For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கூல் படிக்கும்போதே "அப்பாவையே பொய் சொல்ல கூறி கோபிநாத்” எழுதிய கடிதம்.. என்னென்ன சொல்லி இருக்காரு!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் நடுநிலையான தீர்ப்பு வழங்கி ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு மிக்க தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத் சிறுவயதில் செய்த ஒரு செயல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஹாஸ்டலில் படிக்கும் போது தன்னுடைய அப்பாவிற்காக எழுதிய கடிதத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் எப்படி தலைவன் அப்போவே எப்படி பிளான் பண்ணி இருக்காரு என கலாய்த்து வருகிறார்கள்.

நிஜத்தில் பிக் பாஸுக்குள் இதுதான் நடக்கிறது.. நான் அப்படி நடந்துக்க காரணம்.. உண்மையை உளறிய குயின்சிநிஜத்தில் பிக் பாஸுக்குள் இதுதான் நடக்கிறது.. நான் அப்படி நடந்துக்க காரணம்.. உண்மையை உளறிய குயின்சி

நடுநிலையான கருத்து

நடுநிலையான கருத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினர்களும் விரும்பிப் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுநிலை தவறாமல் கோபிநாத் தீர்ப்பு சொல்லி வருகிறார் என்ற பெயர் அவருக்கு ரசிகர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் பல நேரங்களில் இவர் பேசும் மோட்டிவேஷனல் வீடியோக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் வைரலாகி விடுகிறது. கோபிநாத்தின் சரளமான தமிழ் பேச்சும் தெளிவான உச்சரிப்பும் கணீர் என்ற குறளில் பேசுவதும் தான் இவருடைய பிளஸ் பாயிண்ட் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

கேரக்டருக்கு தகுந்த நடிப்பு

கேரக்டருக்கு தகுந்த நடிப்பு

கோபிநாத் முதல் முதலாக ஜெயா டிவி, ஏடிடிவி போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்பு விஜய் டிவியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு முதல் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கி இருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்போது பல திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார் .முதலில் 2009 ஆம் ஆண்டு வெளியான ஜெய் நடித்த வாமனன் என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தோணி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற திரைப்படங்களில் தன்னுடைய கேரக்டருக்கு தகுந்த கேரக்டரில் இவர் நடித்து வருகிறார்.

அப்பாவுக்கு எழுதிய கடிதம்

அப்பாவுக்கு எழுதிய கடிதம்

இந்த நிலையில் இவர் பலருக்கும் இப்போது அட்வைஸ் கூறி வந்தாலும் தன்னுடைய குழந்தை பருவத்தில் அதுவும் படிக்கும் காலத்தில் இவர், இவருடைய அப்பாவுக்கு எழுதிய லெட்டர் ஒன்றே அவரே இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த கடிதத்தை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அந்த கடிதத்தில், "அன்புள்ள அப்பா அவர்களுக்கு மகன் எழுதுவது, அப்பா நீங்கள் வந்து போனது முதல் எனக்கு வீட்டின் ஞாபகம் பயங்கரமாக வருகிறது. உங்கள் லட்டர் கண்டு டைமிங் ரூமிலேயே அழுதேன். எப்போதும் அழுது கொண்டே உள்ளேன். நைட் எல்லாம் தூக்கம் வரவில்லை. அழுது கொண்டே உள்ளேன். அம்மாவையும் உங்களையும் பார்க்க வேண்டும் என்று நினைப்பாய் வந்து கொண்டு இருக்கிறது. அதனால் 10-ம் தேதி வெள்ளி அன்று அவசியம் சின்ன வார்டனுக்கு லெட்டர் எழுதுங்கள். நான் அங்கு வந்து இருந்தால் தான் எனக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இங்கு உங்கள் நினைப்பாகவே உள்ளது. வீட்டிற்கு வந்து விட்டால் நன்றாகவே படிப்பேன். அவசியம் லெட்டர் போடுங்கப்பா, அக்கா கல்யாணம் என்று காரணம் எழுதவும் என்று அந்த லெட்டரில் எழுதி இருக்கிறார்.

இது வேற லெவல் உருட்டு

இது வேற லெவல் உருட்டு

அப்பாவையே அக்காவின் கல்யாணத்திற்கு அழைத்து செல்வதாக ஏமாற்ற சொல்லி இவர் உருட்டுன உருட்டை பார்த்து நெட்டிசன்கள் பதறிப் போய் இருக்கின்றனர். நாம இவரை எப்படியோ நினைத்திருக்கிறோம். ஆனால் இவர் இவ்வளவு சேட்டை பிடித்தவரா? என்று கலாய்த்தாலும் இவர் நம்ம இனம் டா என்று பலர் கொண்டாடி வருகிறார்கள். எப்போதுமே ஜாலியாக மோட்டிவேஷன் கொடுக்கும் இவர் தன்னுடைய சிறு வயது குறும்புகளை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். இந்த இந்த கடிதத்தை பார்த்து லைக்குகள் குவிந்து வருகிறது.

English summary
An act of Gopinath, who is an influential anchor among the fans, has been widely shared by fans on social media as a child, giving a neutral verdict on Vijay TV's show Neeya Naana.Seeing the letter he wrote for his father when he was studying in the hostel, many fans are wondering how Thalaivan could have planned it back then.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X