போற வர்றவங்க எல்லாம் அனுதாபமாக பாக்குறாங்க..2021 ரொம்ப மோசமாக இருக்கு..புலம்பும் மணிமேகலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகை மணிமேகலை கார் ஆக்சிடென்ட் ஆனதால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்

ஏற்கனவே இவருக்கு இப்போது தான் உடல்நிலை சரியானது, அதுக்குள்ள இப்படியா என்று பலர் புலம்பி வருகின்றனர்.

ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் வீடியோவை எடுத்து அதை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மணிமேகலைக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் மட்டுமல்லாமல் நெகட்டிவ் கமெண்ட்களும் வந்து கொண்டு இருக்கிறது.

விஜே மணிமேகலைக்கு என்ன ஆச்சு

விஜே மணிமேகலைக்கு என்ன ஆச்சு

விஜய் டிவியின் தொகுப்பாளர் மணிமேகலை என்று சொன்னால் அனைவருக்கும் டக்கென்று நினைவிற்கு வந்து விடும் அந்த அளவிற்கு பிரபலமான இவர் சென்ற கார் ஆக்சிடென்ட் ஆகி விட்டது. இந்த செய்தி தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதுவும் அவர் கார் வாங்கிய ஒரு சில மாதங்களே ஆன நிலையில் இவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அது என்ன நடந்தது என்பதை பற்றி விஜே மணிமேகலை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியே சென்ற கார் புதிய கார் இல்லையாம் வீட்டிலிருந்த பழைய காரில்தான் அன்று வெளியே சென்றிருந்தார். அவர் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் எதிரே வந்த லாரி இவருடைய காரில் வந்து மோதி விட்டதாகவும் அதில் முன் பக்கத்தில் சிறிது சிராய்ப்பும், ஒரு டயரும் சேதமடைந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சந்தோஷமான செய்தி வருமா

சந்தோஷமான செய்தி வருமா

இவர் தற்போது விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது இவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் அதிகமாக வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இவருக்கு ஒரு முறை ஆக்சிடென்ட் ஆகி இருக்கிறது. அந்த நேரத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. தற்போது மீண்டும் ஆக்சிடென்ட் ஆகி இருப்பதால் குட்டி மணி வரப் போகிறாரா என்று அவருடைய ரசிகர்கள் இந்த இக்கட்டான நேரத்திலும் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருக்கும்போது சுடு தண்ணீர் பட்டு காயம் ஏற்பட்டு அந்த நிகழ்ச்சியில் சிறிது நாட்கள் இவர் வராமல் இருந்து கொண்டிருந்தார்.

மனதில் நிற்கும் முகம்

மனதில் நிற்கும் முகம்

புதுசு புதுசாக எத்தனையோ தொகுப்பாளர்கள் அறிமுகமாகி கொண்டிருந்தாலும் ஒருசில தொகுப்பாளர்கள் தான் ரசிகர்களின் மனதில் டக்கென்று நினைவிற்கு வந்து விடுகின்றனர். அந்த வகையில் விஜே மணிமேகலையும் ஒருவர். இவர் ஜாலியாக படபடவென பேசும் பேச்சை கேட்பதற்காகவே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கொஞ்ச நாட்கள் இல்லாததால் இவருடைய ரசிகர்கள் எப்போது மணிமேகலை மீண்டும் நிகழ்ச்சிக்கு வருவார் என்றுதான் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு பிறகு இவர் உடல்நிலை சரியாகி இவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் அடிக்கடி வைரல் ஆகி கொண்டிருந்தது.

விபத்து பற்றிய வீடியோ

விபத்து பற்றிய வீடியோ


விஜே மணிமேகலை தன்னுடன் பணியாற்றிய நடன மாஸ்டரை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இவர்கள் இருவரின் காதல் திருமணம்
பலருக்கும் தெரிந்திருந்தாலும் இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மணிமேகலைக்கு ஆக்சிடென்ட் என்ற செய்தி பெரும் வைரலாக பரவி வந்த நிலையில், காருக்கு மட்டும்தான் அடிபட்டிருக்கிறது எனக்கு ஒன்றுமில்லை என்று இவர் ஒரு விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் ஆக்ஸிடெண்ட் ஆகி கார் நடுரோட்டில் நின்று கொண்டிருந்த நேரத்திலும் வீடியோ எடுத்து அதை இப்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோக்கள் தான் தற்போது பலருடைய எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+