என் கணவர் அளவுக்கு என்னால் முடியாது.. ஆனால் அவர் மறைந்தாலும் நான் செய்வேன்! விவேக் மனைவி எமோஷனல்
சென்னை: நடிகர் விவேக்கை போலவே அவருடைய மறைவிற்கு பிறகு விவேக்கின் மனைவி தொடர்ச்சியாக மரங்களை நட்டு கொண்டு இருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் பேசுகின்றார். இந்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் அதை பாராட்டி வருகிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
சோகத்தில் இருப்பவர்களின் சோக துக்கங்களை துரத்துவது காமெடிதான். அந்த காமெடியிலும் சமூக சிந்தனையை ஏற்படுத்த முடியும் என்று விவேக் நிருபித்திருந்தார். தன்னுடைய படங்களில் அதிகமாக சமூக சிந்தனை சார்ந்த காமெடியிலேயே நடித்திருப்பார். ஆரம்ப காலகட்டத்தில் ஒல்லியான தேகத்தோடு துருதுருவென கேரக்டரில் நடித்து பிறகு கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

அப்துல் கலாமின் தீவிரமான ரசிகரான விவேக் தன்னுடைய ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகத்தையும் தவிக்க விட்டு விட்டு ஏப்ரல் 17, 2021 ஆம் ஆண்டு உடல்நிலை குறைபாட்டால் மரணம் அடைந்தார். இப்ப வரைக்கும் அவருடைய திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவரைப் பற்றி ஃபீல் பண்ணி வருகிறார்கள்.
நடிகை ராதிகாவை கைநீட்டி அடிச்சது..! இதை மறக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட் ரகசியங்களை பகிர்ந்த நீலிமா
தன்னுடைய வாழ்நாளில் அதிகமான மரங்களை நட வேண்டும் என்று தீவிர ஆசையோடு இருந்த விவேக்கின் கனவு பாதியிலேயே நிறைவேறாமல் போய்விட்டது. 37,000 மரங்களை மட்டுமே நட்டு இருந்த விவேக்கின் ஆசையை அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் சிலர் நிறைவேற்றி வருகிறார்கள். விவேக்கின் சார்பாக அவருடன் கடைசி வரை இருந்த செல் முருகன் போன்ற நடிகர்கள் தொடர்ச்சியாக மரங்களை நட்டு வருகிறார்கள்.
நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவகராகவும் விவேக் பலருக்கும் உதவிகளை செய்திருந்தார். இனி இதுபோல் ஒருவரை பார்ப்பது அரிது என்று பலரும் அவர் குறித்து பேசி வருகிறார்கள். சினிமா துறையில் பாலச்சந்தர் மூலமாக அறிமுகமான விவேக் ஆரம்பத்தில் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கும் படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்து பிறகு 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்து நடிகராக மாறி இருக்கிறார்.
அதற்கு பிறகு தன்னுடைய திறமையின் மூலமாக காமெடி நடிகராகவும் புகழின் உச்சத்தில் வலம் வந்தார். அந்த நேரத்தில் தான் அருள் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நந்தினி, தேஜஸ்வாணி, பிரசன்னா குமார் என்ற மூன்று குழந்தைகள் பிறந்தனர். இதில் பிரசன்னா குமார் தன்னுடைய 13 வயதிலேயே உடல்நிலை சரியில்லாமல் இறந்து போய்விட்டார்.
தன்னுடைய மகனின் இழப்பு குறித்து அதிகமான வேதனை அடைந்து விவேக் அதை தன்னுடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறார். ஆனாலும் அந்த வேதனையில் இருந்து மீண்டு வந்து சினிமாவில் நடித்திருக்கிறார். பலரையும் சோகங்கள் மறந்து சிரிக்க வைத்த விவேக் வாழ்க்கையில் பெரிய ஆறாத வடுவாக அவருடைய மகனின் இறப்பு இருந்திருக்கிறது.
விவேக் இறந்து வருடங்கள் கடந்து விட்டாலும் அவருடைய மனைவி அருள் செல்வி சமீபத்தில் கூறுகையில் என்னுடைய கணவர் 37 லட்சம் மரங்களை நட்டார் அவர் மாதிரி என்னால் முழுமையாக மரம் வளர்ப்பில் ஈடுபட முடியாது என்றாலும் நான் என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு,
தாயாகவும் தந்தையாகவும் நேரம் ஒதுக்கி என்னால் முடிந்த அளவிற்கு மரக்கன்றுகளையும் நட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அருள்செல்விக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications