அசீம், விக்ரமன் பற்றி உண்மையை லைவில் உளறிய அமுதவாணன்.. மொத்த பிரச்சனைக்கும் காரணம் இதுதானா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் மற்றும் அசீம் கேரக்டர் பற்றி பேசிய அமுதவாணன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு அமுதவாணன் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து விக்ரமனோடு அதிகமாக சண்டையில் ஈடுபட்ட காரணத்தை பற்றி ரசிகர்களின் கேள்விக்கு அமுதவாணன் பதில் கூறியிருக்கிறார்.
யார் என்ன சொன்னாலும் அசீமுடைய கேரக்டர் இதுதான் என்று அசீமுடைய உண்மை குணத்தை பற்றி ரசிகர்களோடு அமுதவாணன் பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி அமுதவாணன் கூறிய கருத்து பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

முதல் லைவ் வீடியோ
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியில் இருந்த 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறிய அமுதவாணன் முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு சில நாட்கள் கழிந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் கேரக்டர் பற்றியும் அமுதவாணன் ரசிகர்களோடு பேசி இருக்கிறார். அதில் ஆரம்பத்தில் விக்ரமனுக்கும் எனக்கும் அதிகமாக சண்டை வந்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் சண்டை போட்டாலும் சிறிது நேரம் கழித்து மீண்டும் யார் மீது தப்பு என்பதை பேசி சமாதானம் ஆகி இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் சண்டை
அதுமட்டுமல்லாமல் எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் வெளியேயும் இதுதான் நிலைமையாக இருக்கிறது. ஒரு நல்ல நண்பரோடு என்னால் தொடர்ந்து நட்பாகவே இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் நன்றாக தொடங்கி பின்பு ஒரு பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டு கடைசியில் முடிவில் நல்ல நட்பை அவர்களும் உணர்ந்து விடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் பிக் பாஸ் வீட்டிற்கும் நடந்தது ஆரம்பத்தில் நன்றாக தொடங்கி பின்பு எனக்கும் விக்ரமனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் தொடங்கியது. ஆனால் பின்பு நாங்கள் இருவரும் பேசிய பிறகு அது சரி செய்யப்பட்டது.

விக்ரமனின் அழுகை
நான் வெளியே வரும்போது கூட எனக்காக விக்ரமன் அழுது இருந்தார். இது எங்களுடைய நட்புக்கு கிடைத்த வெற்றி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் எனக்கு போன் செய்து நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சம்பாதித்த ஒரு உண்மையான நட்பு என்று கூறினார். அதுபோல அசீம் பார்ப்பதற்கு தான் கரடு முரடாக இருப்பார். ஆனால் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக செய்வார். அசீம் கோபப்படும் போது அவர் செய்வதை பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவி என்று வந்துவிட்டால் அவரை மிஞ்ச யாரும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

வதந்திக்கு விளக்கம்
பிக் பாஸ் வீட்டிற்குள் அமுதவாணனும் ஜனனியையும் நட்பாக பழகுவதையும் பற்றி அமுதவாணன் பல இடங்களில் ஜனனி எனக்கு ஒரு சகோதரி மாதிரி தான் வேறு எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தாலும் அவரைப் பற்றி பலர் பொதுவெளியில் குறிப்பாக youtube சேனல்களிலும் வீடியோக்களிலும் தவறாக சித்தரித்து வந்திருக்கின்றனர். அதுக்கு முதல் முறையாக அமுதவாணன் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். எது உண்மை என்று தெரியாமல் சிலர் தங்களுக்கு வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அடுத்தவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஆனாலும் எனக்கு ரசிகர்களும் நண்பர்களும் அதிகமானோர் ஆதரவு தந்து என்னை நம்புகின்றனர். அது எனக்கு போதும் என்று கூறி இருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications