இப்படி ஒரு மகள் இருக்கும்போது.. வலியாவது ஒன்னாவது.. அர்ச்சனா போட்ட சூப்பர் போஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உண்மையில் மகள்கள் நமக்கு 2ம் தாய் என்று சொல்வது 100க்கு 100 அர்த்தமுள்ளது. அதை அர்ச்சனாவின் மகள் நிரூபித்து வருகிறார். அம்மாவுக்கு முழுத் துணையாக இருப்பது இவர்தான்.

மகள்களைப் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் கடைசி வரைக்கும் ஆதரவு இருந்து கொண்டேதான் இருக்கும் என்று சொல்வார்கள். அதையும் அர்ச்சனாவின் மகள் நிரூபித்தபடி இருக்கிறார். ஒவ்வொரு விஷயத்திலும் தான் எவ்வளவு மெச்சூர்டாக இருக்கிறோம் என்பதை நிரூபித்து வருகிறார்.

அம்மாவுக்கு உறுதுணையாக ஒரு மகளாக, ஒரு தத்துவார்த்த ஆதரவாக இந்த சின்ன வயதிலேயே அசத்திக் கொண்டிருக்கிறார் அர்ச்சனாவின் மகள் சாரா. உண்மையில் இவர்தான் அம்மாவுக்கு மிகப் பெரிய பலமாக திகழ்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆபரேஷன்

ஆபரேஷன்

ஆபரேஷனுக்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகு அர்ச்சனா முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் பார்த்து உருகிப் போய் இருக்கின்றனர் அவருடைய ரசிகர்கள். உடைந்து போன நேரத்தில் என்னுடைய மகள் கூறிய அந்த வார்த்தைகள் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்து இருக்கிறது என நெகிழ்ந்து போயுள்ளார் அர்ச்சனா. நம்பிக்கை வீண்போகவில்லை அதனால்தான் கஷ்டத்தை தகர்த்தெறிந்து விட்டு வந்து விட்டார் என ரசிகர்களும் ஆறுதல்களை விடாமல் கூறுகின்றனர்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்

கொஞ்ச நாள் முன்னாடி தலையில் சிறிய பிரச்சனை என்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போவதாக அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். உற்சாகமாக பல நிகழ்ச்சிகளை நடந்திக் கொண்டிருந்தாரே என்று அவர்கள் அதிர்ச்சி ஆகி விட்டனர். பதறிப் போன அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வந்தனர். இந்த நிலையில் இவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து விட்டது.

மகளின் தைரியம்தான்

மகளின் தைரியம்தான்

ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பி விட்டார் அர்ச்சனா. சிகிச்சை முடிந்து சோர்வான நிலையில் வீட்டிற்கு திரும்பிய இவர் தற்போது உடல்நலையில் நல்ல மாற்றத்தை கொண்டிருக்கிறார். முழு ஓய்வில் இருந்து வருகிறார். அது அவருடைய மன தைரியமும் ரசிகர்களின் வேண்டுதல்களும் காரணம் என்றாலும் அதையெல்லாம் மீறி அவருடைய மகள் அவருக்கு கொடுத்த தைரியமும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உண்மையில் அர்ச்சனாவின் மகள்தான் அவருக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்து வருகிறார்.

தாயைப் போல பிள்ளை

தாயைப் போல பிள்ளை

பொதுவாக எப்போதுமே பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் செல்லமாக இருப்பார்கள். ஆனால் பல விஷயங்களை அம்மாவிடமிருந்து கற்றுக் கொள்ளும். அதிலும் அர்ச்சனாவின் மகள் சாரா தாயைப் போலவே சுட்டித்தனம் ஆகவும் இந்த வயதிலேயே தைரியமானவர் ஆகவும் இருந்து வருகிறார். இந்த வயதிலேயே ரொம்ப மெச்சூர்டாக இருக்கிறார் சாரா. பலரையும் இதன் மூலம் கவர்ந்திழுத்துள்ளார் சாரா. அதனால் தான் அவருடைய அம்மா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நேரத்திலும் தைரியமூட்ட முடிந்திருக்கிறது.

 ராக்ஸ்டார் அம்மா தான்

ராக்ஸ்டார் அம்மா தான்

உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் மனதும் ரொம்பவே சோர்வடைந்து விடும். அந்த சோர்வான நேரத்தில் அம்மா நீங்க ஒரு ராக்ஸ்டார் அம்மா, வலியை போக்க தைரியமாக மீண்டு வருவீர்கள் என கூறியிருக்கிறார். இந்த வார்த்தைதான் இவருக்கு தைரியத்தை கொடுத்ததாம். அதனால்தான் இப்போது நல்லபடியாக வீடு வந்து சேர்ந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்போது வீட்டுக்கு வந்த பிறகும் கூட மகள்தான் அர்ச்சனாவுக்கு பக்கத் துணையாக இருந்து வருகிறார்.

குறையாத ரசிகர்களின் பாசம்

குறையாத ரசிகர்களின் பாசம்

உடல்நிலை சரியாகி வீட்டிற்கு வந்த பிறகு அர்ச்சனா போட்ட முதல் போஸ்ட் பார்த்து அவருக்கு ரசிகர்கள் மீண்டும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அழித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களும் எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் நிறைய வேலை இருக்கு அதனால சீக்கிரமா வந்துடுன்னு கூறியிருக்கின்றனர். சக நடிகர் நடிகைகள் கோ ஆங்கர்கள் என பலரும் கூட அர்ச்சனாவுக்காக பிரார்த்தனை செய்துள்ளனர்

2 வார இடைவெளி

2 வார இடைவெளி

சரியாக 2 வாரங்களுக்கு முன்புதான் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் அர்ச்சனா. போவதற்கு முன்பு ஒரு நீண்ட போஸ்ட்டைப் போட்டு விட்டுப் போனார். அதில் தனக்கு என்ன பிரச்சினை என்பதையம் அவர் விளக்கியிருந்தார். அது முதலே ரசிகர்கள் அவருக்காக பிரார்தித்தபடி இருந்தனர். கூட நடிக்கும் நடிகர் நடிகைகளும் நம்பிக்கையூட்டி செய்தி போட்டபடி இருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது சுகமாகி வீடு திரும்பியுள்ளார் அர்ச்சனா.

மகளால் மகிழ்ச்சி

மகளால் மகிழ்ச்சி

இதுதொடர்பாக அர்ச்சனா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் மகள் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நீதாம்மா ராக் ஸ்டார். உனக்குள் உள்ள சாத்தானை வெளியே துரத்தி விடு. பிறகு வலியாவது ஒன்னாவது என்று அவள் கூறும்போது இப்படிப்பட்ட மகள் அருகில் இருக்கும்போது அதை விட பாதுகாப்பான விஷயம் என்ன இருக்க முடியும். வலியாவது ஒன்னாவது. நான் எனது மகளின் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறேன் என்று நெகிழ்ச்சி பிளஸ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அர்ச்சனா.

ரசிகர்களின் உற்சாகம்

ரசிகர்களின் உற்சாகம்

அர்ச்சனாவின் போஸ்ட்டுக்கு ரசிகர்களும் உற்சாகம் தெரிவித்துள்ளனர். நிறைய கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. வாட் எ மிராக்கிள் என்று ஒரு ரசிகர் வியப்பு தெரிவித்துள்ளார். ராக்ஸ்டார் என்று பலரும் பாராட்டியுள்ளனர் சிலர் அக்கா நல்லாருக்கீங்களா என்று கண்ணீர் விட்டுள்ளனர். சிலர் பியூட்டிபுல்லாக இருக்கிறீர்கள் என்று சொல்லியுள்ளனர். பைட் பேக் அச்சும்மா என்று ஒருவர் நம்பிக்கையூட்டியுள்ளார். சீக்கிரம் டிவியில் பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம் என பலர் நம்பிக்கையூட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+