இந்த வேலை என்கிட்ட ஆகாது.. இனி இதுதான் என் முடிவு.. ராபர்ட்க்கு வார்னிங் கொடுத்த ரட்சிதாவின் கணவர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரட்சிதா மகாலட்சுமியிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி ரட்சிதாவின் கணவர் முதல் முறையாக வார்னிங் கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து ரட்சிதா என்னுடைய கிரஷ் என்று அவரிடம் காதல் லீலைகளில் ஈடுபட்டு வரும் ராபர்ட் மாஸ்டர் பற்றி சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ரட்சிதாவின் கணவருடைய கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிரிவோம் சந்திப்போமில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் மூலமாக அறிமுகமானார் ரட்சிதா .அந்த சீரியலில் அவரோடு கதாநாயகனாக நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வரும் ரட்சிதா அவருடைய கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக்காக பல வருடங்களாக காத்திருந்த ரட்சிதா இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார்.

ராபர்ட் மாஸ்டரின் கிரஷ்
இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளராக அறிமுகமான ராபர்ட் மாஸ்டர் ஆரம்பத்திலேயே ரட்சிதா என்னுடைய கிரஷ் என்று கூறி அவரை தனக்கு ரொம்பவே பிடித்து விட்டது என்றும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் இவருடன் எனக்கு நட்பு தொடர வேண்டும் என்றும் கருத்துக்கூறி வந்தார் .அது மட்டுமல்லாமல் ரட்சிதாவை செல்லமாக மூக்குத்தி என்று அழைத்து தான் வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளும் நிகழ்வு பற்றிய ரட்சிதாவின் கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது கூட தெரியாதா
ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி ரட்சிதாவின் ரசிகர்கள் அதிகமானோர் சமூக வலைத்தளத்தில் ராபர்ட் மாஸ்டரை திட்டி வருகின்றனர். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் பேசுவதை பார்க்கும் போது எனக்கு காமெடியாக தான் இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து அவர் இந்த மாதிரியே பண்ணிக் கொண்டிருக்கும் போது கடுப்பாகிறது. ரட்சிதா தன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஒரு லைவ் நிகழ்ச்சியில் ரட்சிதாவிடம் இவர் இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்யும் விதமாக பேசிக் கொண்டிருப்பதால் அவருடைய வாழ்க்கையும் கெடும் என்பதை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டாமா? என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

வெளியே வந்து பார்த்தால் தெரியும்
அதுமட்டுமல்லாமல் ரட்சிதா நேரடியாக நீங்கள் செய்வது சரியில்லை என்று கூறிய பிறகும், மீண்டும் மீண்டும் அவரை தொந்தரவு செய்யும் விதமாகவே இவர் நடந்து வருகிறார். ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை அண்ணன் என்று கூப்பிட்ட பிறகும் அப்போ எனக்கு கையில் முத்தம் கொடு என்று பேசுவது கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாததாக இருக்கிறது. அவர் வெளியே வந்து பார்த்தால் தான் தெரியும் அவர் எவ்வளவு கேவலமான செயலை அங்கே செய்து கொண்டிருக்கிறார் என்று. அது மட்டுமல்லாமல் ரட்சிதாவுக்கும் எனக்கும் ஏற்பட்டிருப்பது சின்ன மனஸ்தாபம் தான் அதை இருவரும் மனம் விட்டு பேசினாலே சரி செய்து விடலாம். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கும் இருக்கும் போட்டியாளர்களும் ராபர்ட் மாஸ்டருக்கு சாதகமாக அவர் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் உசுப்பேத்தி விடுவது பார்க்கும்போது கோவமாகவும், கடுப்பாகவும் இருக்கிறது என்று தினேஷ் கருத்து கூறியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications