வருங்கால கணவரை குறித்து சந்திரலேகா கதாநாயகியின் உருக்கமான பதிவு.. ஆரம்பத்தில் தெரியாமல் போய்விட்டதாம்
சென்னை: சன் டிவியில் எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த சந்திரலேகா சீரியலின் கதாநாயகி ஸ்வேதா தற்போது வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
முதல் முறையாக தன்னுடைய வருங்கால கணவரை குறித்து ஸ்வேதா உருக்கமான பல தகவல்களை கூறி இருக்கிறார்.

நெடுந்தொடர்
சீரியலுக்கு பெயர் போன சன் டிவி சீரியலில் கடந்த எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சீரியலில் கதாநாயகியாகவே தொடர்ந்து வந்த ஸ்வேதா என்பதை விடவும் சந்திரலேகா சீரியலில் சந்திரா என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ, ஜி எஸ் சந்தியா பந்தேகர் தனுஷ் ,உட்பட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த சீரியலை சரிகம நிறுவனம் தயாரித்து வந்தது. பொதுவாக சரிகம நிறுவனம் என்றாலே அதில் தொடர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பாகும் நீண்ட தொடர்கள்தான் தயாரித்து வரும் அந்த வகையில் சந்திரலேகா சீரியலும் இருந்து வந்தது.

ரசிகர்களை கவர்ந்த சந்திரா
சந்திரலேகா சீரியல் சந்திராவாக நடித்து வந்த ஸ்வேதா சென்னையில் உள்ள வி எம் ஆர் கல்லூரியில் பொருளியல் பற்றி படித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்திருக்கிறார். அதற்குப் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் .முதல் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த பிறகு அடுத்த திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வள்ளுவன் வாசுகி சத்யா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

ஜெயம் ரவி திரைப்படத்தில் நடிப்பு
முதல் திரைப்படம் அனைவருக்கும் எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுத்து விடாது அந்த மாதிரி தான் ஸ்வேதாவின் திரைப்பட வாழ்க்கையும் முதல் படம் தோல்வியை கொடுத்து விட்டது. அதற்குப் பிறகு இவருக்கு அதிகமாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், துணை கதாநாயகியாக நடித்து வந்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் கடைசியில் நடித்திருப்பார் .அதற்கு பிறகு இவர் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியலில் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு சந்திரலேகா, நிலா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

உருக்கமான பதிவு
தற்போது சந்திரலேகா சீரியல் முடிவடைந்ததும் சந்திராவை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வேதா தற்போது தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, "நான் பைத்தியமாக இருக்கும்போது நீங்கள்தான் பொறுப்பு, நான் அழும்போதும், சோகமாக இருக்கும் போதும், அழகாக இருக்கும் போதும், என் வாழ்க்கையில் இருந்து கீழே இறங்கும் போதும், என்னுடைய மனம் உடையும் போதும், மகிழ்ச்சியாக இருக்கும் போதும், பொறாமை கொள்ளும் போதும், பைத்தியமாக இருக்கும் போதும் ,சிரிக்கும் போதும், அசிங்கமாக இருக்கும் போதும், எப்போதுமே நீங்கள் தான் பொறுப்பு. அடிப்படையில் ஒரு மனிதனாக இருப்பதற்கு இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்கு தேவை உங்களால் வெளிப்படையாக நான் மனிதனாக இருக்கிறேன். என் குழந்தை பருவத்தில் இருந்தே என் வாழ்க்கையில் ஒரு அதிசயத்திற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டேன். நான் உங்களை முதலில் சந்தித்தபோது நீங்கள் அந்த அதிசயமாக இருக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. "என்று பதிவிட்டு இருக்கிறார் .இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications