“திருநெல்வேலிக்காரர்” தமிழா தமிழா ஆவுடையப்பன் மனைவி யார் தெரியுமா? திரைப்படங்களை மிஞ்சும் காதல் கதை!
சென்னை: தொகுப்பாளர் ஆவுடையப்பன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன்பு இவர் பத்திரிக்கையாளராக பலருக்கும் பரிச்சயம் அடைந்திருந்தாலும் இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல எபிசோடுகளை சுவாரசியமாக நடத்திக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் கதையை சொல்லி பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.
அதாவது பல வருடங்களாக காதலித்து வந்த பெண்ணையே தன்னுடைய மனைவியாக மாற்றிய ஆவுடையப்பன் தன்னுடைய காதல் கதையில் ஏற்பட்ட சுவாரசியங்கள் மற்றும் கஷ்டங்கள் குறித்து அந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.

அந்த வகையில் ஆவுடையப்பனின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்பது தானாம். அவரும் அவருடைய மனைவி சங்கீதாவும் ஒன்றாக படித்திருக்கிறார்கள். ஆனால் ஆவுடையப்பன் வீட்டில் இருந்து கல்லூரிக்கு போய் படித்து விட்டு வந்து விடுவாராம். ஆனால் அவருடைய மனைவி கல்லூரியில் தங்கி படித்திருக்கிறார். இதனால் வாரத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவாராம்.
அந்த ஒரு முறை ஊருக்கு வரும் சங்கீதாவை பார்ப்பதற்காக ஆவுடையப்பன் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பாராம். ஒவ்வொரு முறையும் அவருடைய மனைவி ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ தான் வருவாராம். அவருக்கு காலேஜிலிருந்து வருவதற்கு எது ஏதுவாக இருக்கிறதோ அதில் வந்து விடுவாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த முறை சங்கீதா பஸ்ஸில் தான் வருவார் அல்லது இந்த முறை சங்கீதா ட்ரெயினில் தான் வருவார் என்று சரியாக யூகித்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வாரமும் ஆவுடையப்பன் போய் நின்று விடுவாராம்.

காரணம் அப்போதெல்லாம் சங்கீதாவிடம் தன்னுடைய காதலை ஆவுடையுப்பன் சொல்லவே இல்லையாம். ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்த ஆவுடையப்பன் மூன்று வருடங்களுக்கு பிறகு தான் தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதும் சங்கீதா அவரிடம் தன்னுடைய சம்மதத்தை சொல்லவில்லையாம். அப்போது சங்கீதாவிற்கு நாம இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறோம், வீட்டில் நம்முடைய காதல் தெரிந்தால் சரிப்பட்டு வராது என்று தெரிந்து காதலை சொல்லவில்லையாம்.
ஆனாலும் ஆவுடையப்பன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்ததாம். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் சங்கீதா காலேஜிலிருந்து வீட்டுக்கு வரும்போது பஸ் ஸ்டாண்டில் ஆவுடையப்பன் நிற்கிறாரா என்று பார்த்துக்கொண்டே வருவாராம். ஆனால் சரியாக அந்த இடத்தில் ஆவுடையப்பன் நிற்கும்போது சங்கீதாவிற்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி எல்லாம் பறக்குமாம். அப்படியே கல்லூரி வாழ்க்கையும் முடிந்த பிறகு ஒரு முறை சங்கீதா தன்னுடைய காதலை ஆவுடையப்பனிடம் சொல்லிவிடலாம் என்று அவருக்கு போன் போட்டு இருக்கிறார்.
ஆனால் அவருடைய போன் ரீச் ஆகவில்லையாம். அதுபோல ஆவுடையப்பன் வீட்டைத் தாண்டி தான் சங்கீதா வீட்டிற்கு போக வேண்டுமாம். ஆவுடையப்பன் போனை எடுக்காததால் அது பற்றியே சங்கீதா யோசித்துக் கொண்டு வீட்டிற்கு போய் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது ஆவுடையப்பன் வீட்டில் சிலர் கூட்டமாக நின்று இருக்கிறார்கள், அதனால் சங்கீதா கடந்து போய்விட்டாராம். பிறகு தான் அவருக்கு ஆவுடையப்பனின் அம்மா இறந்து போய்விட்டார் என்று தெரிந்திருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் தான் ஆவுடையப்பன் தன்னுடைய அம்மா இறந்த துக்கத்தில் கையில் இருந்த போனை உடைத்து இருக்கிறார் அதற்கு பிறகு தான் சங்கீதா அவருக்கு போன் ட்ரை பண்ணி இருக்கிறார். பிறகு ஒரு வாரம் கழித்து போன் சரி செய்து கையில் கிடைத்திருக்கிறது. அப்போது மீண்டும் சங்கீதா போன் பண்ணி இருக்கிறார். அப்போதுதான் தன்னுடைய காதலை சங்கீதா சொல்லி இருந்தாராம்.
நான் பிப்ரவரி 17ஆம் தேதி உனக்கு போன் பண்ணினேன் காதலை சொல்வதற்காக தான் என்று சங்கீதா சொல்ல அதைக் கேட்டு ஆவுடையப்பன் கண் கலங்கி இருந்தாராம். காரணம் தன்னுடைய அம்மா தன்னை விட்டுப் போய்விட்டார் என்று கவலையில் இருந்தபோது எனக்கு அம்மாவாக கிடைத்த உறவு இது என்று சங்கீதாவை குறித்து சந்தோஷப்பட்டு இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இப்போது அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் இவர்களுடைய காதல் கதையைக் கேட்ட பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications