கொஞ்சம் அப்செட் ஆக இருக்கிறார்.. காரணம் இதுதான்!? பானுப்ரியாவின் தற்போதைய நிலை பற்றி கூறிய சகோதரி
சில படங்களில் அவர் எதிர்பார்த்த கேரக்டர் அமையவில்லை என பானுப்ரியா அப்செட் ஆக இருப்பதாக அவருடைய சகோதரி சத்திய பிரியா கூறி இருக்கிறார்.
சென்னை: நடிகை பானுப்பிரியாவின் சகோதரி எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த சத்திய பிரியா தான்.
நடிகை சத்யபிரியா தன்னுடைய சகோதரியான பானுப்பிரியாவின் தற்போதைய நிலை குறித்து சமீபத்தில் பேசி இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாத நடிகை பானுப்பிரியா சில திரைப்படங்களில் அவருடைய கேரக்டர் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. சிலர் அவரை ஏமாற்றி விட்டார்கள் என்று சத்யபிரியா கூறியிருக்கிறார்.

நடிப்பு அனுபவம் வேறு
இந்த நிலையை சமீபத்தில் ஒரு ஒரு பேட்டியில் தான் நடிகை சத்யபிரியா தன்னுடைய சகோதரி பானுப்ரியாவை பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார். அதில் என்னுடைய அக்காவின் நடிப்புக்கு முன்னால் நான் எப்போதும் ஜீரோ தான். அவர் திரைப்பட வாழ்க்கையில் நான் அவரிடம் இதை செய்யலாமா? அதை செய்யலாமா? என்று தான் கேட்பேன். அதிகமாக பேசிக்கொள்ள மாட்டோம். ஆனால் வீட்டிற்குள் சகஜமாக நாங்கள் நன்றாக பேசிக் கொள்வோம். நடிப்பு விஷயத்தில் எப்போதும் எங்களுக்குள் ஒரு டிஸ்டன்ஸ் இருந்து கொண்டு தான் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

கதையே மாறி விடுகிறது
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை பானுப்ரியா நடித்த ஒரு சில திரைப்படங்களில் அவருடைய கேரக்டரை அவர் எதிர்பார்த்த அளவில் இல்லை. அவரிடம் சொன்ன கதை வேறு ஆனால் அவர் நடித்தது வேறு. அதை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இவர் இப்படி நடித்திருக்கிறார் என்று கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த நடிப்பு கேரக்டர் அங்கே எங்களுக்கு கிடைக்கவில்லை. படம் முடிவடைந்த பிறகு தான் எங்களுடைய நடிப்பு பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. அதுபோலத்தான் பானுப்பிரியாவிற்கும் தற்போது நடந்தது. அதனால் அவர் ரொம்ப அப்செட் ஆக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

புத்தகம் படிப்பு
நடிகை பானுப்ரியா எந்த சமூக வலைத்தள அக்கவுண்டுகளும் யூஸ் பண்ணுவது கிடையாது. நான் யூஸ் பண்ண சொன்னால் கூட அவர் இதுவெல்லாம் இனி எதற்கு என்று கேட்கிறார். அது மட்டுமல்லாமல் நான் இப்போதும் ஆக்டிவாக சமூக வலைதளத்தில் இருக்கிறேன். அதனால் நான் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவேன். அப்போது பலர் அக்காவை பற்றி என்னிடம் கேட்பார்கள். அதை நான் அக்காவிடம் காட்டுவேன் அதற்கு புன்னகையை மட்டும் தான் வெளியிடுவார். அவருக்கு சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் இல்லை. வீட்டில் புத்தகம் படித்து கொண்டே இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

பானுப்பிரியாவின் வருத்தம்
ஏற்கனவே நடிகை பானுப்பிரியாவும் தனக்கு சமீபத்தில் தன்னுடைய கணவரின் இறப்புக்குப் பிறகு சீக்கிரத்தில் எல்லாமே மறந்து போய் விடுகிறது. அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் கூட நான் சில சங்கடமான சூழ்நிலைகளை சந்தித்து இருக்கிறேன் என்று பேசி இருந்த நிலையில், தற்போது அவருடைய சகோதரியும் அதைத்தான் கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் திரைப்பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் நடிகை பானுப்பிரியா தனது திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications