4 அண்ணன்களுக்காக சினேகன் செய்த காரியம்.. கன்னிகா பகிர்ந்த வீடியோவால் நெகிழ்ந்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் சினேகன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவர் எழுதிய பாடல்கள். ஆனால் அவருடைய வாழ்க்கையை கொஞ்சம் நெருக்கமாக பார்த்தவர்களுக்கு குடும்பத்தின் மீது சினேகனுக்கு இருக்கும் பாசம், எவ்வளவு பெரியது என்பது தெரியும். தாயை இழந்த பிறகு குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சினேகன் தன்னுடைய 4 அண்ணன்கள் ஒரே இடத்தில் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். இது குறித்த வீடியோக்களை சினேகன் மனைவி கன்னிகா தன்னோட சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

சினேகன் தன்னுடைய அண்ணன்களின் திருமணம் உள்ளிட்ட குடும்ப பொறுப்புகளை முடித்த பிறகுதான் தன்னுடைய திருமணம் குறித்து யோசித்ததாக ஏற்கனவே பேட்டிகளில் பேசியிருக்கிறார். தான் லேட்டாக கல்யாணம் செய்தது அந்த நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்ட பிறகுதான் அவரைப் பற்றி பலருக்கும் தெரிய தொடங்கியது.

Snehan Kannika

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்று கூட இவரை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய தந்தை வந்த பிறகு இவர் மீது மரியாதை பலருக்கும் கூடியது. அதற்கு பிறகு கமல்ஹாசன் மீது இருந்த அன்பினால் அவருடைய கட்சியிலும் இணைந்து விட்டார். கட்சி, நடிப்பு, பாடல் ஆசிரியர் என பல பணிகள் இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தின் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்த சினேகன் சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று அங்கிருக்கும் உறவினர்களுடன் வீடியோக்களை சினேகனின் மனைவி வெளியிட்டு இருக்கிறார்.

காதல் தம்பதி

சினேகனை போலவே அவருடைய மனைவி கன்னிகாவும் உறவுகளை நேசித்து, அவர்களுடன் நட்பாக பழகி வருகிறார். அதனால் தன்னுடைய உறவினர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கும் வீடியோக்களையும் கன்னிகா அடிக்கடி பகிர்ந்து வருவார். அந்த வரிசையில் தற்போது பகிர்ந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Snehan Kannika

பிரம்மாண்ட வீடு

அந்த வீடியோவில், சினேகனின் அண்ணன்களுக்கும் வீடு கட்டியாச்சு என்ற கேப்ஷன் உடன் கன்னிகா அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி அண்ணன் குடும்பத்தினருடன் மாலையும் கழுத்துமாக கிரகப்பிரவேஷ வேலைகளை செய்து இருக்கின்றனர். இந்த வீடியோ வெளியான பிறகு பலரும் சினேகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+