
கணவரோடு "மகிழ்ச்சியை” பகிர்ந்த விஜே பாவனா..இதை மறைத்து வைத்திருந்திருக்கிறாரே?குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சையமான விஜே பாவனா சமூக வலைத்தளத்தில் கணவரோடு எடுத்த புகைப்படத்தோடு வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
மாலத்தீவில் தன்னுடைய திருமண நாளை வெகு விமர்சனமாக கொண்டாடிய விஜே பாவனா தனக்கு திருமணம் முடிந்து பத்து வருடங்கள் முடிந்து விட்டது என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
காதலனோடு புது மகிழ்ச்சியை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்.. குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்

திருமண நாள் கொண்டாட்டம்
தற்போது பாவனா அதிகமாக டிவி நிகழ்ச்சிகளில் காணவில்லை என்றாலும் மாடலிங்கில் செம பிஸியாக மாறிவிட்டார். அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோசூட்கள் இன்ஸ்டாகிராமில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த மாதிரிதான் தற்போது இவர் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோஸ் வேற லெவல் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கன்னாபின்னாவென கமெண்டுகளை கொட்டுகிறார்கள். தன்னுடைய கணவரோடு பதினோராவது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். 10 வருடங்கள் முடிந்துவிட்ட திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை இவர் இவருடைய கணவரோடு நெருக்கமாக வெளிக்காட்டி இருக்கிறார். மாலத்தீவில் அவசர அவசரமாக இவருடைய திருமண நாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டிருந்தாலும், எதிர்பார்க்காத விதமாக மகிழ்ச்சியாக இருப்பதாக இவர் கேப்ஷனோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திறை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

ரேடியோ ஜாக்கியாக அறிமுகம்
ரேடியோ ஜாக்கியாக தன் வாழ்க்கையைத் துவங்கிய பாவனா.. விஜே வாக ராஜ் டிவி மூலம் களம் புகுந்தாலும், பாவனாவின் பாவனைகளை பப்ளிகில்.. பக்காவாக ரீச்சாக வைத்தது என்னவோ.. விஜய் டிவிதான். எம்பிஏ பட்டதாரியான பாவனா ஒவ்வொரு துறையாக படிப்படியாக முன்னேறி வந்திருந்தாலும், பெரும்பாலான விஜே கலை போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி.. பத்தோடு பதினொன்றாக.. இருக்க விரும்பவில்லை. விஜே துறையிலே தனித்து தெரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். அதற்கேற்றார்போல் அவருக்கு வரமாய் அமைந்ததுதான் 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' தமிழ் சேனல்.

விளையாட்டு வர்ணனையாளர்
பல விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வதோடு சரி... விளையாட்டு வர்ணனையாளர் ஆவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. விஜே துறையில் தனித்து தெரிய வேண்டும் என்ற ஆசையில் இருந்த பாவனாவிற்கு விஜே விற்கும் வர்ணனையாளருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால்.. வர்ணனையாளர் துறையை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக இருந்தது. வெளிநாட்டில் மட்டுமே பெண் விளையாட்டு வர்ணனயாளர்கள் இருந்ததால்,தமிழ்நாட்டின் முதல் பெண் விளையாட்டு வர்னையாளராக பாவனா செயல்பட்டது இவரை தனித்துக் காட்ட ஆரம்பித்தது.

காந்தக் குரல்
பாவனா, இவருடைய வசீகரிக்கும் குரலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர், ஏர்டெல் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சொந்த குரலால் அடிக்கடி பாட்டு பாடியும் அனைவரையும் அசத்தியிருக்கிறார். அதனாலேயே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் போரடிக்காமல் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் வண்ணம் இருக்கும். இவருடைய நடிப்பை பார்த்து தான் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார். அதனாலும் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான்.