பண்ணை வீட்டில் மணிமேகலை செய்த அட்ராசிட்டி.. அப்போ எல்லாம் ‘நடிப்பா’.. இப்படி பண்ணலாமா? குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: விஜே மணிமேகலை தான் சொந்த ஊரில் கட்டிக் கொண்டிருக்கும் பார்ம் ஹவுஸில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். அவர் செய்த செயல் இப்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவரான மணிமேகலை சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். தான் செய்யும் சின்னச்சின்ன செயல்களையும் சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டால்தான் அவருக்கு அன்றைய பொழுது போகும். சோசியல் மீடியாவில் youtube சேனலில் பயங்கர பிசியாக இருக்கிறார்.

தவறாத வீடியோக்கள்
தன்னுடைய பாலோவர்ஸ்கள் தான் செய்யும் செயல்களை லைவாக பார்க்க விரும்புவார்கள் என்று, தான் சின்னதாக வாங்கும் பொருட்கள் முதல் பெரியதாக வாங்கும் பொருள்கள் வரை எல்லாவற்றையும் வீடியோ போட்டு ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்த போது தனக்கு இரண்டு வீட்டில் சப்போர்ட்டும் இல்லாததால் அதிகமாக கஷ்டப்பட்டதாகவும் அப்போது தன்னுடைய ரசிகர்கள் தான் தனக்கு தன்னம்பிக்கையும் வாழ்க்கையை முன்னேற்றத்திற்கு உத்வேகமும் கொடுத்தது.
சமூக வலைத்தளத்தில் பிஸி
அதனால் நான் எந்த பொருள் வாங்கினாலும், என்னுடைய கஷ்டங்கள் சந்தோஷத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று மணிமேகலை பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அதுபோலவே அவர் ஒருநாள் யூட்யூப்பில் வீடியோ போடவில்லை என்றாலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவருடைய ரசிகர்கள் என்ன ஆச்சு ஏன் வீடியோ இன்னும் வரலையே என்று உரிமையாக கேட்பதையும் கமெண்ட்களில் பார்க்க முடிகிறது.
காதல் திருமணம்
மணிமேகலை கல்லூரி படிக்கும்போது ஸ்டார் மியூசிக்கல் வேலைக்கு சேர்ந்திருந்தார். அதற்கு பிறகு 7, 8 வருடங்களாக அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைப் தொடர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் மணிமேகலை தொகுத்து வழங்கி வந்தார்.
விலகிய மணிமேகலை
இந்த நிலையில் தான் கடந்த வருடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அவர் அதிரடியாக வெளியேறியது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மணிமேகலை மறைமுகமாக பேசியது கூட பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. மணிமேகலைக்கு சப்போர்ட்டாக ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி இருந்தனர்.
பிரியங்காவோடு சண்டை
அதுபோல பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக விஜய் டிவி பிரபலங்கள் சிலர் போஸ்ட் போட்டு மணிமேகலையை சீண்டிப் பார்த்தனர். இந்த நிலையில் மணிமேகலைக்கு இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியிலும் தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருக்கிறார்.

பண்ணை வீட்டில் என்ஜாய்
அதே நேரத்தில் கடந்த வாரத்தில் ரம்ஜான் பண்டிகையின் போது மணிமேகலை அவருடைய கணவரோடு ரம்ஜான் கொண்டாடி எடுத்த புகைப்படங்களை போஸ்ட் போட்டிருந்தார். அது அதிகமாக வைரலானது. அதைத் தொடர்ந்து இப்போது சூட்டிங் இல்லாததால் தன்னுடைய சொந்த ஊரில் தான்கட்டி வரும் பண்ணை வீட்டிற்கு விசிட் அடித்திருக்கிறார்.
ரசிகர்களின் கமெண்ட்
அங்கு வேலை செய்கிறேன் என்கிற பெயரில் தன்னுடைய கணவரை துடைப்பத்தால் அடித்து இருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மணிமேகலை பகிர்ந்திருக்கும் நிலையில் ஹுசைனுக்கு அதிகமான சப்போர்ட் குவிந்து வருகிறது. மணிமேகலை இப்படி செய்யலாமா? கணவரை துடைப்பத்தால் அடிக்கலாமா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
எல்லாமே நடிப்பா
அதுபோல இது எல்லாமே கன்டன்ட் வீடியோ தான்... மணிமேகலை டேக் பை டேக் போட்டோஸ் எடுத்து அதை போஸ்ட் போட்டு இருக்கிறார் என்று மணிமேகலையின் ரகசியத்தையும் ரசிகர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை மணிமேகலையும் உண்மை என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் சொல்லி வச்சு தான் இந்த புகைப்படங்கள் எடுத்து இருக்கிறோம் என்பது போல அவர் கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதில் பார்த்ததும் ரசிகர்கள் அப்போ இதெல்லாம் நடிப்பா கோபால் என்று மணிமேகலையை கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications