எம்மா இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? நியாயமே இல்லாமல் பேசும் மாமியார்.. செம பதிலடி கொடுத்த கோபிநாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தற்போது எங்களுக்குள் சண்டையை மூட்டாதே மாமியார் மருமகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மாமியார் ,மருமகள் சண்டைக்கு ஆண் தான் காரணம் என்று தலைப்பின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு மாமியார் தன்னுடைய மருமகள் மகனுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எடுத்த பாடத்தை பார்த்து அவருக்கு கோபிநாத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

சமூக அவலங்களை வெளிக்காட்டும் நீயா நானா

சமூக அவலங்களை வெளிக்காட்டும் நீயா நானா

நீயா நானா நிகழ்ச்சியில் பல நேரங்களில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்று வரும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் இருதரப்பு நியாயங்களும் பொறுமையாக கேட்டு அதற்கு சரியான தீர்வுகளை பேசி வருவதால் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பா மகள் பாசத்தை பற்றி இவர் பேசிய விதம் ரசிகர்களை கவர்ந்தது. அது மட்டும் அல்லாமல் இதற்கு முன்பு வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகையாளர்களின் கவலைகளும், விவாதங்களும் ரசிகர்களின் மத்தியில் விறுவிறுப்பையும் பல்வேறு தகவல்களையும் கூறி இருந்தது. அதுபோல தற்போது மாமியார் மருமகள் சண்டைக்கு காரணமே கணவர்தான் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இட்லி வேண்டாம் தோசை தான் வேணும்

இட்லி வேண்டாம் தோசை தான் வேணும்

இதில் இந்த வாரம் நாளை ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு மனைவி தன்னுடைய குமுறல்களை கொட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம், அவரும் அவருடைய கணவரும் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் தானாம். காலை வேளையில் இட்லிக்கு அடுப்பில் மாவு ஊற்றி வைத்திருந்தாலும் அவருடைய கணவர் தோசை தான் வேண்டுமென்று கேட்பாராம். அப்படி கேட்டதும் இட்லி குண்டாவை கீழே தூக்கி வைத்து விட்டு அவருக்கு தோசையை ஊத்தி அவருடைய மாமியார் கொடுத்து விடுவாராம். ஆனால் அதுபோல தன்னால் செய்ய முடியாது. ஏற்கனவே நான் இட்லி ஊத்தி வைத்து விட்டேன். உங்களுக்காக மறுபடியும் தோசை ஊத்த முடியாது என்று சொன்னால் அவருடைய மாமியாருக்கு திருப்தி அடையாதான்.

பிரச்சனைக்கு காரணமே இவர்தான்

பிரச்சனைக்கு காரணமே இவர்தான்

என் மகன் தோசை கேட்பது பெருசா? நீ செய்வது பெருசா? செஞ்சுட்டு போ என்று சொல்வாராம் .சட்டுபுட்டுன்னு ஒரு தோசை ஊத்ததுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு அவருடைய மாமியார் மிரட்டுவாராம். அதை கேட்ட கோபிநாத் அந்த பெண்ணின் கணவரிடம் நீங்க வைக்கிற ஹை டிமாண்டினால் உங்க உங்களுடைய அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை வருகிறது என்று கேட்கிறார். அதற்கு அந்த கணவர் எனக்கு டேஸ்டியா வச்சு கொடுங்க உங்களுக்குள்ள நீங்க என்ன வேணா செஞ்சுக்கோங்க என சொல்கிறாராம். அதை மடக்கி கேட்ட கோபிநாத் நீங்க சொல்றதுனால தான் எங்களுக்குள் பிரச்சனை வருகிறது என்கிறார்கள் என்று சொன்னதும், பிரச்சனை வருகிறது என்றால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ள தீர்த்துக்கோங்க என்று அந்த கணவர் அசால்டாக பேசுகிறார். அதை கேட்டு கடுப்பான கோபிநாத் பிரச்சனையே உங்களால் தானே வருது என்று சொல்கிறார்.

தப்பு யார் மீது

தப்பு யார் மீது

அதற்கு அந்தப் பெண்ணின் மாமியார் அவன் கேட்கிற மாதிரி வச்சு கொடு என்று சொல்கிறேன். அவ்வளவுதான் என்று சொன்னதும், அந்தப் பெண்ணின் கணவர் அதாவது பையனை விட்டுக் கொடுக்காமல் அம்மா பேசிடுவாங்க அவ்வளவுதான் என்று அவரும் பேசுகிறார். அதே நேரத்தில் கோபிநாத் அதுதான் தெரிகிறதே, அதனால் தான் நீங்கள் இந்த ஆட்டம் ஆடுறீங்க என்று பல்பு கொடுக்கிறார் .அடுத்து அந்த மாமியார் பையன் என்ன பண்ணுனா? என்ன தப்பு ?என்று கேட்கிறார். அதற்கு கோபிநாத் உங்களுக்கு தெரியல உங்க பையன் தப்பு பண்ணுகிறார் என்று, சொன்னதும் பெற்று வளர்த்த எங்களுக்கு தெரியாதா ?எங்க பையன் தப்பு வழக்குறேனா ,இல்ல நேத்து வந்த பொண்ணு தப்பு பண்றதா? என்று சொன்னதும் கோபிநாத் நான் என்ன சொல்றேன்னா ,நேத்து வந்த பொண்ணு தப்பு பண்றது என்று நீங்க சொல்றீங்கன்னா நீங்க பெற்று வளர்ந்து அங்க ஒன்னு உட்கார்ந்திருக்கு அதை கேட்டா என்ன? என்று கேள்வி கேட்கிறார்.

இவ்வளவுதான் தூங்கும் நேரம்

இவ்வளவுதான் தூங்கும் நேரம்

அந்த மாமியார் அடுத்ததாக, என் பையன் ஆபீசுக்கு போகணும், லேட் ஆனா யார் பொறுப்பு ?என்று கேட்கிறார் .அதற்கு கோபிநாத் உங்க மருமகள் ஆபீசுக்கு லேட் ஆனா? என்று கேட்கிறார். அதற்கு நான் அவளையும் திட்டுகிறேன், காலையில் கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சு வேலையை பார்த்தால் என்ன என்று சொல்கிறார். அதற்கு கோபிநாத் எம்மா, உங்க மருமகள் எத்தனை மணிக்கு தூங்குகிறார் என்று கேட்கிறார் .அதற்கு அவருடைய மருமகள் 11 மணி ஆகும் என்று கூறுகிறார் காலையில் எத்தனை மணிக்கு எழுந்து வேலை செய்கிறார் என்று கேட்டபோது நான்கு மணிக்கு என்று சொல்கிறார்.

இது எந்த ஊரு நியாயம்

இது எந்த ஊரு நியாயம்

மாமியாரிடம் உங்க மருமகள் தினமும் 11 மணிக்கு தூங்கி காலை 4:00 மணிக்கு எழுந்து வேலைக்கும் போகணும், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இருக்கணும், அவங்களும் மனுஷி தானே என்று சொல்கிறார் .அதற்கு அந்த மாமியார் ஆமா அதை முந்தின நாளே பிளான் செய்ய வேண்டும். நாளை காலை என்ன செய்ய வேண்டும் என்பதை என்று பாடம் எடுக்கிறார். அதற்கு கோபிநாத் நீங்க மருமகள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவா சொல்லிட்டீங்க, உங்க மகன் என்ன செய்யணும்? என்று கேட்டதும், அவன் காலையில் எழுந்து குளிச்சிட்டு, சாப்பிட்டு அவன் துணியை அயன் பண்ணி போட்டுகிட்டு அவன் பாட்டுக்கு கிளம்பி போயிடனும் என்று மகனைக் குறித்து பெருமையாக பேசுகிறார் .இதைக் கேட்ட கோபிநாத் உங்க வீட்டுக்காரர் என்ன சாப்பிடுவார் என்று கேட்கிறார் .அதற்கு அந்த மாமியார் பெருமையாக என் வீட்டுக்காரருக்கு வயசாகி போயிட்டு என்ன கொடுத்தாலும் சாப்பிட்டு போயிருவார் என்று சொல்கிறார். உடனே கோபிநாத் பாத்தீங்களா?உங்களுக்கு ஒரு நியாயம், உங்க மருமகளுக்கு ஒரு நியமா ?உங்க புருஷனுக்கு ஒரு நியாயம் ,உங்க மகனுக்கு ஒரு நியாயமா ?என்று கேள்விகளால் அந்த பெண்ணிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+