6 வருஷமா விஜய் டிவிக்கு வராத காரணம் இதுதான்..! அவங்க சொன்ன வார்த்தை.. மனம் திறந்த வி.ஜே பாவனா
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்த விஜே பாவனா ஆறு வருடங்களாக விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளராக கலந்து கொண்டிருந்தார். அது குறித்து சமீபத்தில் பேட்டியில் தான் எதனால் அந்த ஆறு வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று பேசி இருக்கிறார்.
அதோடு தான் வரவே மாட்டேன் என்று இந்த விஜய் டிவி நிகழ்ச்சிக்கு மீண்டும் எதற்காக வந்தேன் என்பது பற்றியும் பாவனா பேசியிருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் விஜே பாவனா 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக தான் வலம் வந்து இருந்தார். ஆரம்பத்தில் ராஜ் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்து பிறகு ஸ்டார் விஜய் சேனலில் முழு நேர தொகுப்பாளராக மாறி இருந்தார். அதுவும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், airtel சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தன்னுடைய தனித்துவத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் பதிந்திருந்தார்.
இந்த நிலையில் தான் 2017 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு பத்திரிக்கையாளராக தேர்வாகி இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மற்றும் கபடி லீக்கின் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கினார். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனையாளராக பணியாற்றி அந்த சீசனில் இரண்டு பெண் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு பாடலை இவரே பாடி அதை தன்னுடைய youtube பக்கத்தில் பகிர்ந்து அரை மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. அது போல மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை திருமணம் செய்து மும்பையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் பாவனா தொகுப்பாளராக கலந்து கொண்டு இருந்தார். அது குறித்து சமீபத்தில் பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் கடந்த ஆறு வருடங்களாக விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
அதற்கு காரணம் விஜய் டிவியில் இருந்து என்னை நிகழ்ச்சிக்கு கூப்பிடவில்லை. அதனால் இனி நான் விஜய் டிவிக்கு வரப்போவதில்லை என்றுதான் நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் குளோபல் டீம் என்னை தொடர்பு கொண்டு பேசினாங்க. அவங்க சொல்லித்தான் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியை மட்டும் நான் தொகுத்து வழங்கினேன். அதுவும் அவர்கள் நீங்கள் ஒருநாள் மட்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குங்க... மீண்டும் நீங்க பழைய கம்பேக் கொடுக்கணும் என்று நாங்கள் நினைக்கிறோம் என சொன்னாங்க.

மாகபா தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். அதற்கு பிறகு பிரியங்கா வந்துடுவாங்க என்று சொன்னாங்க அந்த நேரத்தில் கிரிக்கெட் மேட்ச் போயிட்டு இருக்கு அது முடியட்டும் வெற்றிக்கோப்பையோடு நான் வருகிறேன் என்று சொன்னேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி நடக்கல. கிரிக்கெட்டில் இந்தியா தோற்று விட்டோம். அதனால் உடைந்து போன என்னுடைய மனதை ஒட்ட வைப்பதற்காக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருந்தேன் என்று விஜே பாவனா கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications