அசீம் பற்றி நல்ல விதமாக பேசிய ரச்சிதா...காரணம் இதுதானா? ஆனால் அதை மட்டும் மறக்கவில்லையாம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா முதல் முறையாக விஜய் டிவியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கத்தில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது அசீம் மற்றும் ரச்சிதா இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வந்த நிலையில் தற்போது ரச்சிதா பேசியது அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது.
ரச்சிதா முதல்முறையாக அசீமிடம் தனக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தையும் ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

லைவில் ரசிகர்கள் கேள்விக்கு பதில்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 94-வது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் கடந்த வாரம் ரச்சிதா மகாலட்சுமி வெளியேற்றப்பட்டார் அதற்கு பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் முதல்முறையாக ரசிகர்களோடு லைவில் பேசி தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து முதல் முறையாக இன்று விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரின் சமூக வலைதள பக்கத்தில் லைவில் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

பிடித்த விஷயம்
அதில் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் பற்றி கருத்து கேட்டுக் கொண்டு இருக்க, அசீம் ஒரு நல்ல பேச்சாளர் தன்னுடைய பேச்சின் மூலமாகவே பல வெற்றிகளையும் அடைந்து விடுபவர். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய பேச்சால் அதில் சாதித்து விடுபவர் என்று பேசியிருக்கிறார் .அது மட்டும் அல்லாமல் சில விஷயங்களை அவர் தவிர்திருக்கிறால் நன்றாக இருக்கும் அதற்கும் அந்த பேச்சு தான் காரணம். அதை மட்டும் அவர் தவித்திருந்தால் அவர் ரொம்பவே நல்ல மனிதர் தான் அதை யாராலும் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ரச்சிதாவின் விளக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது அசீம் ஒவ்வொரு வாரமும் ரச்சிதாவை நாமினேஷன் செய்யும் போது ரச்சிதா வெளியே போல்டாகவும் திமிராகவும் இருப்பார் ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அமைதியாகவே இருக்கிறார். எதற்கெடுத்தாலும் சிரித்த முகமாக இவர் கோபம் வராமல் இருப்பதை பார்க்கும்போது எனக்கு பொய்யாக நடித்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அதனால் அவருடைய உண்மையான முகத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறி தான் நாமினேஷன் செய்து வந்தார்..ஆனால் அதற்கு ரச்சிதா ஒவ்வொரு முறையும் மறுப்பு தெரிவித்து வந்தார் ஆனாலும் நீங்கள் என்னை பார்த்தது பத்து வருடங்களுக்கு முந்தைய ரச்சிதா ஆனால் அதற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது என்று தன்னுடைய வெளியேற்றத்தின் அன்று கூட அசீமிடம் தன்னை பற்றி புரிய வைத்து முயற்சி செய்தார்.

அதை மறக்கவில்லையாம்
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அதே கடைசி நாளில் கூட கமல் இந்த சீசனின் டைட்டில் ஜெயிக்க தகுதி இல்லாத நபர் யார் என்று கேட்டதற்கு ரச்சிதா அசீமின் பெயரை தான் கூறியிருந்தார். காரணம் அசீம் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அடுத்தவர்களை தரைக்குறைவாக பேசி அவர்களுடைய கேரக்டரை ஸ்பாயில் பண்ணுகிற மாதிரியும், அவர்கள் எதிர்த்து பேச முடியாத மாதிரி பேசி விடுகிறார். இந்த மாதிரி கேரக்டர் இருக்கும் நபருக்கு டைட்டில் கொடுத்தால் இது தப்பான முன் உதாரணமாக மாறிவிடும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா என்ன கூறுவார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது ரச்சிதா மீண்டும் ,அசீம் வாய் பேச்சில் மட்டும்தான் வல்லவர் என்று சொல்லும் விதமாக கூறிவிட்டாரே என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அசீம் உடன் தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, நினைவுகள் எல்லாம் நான் மறக்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications