எதிர்நீச்சல்: தாரா பாப்பா கேட்ட ஒரே கேள்வியால் ஆடிப் போன சக்தி.. இது என்ன புது கதையா இருக்கு..!?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியின் குழந்தையாக இருக்கும் தாரா பாப்பா கேட்ட கேள்வியால் சக்தி நடுங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் தான் அனைவரும் கேரக்டராக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் சீரியலை தாண்டியும் இவர்கள் செய்யும் செயல்கள் காமெடியாக இருக்கின்றது.

விறுவிறுப்பான சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் அதிகமாக கவர்ந்திருக்கிறது. ஆரம்ப கால கட்டத்தில் இருந்த அதே எதிர்பார்ப்பும், விறுவிறுப்பும் இந்த சீரியலுக்கு தினமும் இருந்து வருவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.9.30மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த எதிர்நீச்சல் சீரியல் அதற்கு முன்பாக ஒளிபரப்ப மாட்டார்களா? என்று பலர் கேள்விகளை வைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்த சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் நகரப்புறங்களையும், கிராமப்புறங்களையும் அதிகமாக கவர்ந்திருக்கிறது.

புரிஞ்சிக்கவே முடியலையே
ரசிகர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவின் காரணமாகவே இந்த வாரத்தில் இந்த சீரியல் இரண்டாவது இடத்தை டிஆர்பி யில் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் அமைதியாக இருந்த அப்பத்தா முதல் முறையாக தன்னுடைய பெயரை மட்டும் அல்லாமல் தான் இந்த வீட்டில் எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும் கூறியிருக்கிறார். அதோடு வீட்டை விட்டு கிளம்பிய ஜனனியை மீண்டும் வீட்டிற்குள்ளே கூட்டி வந்து மாஸ்காட்டி இருக்கிறார் .சக்தியோடு ஜனனி சேர்ந்து வாழ்வதற்காக வந்திருக்கிறதா? அல்லது என்ன காரணத்திற்காக வந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாத விதமாக இருந்து வருகிறது.

ஜனனியின் பிடிவாதம்
அப்பத்தாவை தொடர்ந்து இப்போது ஜனனியும் கையில் புத்தகத்தோடு படித்த வண்ணமாகவே இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பகல் நேரத்தில் ஒவ்வொரு கம்பெனியாக வேலை தேடி கொண்டிருக்கிறார். தனக்கு திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இவர் உதவுகிறேன் என்று சொன்ன ஒரு சிலருடைய உதவிகளை கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டு தன்னுடைய திறமைக்கு தகுந்த இடத்தில் தான் வேலை செய்வேன் என்று விடாப்பிடியாக இருந்து வருகிறார். வீட்டில் உள்ளவர்கள் என்னதான் அவமானம் செய்தாலும் அவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பதால், இனி என்ன மாதிரி முடிவெடுக்கப் போகிறார் என புரிந்து கொள்ளாமல் ரசிகர்கள் தவிக்கிறார்கள்.

ரீல்ஸ் வீடியோ
சக்தி, ஜனனியை வெளியேற்றி விட வேண்டும் என்று ஆவேசமாக போனவரிடம் ஜனனி ஒரு சில மாதங்கள் மட்டும்தான் இந்த வீட்டில் இருப்பதாகவும் அதற்குப் பிறகு விவாகரத்து செய்வதற்கு தனக்கு முழு சம்மதம் என்று கூறி சக்தியை அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். அதற்குப் பிறகு சக்தி ஜனனியின் விஷயத்தில் எந்த ஒரு கேள்வியோ கேட்காமல் இருக்கிறார். சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில், இந்த சீரியல் நடிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் போது எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் பல நேரங்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஹரிப்ரியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் .

குழந்தையின் குறும்பு கேள்வி
அந்த வீடியோவில் தாரா பாப்பா நந்தினியிடம் பில்டிங்க்கு ஏன் பில்டிங் என்று பெயர் வைத்தார்கள் என தெரியுமா? என கேட்க, தெரியவில்லை நீயே சொல்லு என நந்தினி கேட்க, அதை கட்டும்போது டிங் டிங் என சத்தம் கேட்குமா.. அதான் பில்டிங் என பெயர் வைத்தாங்கலாம் என சொல்லும்போது அருகில் இருந்த சக்தி வலிப்பு வந்தது போல நடிக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்து இந்த ஜோக்கை கேட்டு சக்திக்கு நரம்பு பிரச்சனை வந்துருச்சி என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள் .ஏற்கனவே இந்த சீரியலில் அதிகமாக ரசிகர்கள் உச்சரிக்கும் பெயராக நந்தினி இருந்து வருகிறார். பலர் மனது விட்டு நந்தினியின் செயல்களால் தான் சிரித்து வருவதாகவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நந்தினியை போலவே அவருடைய மகளும் இருக்கிறார் என்று பலர் பாராட்டி வருகிறார்கள். நந்தினி ஆக நடிப்பது ஹரிப்பிரியா என்பது கூட பலருக்கு மறந்து போய்விட்டது போல, அதனாலே இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் நந்தினி என்று தான் அழைத்து வருகிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications