கத்தி பேசும் தனம்.. பாய்ந்து வரும் மணிகண்டன்..உண்மையில் நடந்தது இதுதான்!குறும்படத்தில் உடைந்த குட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் தனம் மற்றும் மணிகண்டன் இடையே இன்று காரசாரமான சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சண்டையில் யார் மீது தப்பு என்பது 24 மணி நேர எபிசோடில் தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த நடிப்பு தேவையா? என்று திட்டி வருகிறார்கள்.

ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் இதில் யார் மீது தப்பு என்பது புரிந்து கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது, தனம் மற்றும் மணிகண்டன் சண்டையை வைத்து தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.

தொடரும் சண்டைகள்

தொடரும் சண்டைகள்

எதிர்பாராததை எதிர்பார்ப்பார்கள் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அதை தற்போது ஆறாவது சீசனிலும் நிரூபித்திருக்கின்றனர். ஆரம்பம் முதலே பிக் பாஸ் ஆறாவது சீசன் அடிக்கடி சண்டைகள் வேற லெவலில் பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறது. ஏற்கனவே பொம்மை டாஸ்க் நடந்த பிரச்சனை மற்றும் சண்டையின் காரணமாகத்தான் கடந்த வாரம் ஷெரீனா ரசிகர்களின் மதிப்பை இழந்து வெளியே செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று பேக்கரி டாஸ்க்கில் தனம் மற்றும் மணிகண்டன் சண்டை வேற லெவலில் வைரலாகி வருகிறது.

ஜஸ்ட் மிஸ் ஆன பாக்ஸ்

ஜஸ்ட் மிஸ் ஆன பாக்ஸ்

பிக் பாஸ் அனுப்பிய பொருள்களை போட்டியாளர்கள் பெற்று விடுவதில் ஆர்வமாக இருக்கும் போது, தனம் மணிகண்டனின் முன்பு நிற்கிறார். அப்போது மணிகண்டன் தன்னுடைய கையில் அந்த பொருளை பிடிக்கலாம் என இருக்கும்போது தனலட்சுமி பாக்ஸை கையில் எடுக்கவும், மணிகண்டன் அவருடைய கையில் இருந்து பிடுங்குகிறார். அப்போது தனலட்சுமி கீழே விழுகிறார். தனலட்சுமி கையில் இருப்பதை ஒரு கையால் பிடுங்கிக் கொண்டே ஒரு கையால் தனலட்சுமியை தூக்குகிறார். அதே நேரத்தில் அதற்கிடையில் ராம் வந்து மணிகண்டன் கையில் இருக்கும் பாக்ஸை பிடுங்க பார்க்கிறார். அவரிடம் இருந்து மணிகண்டன் அந்த பாக்ஸை காப்பாற்ற அங்கும் இங்கும் ஆட்டுகிறார்.

கலவரத்திலும் அட்வைஸ் கொடுத்த அசீம்

கலவரத்திலும் அட்வைஸ் கொடுத்த அசீம்

கீழே விழுந்த தனலட்சுமி தன்னை தள்ளிவிட்டு கீழே விழுந்த பிறகு என்னுடைய கையில் இருந்து பாக்ஸை பிடுங்கிக் கொண்டு மணிகண்டன் போய்விட்டார் என்று கத்தி கூச்சல் போடுகிறார். அதைத் தொடர்ந்து மணிகண்டனை வாடா போடா என அழைக்க அவரும் டென்ஷன் ஆகி கத்திக் கொண்டிருக்கிறார் .ஆனால் இவர்களுடைய சண்டையில் அசீம், "என்னைப்போல நீயும் ஆகிவிடாதே" என்று மணிகண்டனுக்கு வார்னிங் கொடுக்கிறார். நீ நிதானமாக நடந்து கொள் என்று அந்த நேரத்திலும் அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் .

செம பஞ்சாயத்து இருக்கு

செம பஞ்சாயத்து இருக்கு

அதுபோல தனலட்சுமி இடமும் பொறுமையாக இரு இப்படி கத்தி பேசாதே கேமரா பார்த்துகிட்டு இருக்கு என்று எச்சரிக்கை செய்கிறார். ஆனால் கேமராவை பார்த்ததும் தனலட்சுமி அந்தப் பக்கமாக திரும்பி என்னை அவன் கீழே தள்ளி என் கையில் இருந்ததை பிடுங்கி விட்டான் என்று மீண்டும் மீண்டும் ஆக்ரோஷமாக கத்துகிறார். ஆயிஷா சமாதானப்படுத்த வந்து இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று விலகிக் கொள்கிறார். மணிகண்டனை மகேஸ்வரி ஏடிகே போன்றோர் பிடித்து இழுத்து வைத்திருந்தாலும், மைனா நந்தினி தனலட்சுமி இடம் வந்து அவன் கொடுத்து விட்டான். இதை இதோடு முடித்துவிடு என்று கூறினார். ஆனால் தனலட்சுமி முடியவே முடியாது என்று மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார் .இந்த வீடியோவை நெட்டிசன்கள் தற்போது வெளியீட்டு இதில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை குறித்து விவாதம் செய்து வருகின்றனர். இதனால் இந்த வாரம் இதை வைத்து வாத்தியார் பாடம் புகட்ட காத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+