கதாநாயகிக்காக மாற்றப்பட்ட சன் டிவி சீரியல் கதை.. சீரியலிலும் கர்ப்பம்! எதிர்பார்க்காத மாற்றங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் கதாநாயகிக்காக மொத்த கதையும் மாற்றப்பட்டு இருக்கிறது. இது ரசிகர்களின் மத்தியில் வியப்பை கொடுத்து இருக்கிறது.
நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருக்கும் நடிகைக்காகவே சீரியலிலும் அவர் கர்ப்பமாக இருப்பதாக கதை மாற்றப்பட்டிருக்கிறது. அது சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் தான்.

கதாநாயகியால் பிரபலம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு பெற்று விடும். அந்த வகையில் தற்போது செவ்வந்தி சீரியலும் இடம்பிடித்திருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்தாலும், இந்த சீரியலின் கதாநாயகிக்கு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே அவர் இந்த சீரியலில் நடித்து வருகிறார் என்கிற பெயர் அடிக்கடி அடிபட்ட பிறகு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பலர் தொடர்ந்து பார்க்க தொடங்கி விட்டனர்.

கதாநாயகன் திடீர் மரணம்
செவ்வந்தி சீரியலில் திவ்யா ஸ்ரீதர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராகவ் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் 12.30 க்கு ஒளிபரப்பாகி வருகிறது. செவ்வந்தி கேரக்டரில் திவ்யாவும் ,ராகவ் மனோ கேரக்டரிலும் நடித்து வந்தனர். இந்த நிலையில் கதாநாயகனாக ராகவ் திடீரென இறந்து போய்விடுவது போல இந்த சீரியலில் கதை அமைந்திருக்கிறது. அதற்குப் பிறகு பல்வேறு போராட்டங்களை சந்திக்கும் செவ்வந்தி தன்னுடைய குடும்பத்தையும் குழந்தைகளையும் இனி எப்படி சமாளிக்க போகிறார் என்று ஒளிபரப்பாகி வருகிறது.

சீரியலிலும் கர்ப்பம்
இந்த நிலையில் இந்த சீரியல் இப்போது 121 எபிசோடுகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீரியலில் கதாநாயகி ஆன திவ்யா ஸ்ரீதரும் கர்ப்பமாக இருப்பது போல பிரமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே திவ்யஸ்ரீதர் கர்ப்பமாக இருப்பதால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிடுவாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தனக்கு வேறு வருமானம் இல்லை. இந்த சீரியலில் மட்டும் தான் தான் நடித்து வருவதால் இந்த சீரியலில் இருந்து என்னால் விலக முடியாது என்று ஏற்கனவே திவ்யா கூறியிருந்தார். அதே நிலையில் இப்போது இவருக்காகவே இந்த சீரியலில் இவர்கள் கர்ப்பமாக இருப்பது போல பிரமோ வெளியேயிருக்கிறது.

கதையில் திடீர் திருப்பம்
சீரியல் அணியினரின் திடீர் கதை மாற்றத்தால் சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திவ்யா ஸ்ரீதரின் ரசிகர்களும் அதிகமாக சந்தோஷம் அடைந்து இருக்கின்றனர். இனி எப்படியும் திவ்யா இந்த சீரியலில் இருந்து விலக மாட்டார் என்று அவர்கள் கூறி வருகிறார்கள். கணவர் இறந்து பிறகு திடீரென செவ்வந்தி கர்ப்பமாக இருக்கும் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இனி எப்படி குடும்பத்தையும் இந்த ஊரையும் செவ்வந்தி சமாளிக்க போகிறார் என்பதுதான் சீரியலின் விறுவிறுப்பான அடுத்த கட்டமாக இருக்கப் போகிறது என்று சீரியல் அணியினர் கூறியிருக்கின்றனர்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications