சீரியல் இயக்குனர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத காரணத்தை கூறிய கேப்ரில்லா..நிறைய பேருக்கு பிரச்சனை!?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் இயக்குனர் திடீரென இறந்து விட்டார்.
அவருடைய மறைவிற்கு பலர் வருத்தத்தை தெரிவித்து வந்த நிலையில் கெப்ரில்லா சமூக வலைத்தளத்தில் வருத்தத்தை தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
ரசிகர்கள் அதிகமானோர் தற்போது தொடர்ந்து கேட்டு வரும் கேள்விகளுக்கு முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஹிட் சீரியலில் இயக்குனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த காத்து கருப்பு, தாயுமானவன், கல்யாண முதல் காதல் வரை, மௌனராகம் சீசன் 1,நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன் மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என பல ஹிட் தொடர்களை இயக்கியவர் தான் தாய் செல்வம் அவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளி திரைகளும் கூட எஸ் ஜே சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

நடிகர்களில் உதவி
தாய் செல்வம் திடீர் மரணம் சீரியல் ரசிகர்களையும் சின்னத்திரை பிரபலங்களையும் பெரிய அளவில் பாதித்துவிட்டது. ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வந்த சீரியல் களின் இயக்குனர் திடீர் மரணத்தால் பலரும் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டு மனம் உருகி கதறி அழுத்திருந்தனர். குறிப்பாக மிர்ச்சி செந்தில் வானத்தைப்போல சீரியல் நடிகர் ஸ்ரீ அவருடைய மனைவி இன்னும் ஒரு சில நடிகர்கள் சேர்ந்து இயக்குனர் தாய் செல்வத்தின் குழந்தைகளின் படிப்பு செலவை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறி இருந்தனர்.

பலருடைய கேள்விகள்
சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவரோடு இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அவருடைய மறைவிற்கு தங்களுடைய வருத்தத்தையும் தெரிவித்து வந்தனர். இதற்கு முன்பு இவர் இயக்கிய சீரியல்களில் நடித்த நடிகர்கள் கூட இவருடைய பழைய நினைவுகளை சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்து இருந்தனர். அதே நேரத்தில் இவர் தற்போது இயக்கி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லா இவருடைய மறைவிற்கு எந்த ஒரு பதிவும் வெளியிடவில்லையே என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அதை குறித்து தற்போது அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இரங்கல் பதிவு வெளியிடாத காரணம்
அதில் அவர் இறந்து விட்டார் என்ற பதிவை போடுவது எனக்கு தப்பாக இருந்தது. அதனால் தான் அதை நான் பண்ணவில்லை. நான் அவரது இரங்கல் பதிவை நீக்கி விட்டேன். என்னுடைய இரங்கலை நான் தனிப்பட்ட முறையில் தான் தெரிவித்தேன். அதை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் அது நிறைய பேருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இது மிகவும் சென்சிடிவ் ஆன விஷயம் என்பதால் அதைப் பற்றி பெரிதும் பேச வேண்டாம். அதை ஒரு பிரச்சினையாக மாற்றி விட வேண்டாம். என்னுடைய இரங்கலை நான் அவர்கள் குடும்பத்திற்கு தனியாக சொல்லி விடுவேன். அதை சமூக வலைத்தளத்தில் அனைவரும் செய்கிறார்கள் என்று நானும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரது இரங்கல் செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்வது எனக்கு தவறாக தோன்றியது அதனால் தான் நான் செய்யவில்லை .

புரிந்து கொள்ளுங்கள்
இருந்தாலும் அவருக்காக இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தான் தோன்றியது. இது கண்டிப்பாக மிகவும் துன்பமான செய்தி தான். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதை சொல்வதற்கு தான் நான் வந்தேன். கண்டிப்பாக நாங்கள் அவரை மிஸ் பண்ணுவோம். இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இந்த கடிதமான நேரத்தில் மற்ற விஷயங்களை பெரிது படுத்த வேண்டாம். எங்கள் நிலையை புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications