ஜெயம் படத்தில் நடித்த நடிகை சதா! என்ன செய்கிறார் தெரியுமா? குவியும் பாராட்டுகள்
சென்னை: ஜெயம் படத்தில் நடித்த நடிகை சதாவுக்கு 41 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அது போல் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் தற்போது சதா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சினிமா துறை, சீரியல், மீடியா துறை என எதுவாக இருந்தாலும் அதில் நடிக்கவோ நிகழ்ச்சியை தொகுக்கவோ வருவோர் ஆரம்பத்தில் டல்லடித்து பிறகு பீக்கில் செல்வார்கள். இன்னும் சிலர் பீக்கில் இருந்து விட்டு பிறகு டல்லடித்துவிடுவார்கள்.

அப்படி தனது முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்றால் அவர் சதா. ஜெயம் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அன்னியன் படத்தில் அக்ரஹாரத்து பெண்ணாக நடித்திருந்தார். இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் சதாப் முகமது சயீத் என்பதாகும். இதைத்தான் சுருக்கி சதா என வைக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் செட்டிலாவதற்கு முன்பு இவரது பெற்றோர் கர்நாடகா மாநிலம் பெல்காமில் இருந்து இடம்பெயர்ந்தனர். சதா இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் 1 இல் ஜட்ஜாக வந்திருந்தார்.
அது போல் தெலுங்கிலும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருக்கிறார். மதகஜராஜா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக நடித்த படமும் இதுதான். 2015 ஆம் ஆண்டு எலி எனும் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
டார்ச்லைட் எனும் படத்தில் விலை மாதுவாக நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சதாவுக்கு 41 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், திருமணம் செய்தால் சுதந்திரம் பறிபோகும் . அதனால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் விரும்பியதைச் செய்கிறேன். திருமணம் செய்து கொண்டால் இது முடியுமா என்பது தெரியவில்லை என்றார்.
தற்போது அவர் வைல்ட் லைஃப் போட்டோகிராபராக உள்ளார். ஒரு காட்டில் வாழும் பல்வேறு நிறங்களை கொண்ட பறவைகளை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த படம் அற்புதமாக இருக்கிறது. அவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்த வீடியோவில் இதுவரை 199 புலிகளை வீடியோ எடுத்த தான் 200ஆவது புலியை பார்த்ததாக ஒரு வீடியோ எடுத்து போட்டுள்ளார். அவர் எந்த கேமராவில் போட்டோ எடுத்தார் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் இருந்து காணாமல் போனாலும் தற்போது விலங்குகள் மீதுள்ள ஆர்வத்தால் சதா சிறந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து வருகிறார். இவர் எதிரி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையடுத்து பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடுதல், சிறப்பு தோற்றம் என இருந்த சதா, தற்போது ரசிகர்களின் பாராட்டுக்குள்ளாகியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications