எதிர்நீச்சல்: மாலை மாற்றிய மணப்பெண் குந்தவை.. நடுங்கியபடியே தாலியை எடுக்கும் சக்தி.. அடுத்தது என்ன?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குந்தவைக்கும் சக்திக்கும் திருமணம் நடைபெறுமா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
எதிர்நீச்சல் எனும் சீரியல் சன் டிவியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் போக போக ரசிகர்கள் கூடினர். குணசேகரனுக்கு 3 தம்பிக்கள், இவர்களுக்கென தனித்தனி குடும்பங்கள் உள்ளன.
ஆனால் குணசேகரன் தனது தாயை தவிர வேறு எந்த பெண்ணுக்கு மரியாதை கொடுக்க மாட்டார். வீட்டுக்காரியாக கூட மனைவியை மதிக்க மாட்டார். இவரா போலவே இவரது தம்பிகளும் மனைவிகளை தங்கள் இச்சைக்கு பயன்படுத்த மட்டுமே ஆசையாக இருப்பார்கள்.

வேலைக்காரர்கள்
அந்த வேலை முடிந்துவிட்டால் பிறகு வேலைக்காரர்களை விட மோசமாகவே நடத்துவார்கள். இந்த நிலையில் குணசேகரனின் 4ஆவது தம்பி சக்திக்கு ஜனனி என்ற சென்னை பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் மற்ற மருமகள்களை போல ஜனனியையும் கொத்தடிமையாக நடத்தவே குணசேகரன் நினைக்கிறார்.

ஜனனி
ஆனால் ஜனனியோ படித்துவிட்டு வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்க முடியாது என கூறி வெளியே வேலைக்கு செல்கிறார். இதனால் தினமும் ஒரு சண்டை, பிறகு சக்தியை தூண்டிவிட்டு இருவருக்கும் குணசேகரன் சண்டை மூட்டி வருகிறார். அவர் திட்டமிட்டபடியே சக்தியும் ஜனனியும் சண்டையிட்டு பிரிந்து விடுகிறார்கள்.

வெளிநாடு
ஜனனி விரைவில் வெளிநாடு செல்வதற்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் தனது பால்ய சினேகிதனின் மகள் என கூறி டான்சர் பிரேமாவை அவருடைய வீட்டிற்கு குணசேகரன் அழைத்து வருகிறார். பிரேமாவின் கதாபாத்திரத்தின் பெயர் குந்தவை. இவர் சாதாரணமானவர் கிடையாது. இவரது தந்தை சிங்கப்பூரில் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் ஒருவர்.

தம்பிக்கு மறுமணம்
இந்த ஒரே பெண்ணை தன் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தால் மொத்த சொத்துக்களும் தமக்கே வந்து சேரும் என நினைக்கிறார் குணசேகரன். வெளிநாட்டில் படித்து வளர்ந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை விடாமல் இருக்கும் குந்தவையை சக்தியுடன் நெருங்கி பழகுகிறார். அந்த பெண்ணுடன் பழகவும் மனமில்லாமல் அண்ணனை எதிர்க்கவும் தைரியமில்லாமல் கோழையாகவே இருக்கிறார் சக்தி.

குந்தவை
இந்த நிலையில்தான் திடீரென குந்தவையை வீட்டைவிட்டு குணசேகரன் வெளியேற்றி விடுகிறார். இதனால் ஜனனியின் வாழ்க்கை தப்பித்தது என அந்த வீட்டு மற்ற மருமகள்கள் மகிழ்ச்சி பொங்குகிறார்கள். இந்த நேரத்தில் குணசேகரன் எல்லாரையும் அழைத்து கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கோயிலுக்கு அழைத்து வருகிறார்.

செல்போன்கள்
அங்கு வைத்து எல்லாருடைய செல்போன்களை வாங்கி ஒரு பையில் போட்டுக் கொள்கிறார் குணசேகரன். ஏன் என கேட்டதற்கு இங்கு நடக்கும் ரகசியம் வெளியே போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே சிறிது நேரத்தில் குந்தவை மணப்பெண் அலங்காரத்தில் தனது தந்தையுடன் கோயிலுக்கு வருகிறார்.

சக்திக்கு மறுமணம்
அப்போதுதான் அவருக்கும் சக்திக்கும் திருமணம் நடைபெற போவது அனைவருக்கும் தெரியவருகிறது. இதை குணசேகரன் ரகசியமாக பாதுகாத்து வந்துள்ளார். விருந்தாளியாக வந்த பெண்ணை மருமகளாக்கக் கூடாது என்பதற்காக குந்தவையை வெளியே அனுப்பிவிட்டு தற்போது தன் வீட்டு மருமகளாக ஆக்க போவதாக தெரிவிக்கிறார்.

புதுவேட்டி
மாப்பிள்ளை சக்தியை புதுவேட்டி அணிந்து வருமாறு குணசேகரன் கூறுகிறார். அதை கொஞ்சமும் எதிர்க்காத சக்தி துணியை வாங்கிக் கொண்டு செல்கிறார். இத்துடன் இந்த எபிசோடு முடிகிறது. இன்றைய ப்ரோமோவில் இருவரும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள். அப்போது சக்தியை தாலி எடுத்து கட்டுமாறு குணசேகரன் அசட்டுகிறார். சக்தியின் கை நடுங்குகிறது. அந்த வீட்டு மருமகள்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். ஒரு பக்கம் ஜனனி காரில் வரும் காட்சி வெளியாகிறது. அத்துடன் புரோமோ முடிகிறது. கல்யாணம் நடக்கிறதா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

குந்தவை கழுத்தில் தாலி கட்டுவாரா?
ஒரு வேளை சக்தியே இந்த திருமணத்தை தடுத்துவிடுவாரா இல்லை ஜனனியின் அத்தை மகள் வந்து நிறுத்துவாரா, இல்லாவிட்டால் குணசேகரனின் பாட்டி ஏதாவது செய்வாரா, போலீஸ் வருவார்களா என்ற கோணத்தில் ரசிகர்கள் கதை எழுதி வருகிறார்கள். அது போல் சிலர் அந்த வீட்டு மருமகள்களை திட்டுகிறார்கள். உங்கள் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள ஜனனியின் வாழ்க்கை நாசமாவதை பார்த்துக் கொண்டு இருப்பதா? குந்தவையிடம் சக்திக்கு திருமணம் நடந்த விஷயங்களை சொல்லலாமே என்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications