சிவப்பு டிரஸ்ஸு.. ரம்யா கையில் கம்பு.. செம சுத்து.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: தொகுப்பாளராக அறிமுகமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் VJ ரம்யா.
முன்பு புசுபுசுனு இருந்த இவர் இப்போ லாக்டவுன்ல கடுமையான எக்சசைஸ் மற்றும் டயட் மூலமாக உடம்பை குறைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய ரசிகர்களுக்காக தினமும் டயட் விஷயங்களையும் எக்சர்சைஸ் விஷயங்களையும் தன்னுடைய வீடியோவில் யூடியூப் சேனல் மூலமாக பகிர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

உடல் எடைக் குறைப்பு
அது உடல் எடை குறைப்பதற்கு ஆசைப்படுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது இவர் சிலம்பம் சுற்றி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். இவருடைய போல்டான கேரக்டர் சில ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அந்த வகையில் இப்போது இவர் செய்திருக்கும் இந்த செயலும்
ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

சிலம்பாட்டம்
சிவப்பு நிற டிரஸ்ஸில் மொட்டை மாடியில் நின்றபடி சிலம்பம் சுற்றுகிறார் ரம்யா.. மெதுவாகத்தான் சுற்றுகிறார். ஆனால் பின்னணியில் போட்டுள்ள பேட்ட பட மியூசிக்தான் ரம்யாவை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அந்த இசைக்கு அடிமையான அனைவருமே வந்து குவிந்து பாராட்டித் தள்ளியுள்ளனர். ரம்யாவும் பார்க்க வேறு லெவலில் இருக்கிறார்.

அழகான பேச்சு
இவர் 2004 இல் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ,மற்றும் நம்ம வீட்டு கல்யாணம் அப்படி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இவருடைய படபடப்பான பேச்சும் அழகான எக்ஸ்பிரஷன் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

சிங்கிளாக இருந்தாலும் கெத்து
இவருக்கு திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும் அதன்பிறகு தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனியாக வாழ்ந்தாலும் தன்னம்பிக்கையோடு வாழ்கிறேன் என்று கெத்தாக சொல்லியிருக்கிறார். இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்ச்சிகளை மறப்பதற்காக தனது மனதை வேறுவிதமாக கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்து இருக்கும்போதுதான் எக்சர்சைஸ் இல் ஆர்வத்தை அதிகப்படுத்த இருக்கிறார்.

செம ஸ்லிம்மு
முழுநேரமும் தன் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி புதுசு புதுசாக உடற்பயிற்சிகளை செய்து கொண்டே இருக்கிறாராம். இது இவர் அழகை மட்டுமல்ல தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறதாம். இந்த லாக்டோன் காலங்களில் சூட்டிங் எதுவும் இல்லாததால் இவர் வீட்டில் எக்சர்சைஸ் மற்றும் வீட்டு வேலைகளை செய்து கொண்டு தன்னுடைய ரசிகர்களுக்கு விதவிதமாக போட்டோக்களும் எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார்.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்
இதை பார்த்த ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள் .சில ரசிகர்கள் இவரை கலாய்ச்சி தப்பான கமெண்ட்கள் போட்டாலும் இவர் அதற்கு கொஞ்சம் கூட வருத்தப்படாமல் தன்னுடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். நீங்கள் அடுத்ததாக திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பார்ப்போம் அது காலம் தான் பதில் சொல்லும்.

நல்ல துணை அமையட்டும்
நல்ல ஒரு வாழ்க்கை துணை கிடைத்தால் இந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. வசதி வாய்ப்புகள் தேவை இல்லை என் மேல் முழுமையாக பாசம் செலுத்துபவராக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். சில திரைப்படங்களில் இவர் சின்ன சின்ன ரோலில் நடித்து இருந்தாலும் தனக்கான அங்கீகாரத்தை இன்னும் சிறப்பானதாக ஆக்கவேண்டும் என்பதில் முழு கவனமாக இருக்கிறார்
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications