்குகளையும் கமெண்ட் களையும் போடும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பெரிய டிராபிக் ஜாமே ஆகிவிடும். அந்த அளவிற்கு தான் பலரும் பார்த்து பார்த்து கமெண்டுகளை பதிவிடுகிறார்கள். தற்போதைய இவருடைய வீடியோவிற்கு கூட இவர் இந்த வீடியோவை பதிவிட்டு ஒரு சில மணி நேரங்களுக்குள் கமெண்டுகள் ஆயிரங்களை தாண்டி சென்று விட்டது. ஏனென்றால் வீடியோவின் தரம் அப்படி இருக்கிறது என்று ரசிகர்களும் கலக்கலாக பதில் அளித்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+