அம்மா "அதற்கு” அடிமை ஆவதற்கு காரணம்? அம்மாவின் இறப்பு நேரத்தில் நடந்ததைப் பற்றி கண்ணீரோடு பேசிய வனிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் அவருடைய அம்மாவின் நினைவுகளை பற்றி சமீபத்தில் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை வனிதாவின் அம்மாவான மஞ்சுளா இறக்கும்போது வனிதாவின் அப்பாவான விஜயகுமாரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு தான் இறந்து போனாராம் ஆனால் அதை அவர் நிறைவேற்றவே இல்லை என்று வேதனையோடு தெரிவித்து இருக்கிறார்.

அம்மாவாக சொல்லவில்லையாம்

அம்மாவாக சொல்லவில்லையாம்

நடிகை வனிதாவின் பெயரை சொன்னாலே சமூக வலைத்தளத்தில் டக்கென்று யாருக்கும் தெரிந்துவிடும் அளவிற்கு அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் தான். ஆனால் அவர் சின்னத்திரை வெள்ளித்திரை என பிசியாக நடித்துக் கொண்டும் சமூகவளைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் .இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.அதில் இவருடைய அம்மா இறப்பதற்கு முன்பு பிரஸ் மீட்டிங்கில் வனிதா என்னுடைய மகளே இல்லை இனி எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசியது குடும்பத்தினர் அனைவரும் சொல்லிக் கொடுத்ததன் பேரில்தான் அவர் அப்படி பேசினார் .அப்படி பேசும்போது அவருடைய உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தது. அதை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டனர் என்று கூறி இருக்கிறார்.

ரஜினியால் கிடைத்த அனுமதி

ரஜினியால் கிடைத்த அனுமதி

அது மட்டுமல்லாமல் வனிதாவின் அம்மா இறப்பதற்கு முன்பு அவருடைய கணவரிடம் வனிதாவை விட்டுவிட கூடாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கி இருந்தாராம். வனிதாவின் தந்தையான விஜயகுமாரும் அதற்கு சத்தியம் செய்து கொடுத்து இருந்தாராம். அது போல வனிதாவிடமும் உனக்கு தனியாக வீடு தருகிறோம் நீ அங்கேயே இருந்து விடு வெளியே எங்கேயும் செல்ல வேண்டாம் என்று கூறி சத்தியம் கேட்டதற்கு வனிதா செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். ஆனால் வனிதாவின் அம்மா இறந்த அடுத்த நொடியே அவருடைய தந்தை அவரை அவருடைய அம்மாவை பார்க்க விடாமல் தடுத்து விட்டாராம். எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் உள்ளே சென்று இவருடைய அம்மாவின் முகத்தை பார்க்க கூடாது என்று சொல்லிவிட்டார்களாம். அப்போது நடிகர் ரஜினிகாந்த் சொல்லித்தான் கடைசியில் வனிதாவை அவருடைய அம்மாவை பார்ப்பதற்கு அனுமதி கொடுத்தார்களாம்.

அந்தப் படத்தின் கதை

அந்தப் படத்தின் கதை

அதுமட்டுமல்லாமல் வனிதாவின் தந்தையின் இன்னொரு மகனான அருண் விஜய் உடன் இவர் பேசுவாரா? என்று பலரும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அதற்கு அருண் விஜயை நான் அண்ணா என்று தான் கூப்பிடுவேன். அவருக்கு அம்மா இறப்பதற்கு முன்பு வரைக்கும் நான் தான் டிசைனராக இருந்தேன். எந்த டைமும் என்னிடம் பேசுவார் .பணம் எல்லாம் நான் அனுப்பி இருக்கிறேன். ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் பேச வேண்டும் என்று நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர் என்னிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டார். அவர் சமீபத்தில் நடித்த யானை திரைப்படத்தின் கதை கூட எங்கள் வீட்டின் கதை தான். அதைத்தான் அப்படியே எடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அதுபோல வனிதாவின் அம்மா இறக்கும் தருவாயில் உடல் நிலையில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு விட்டாராம். அது அவர் மது போதைக்கு அடிமை ஆவதற்கு காரணம் அவருக்கு அதிகமான மன அழுத்தம் தான் என்று கூறி இருக்கிறார். அம்மாவிடம் கடைசி காலத்தில் யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்யும் நிலைமைக்கு அவர் தன்னை அறியாமலே வந்து விட்டாராம். அவர் கையில் எந்த ஒரு பேப்பரை கொடுத்து இருந்தாலும் கூட அதில் கையெழுத்து போட்டு இருப்பார். அப்படித்தான் அவர் நடந்து கொண்டிருந்தார் என்று அம்மாவை பற்றி கண்கலங்க பேசியிருக்கிறார். அதுபோல அவருடைய தங்கையான ஸ்ரீ பிரியா எப்போதும் இவர் பாப்பா என்று தான் செல்லமாக கூப்பிடுவாராம். இவருக்கும் இவருடைய அம்மாவுக்கும் ரொம்பவே செல்லமான பிள்ளை ஸ்ரீ பிரியா தானாம். தன்னுடைய குடும்பத்தோடு இப்போது வனிதா இல்லை என்றாலும் அவருடைய குடும்பத்தை பற்றி இவர் பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து இவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+