ரசிகர்களின் கேள்விக்கு காண்டான விஜே பார்வதி கொடுத்த பதில்... இவ்வளவு டீட்டைலாவா பேசணும்..!!
சென்னை: தனது அம்மாவின் பிறந்தநாளையொட்டி பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில் வாழ்த்துக்களுடன் மட்டுமின்றி தன் குடும்பம் பற்றிய விபரங்களை பகிர்ந்து.. போதுமா? டீட்டைல்? என்று கேட்டுள்ள விஜே பார்வதியிடம் போதாது என்று கூறி இன்னும் பல விபரங்களை கமெண்ட்களில் விஜே பார்வதியின் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
எதுவாக இருந்தாலும் ஓபன் ஆக பேசித்தான் விஜே பார்வதிக்கு பழக்கம் போல என்று பலர் கலாய்த்தும் வருகின்றனர்.

சின்னத்திரை மியா கலிபா
இன்றைய இளைஞர்களுக்கு விஜே பார்வதி பற்றி அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு சமூக வலைதளம், மற்றும் யூடியூப் சேனல் மூலம் விஜே பார்வதி மிகவும் பிரபலம்.பொதுவாக பெண்கள் ஆண்களிடம் கேட்க கூச்சப்படும் கேள்வியை எந்தவித கூச்சமும் இல்லாமல் அறிமுகமில்லாத ஆண்களிடம் கூட அசால்டாக கேட்பதுதான் விஜே பார்வதியின் ஸ்பெஷல். அவர் பிரபலமாவதற்கு அதுவும் ஒரு காரணம்.மியா கலிபா போல் கண்ணாடியை மாட்டி அலப்பறை செய்வதால் சின்னத்திரை மியா கலிபா என்று இவரை கலாய்ப்பதும் உண்டு. பெரும்பாலும் 'ஆண்டி' என்ற அடைமொழியில் தான் நெட்டிசன்கள் இவரை அழைப்பதுண்டு.

வாழ்த்துச் செய்தியால் வலையில் சிக்கியது
தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்பிய விஜே பார்வதி வாழ்த்துக்களை மட்டும் கூறாமல் மேலும் சில விபரங்களை கூறி நெட்டிசன்கள் வலையில் வான்டட் ஆக சிக்கியுள்ளார்."அம்மாவுக்கு இன்று 68 வயது.வலிமையான புத்திசாலி ஆன்மா.எனக்கு இப்போது 26 வயது, என் அம்மா 40 வயதைத் தாண்டியபோது நான் பிறந்தேன். எனக்கு 36 வயதில் ஒரு சொந்த அண்ணனும், 30 வயதான சொந்த சகோதரியும் உள்ளனர். போதுமா? விவரங்கள்." என்று பதிவிட்டுள்ளார்

கணக்கு தப்பாச்சே
இந்த வாழ்த்து செய்தியை பார்த்த நம்ம இணைய குறும்பர்கள் விஜே பார்வதியின் அம்மாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவரது பதிவை வைத்தே அவரை கமெண்ட்களில் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு வருகின்றனர்.அம்மாவிற்கு 68 வயது ஆவதாக கூறும் பார்வதி அம்மாவிற்கு 40 வயது இருக்கும் பொழுது தான் பிறந்ததாகவும் கூறியுள்ளார். அப்படிப் பார்த்தால் பார்வதிக்கு 28 வயது தானே ஆக வேண்டும் தனக்கு 26 வயது என்று பொய் சொல்கிறார் என்று ஒரு நெட்டிசன் கணித புலியாக மாறி கண்டுபிடித்துள்ளார்.

டீட்டைல.. டீட்டைலா கேட்டு வெயிட்டிங்
விபரங்கள் போதுமா? என்று கேட்டுள்ள விஜே பார்வதியிடம், போதாது.. போன் நம்பர் இருந்தால் அனுப்புங்கள் என்று ஒரு ரசிகர் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.இன்னொரு ரசிகர் ஒரு படி மேலே போய் ஜாதகமும், வீட்டு முகவரியும் அனுப்புங்கள், எங்கள் வீட்டில் கூறி பெண் பார்க்க வரச் சொல்கிறேன் என்று விஜே பார்வதிக்கு அப்ளிகேஷன் போட்டுள்ளார்.விஜே பார்வதி போட்டுள்ள டீடைல் பத்தாமல் மேலும் டீடைல் கேட்டிருக்கும் ரசிகர்களை ஏமாற்றாமல், கேட்டுள்ள விபரங்களை அனுப்புவாரா!? என்று எதிர்பார்த்து கமெண்ட் பாக்ஸில் கால் எடுக்க காத்து நிற்கின்றனர் விஜே பார்வதியின் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications